Friday, August 24, 2018

பக்திஉணர்வும் ஹிந்து சமுதாயமும் --5-ஸ்ரீ ராமானுஜர்

          ஸ்ரீ ராமானுஜர்  இன்றிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு  முன்  தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில்  பிறந்தார். அவர் வாழ்ந்த காலம் விக்ரமை ஸம்வந்த் 1074இல் இருந்து 1194 வரை . அதன்படி வருடம் 1017இல் இருந்து 1137 வரை . அவர் பிறப்பால் அந்தணர். ஆனால் அவர் சமுதாயத்தின் பின்தங்கிய தாழ்த்தப்பட்டவர்களின்  துன்பங்களை இதயத்தால் உணர்ந்தார். அவர்களிடம் இரக்கம் கொண்டார்.
அவர்கள் நிலைகண்டு அனுதாபம் அடைந்தார். அந்தக் காலத்திய  அனுஷ்டான முறைகளில் முடிந்த அளவிற்கு சீர்திருத்தங்கள் கொண்டுவந்தார். அவர் அந்தணர்கள் முதல் கலப்புமண சாண்டாளர்களுக்கும்  மிக உயர்ந்த ஆன்மீக உபாஸனையை ஆரம்பித்து அனைவருக்கும் பக்தியின்
நுழைவாயிலைத் திறந்து விட்டார். இதனால் அவர் பல எதிர்ப்புகளை எதிர்கொள்ளவேண்டிவந்தது.ஆனால் அவர் எவ்வித அச்சமும் இன்றி தன ஆன்மீகப் பணிகளைத் தொடர்ந்தார். அவர் சமுதாயத்தின் ஜாதி ஏற்பாடுகளை முறைகளை முற்றிலும் ஏற்கவில்லை. ஸ்ரீ ராமானுஜர் முதுமையில் குளிக்கச் செல்லும்போது இரண்டு அந்தணர்களின் தோள்களில் கைவைத்துச் செல்வார்.
குளித்துவிட்டு வரும்போது இரண்டு  தோல்  விற்பவர் தாழ்ந்தஜாதிகளின் தோளில் கைகளைப்போட்டுவருவார்.
மக்கள் இதை எதிர்த்தால்  ராமானுஜர் முதலில் உங்கள்
மனத்தின் களங்கத்தைப் போக்குங்கள் என்பார்.
ஜாதிகள் கிடையாது  குணம் தான் நலத்திற்கு  காரணம் என்று கூறுவார். ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ ரங்கப்பட்டினத்தின் வடக்கில் மேல்கோட்டை என்ற பெயருள்ள புகழ்பெற்ற திருநாராயணன் பெருமாள் என்ற வைஷ்ணவ ஆலயத்தை
ஸூத்திரர்களினும்   தாழ்ந்த ஐந்தாம் ஜாதியினருக்குத் திறந்துவிட்டார். வருடம் 1099இல் இந்த ஆலயத்தை ஸ்ரீ ராமானுஜர் தான் கட்டுவித்தார் . அவர் அந்தணர்கள் அல்லாதவரையும் வைஷ்ணவர்கள் ஜாதி அடையாளங்களை
போடச்  செய்தார். வைஷ்ணவர்களின்  ஜாதி அடையாளங்களைப் போடச்செய்தார்.அதற்கு கட்டளை இட்டார்.மற்ற ஆலயப்  பிரவேஷங்களுக்கும் ஏற்பாடுசெய்தார்.
தாழ்ந்த ,அடைக்கலம் அற்ற மனிதர்களும்
தன்  பக்தி ,சமர்ப்பணம் மற்றும் ஞானம்  மூலம்
கடவுளை காணமுடியும் ,பெற முடியும் என்று
ராமானுஜர் சொல்வார்.  மனிதர்களின் அனைத்து நற்பணிகளிலும் ஆண்டவன் தானே உடன் இருக்கிறார்.
மனிதர்கள் நற்பணியாற்றினால் அவர்களின் ஜாதி முக்கியமல்ல. செயல்கள் தான் முக்கியத்துவம் பெறும் .
அவருடைய இந்த பரந்த மனப்பான்மை தான் சமுதாயத்தில் நல்ல உணர்வுகளையும் சகிப்புத்தன்மையையும் தோற்றுவித்தது.ஜாதி,இன  சம்பிரதாய வேறுபாட்டிற்கு அப்பாற்பட்ட  சமுதாய முறையை நிர்மாணிக்க முயற்சி செய்தார்.
ஸ்ரீ ராமானுஜர் அவருடைய காலத்தில் மிகப்பெரிய வித்துவான்.துணிச்சல் மிக்கவர். சமுதாய நோக்கில் தாராளமுள்ள தார்மீக வழிகாட்டி.  ஆதி சங்கராச்சாரியார் போன்று இவரும் காசி ,அயோத்தியா, பத்திரிநாத்,ஜெகந்நாதபுரி ,துவாரகை ,மு தலிய
ஸ்தலத்திற்கு பாரத புனித யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
அந்த புனிதஸ்தலங்களில் தன்  ஆன்மீக சமுதாயஎண்ணங்களையும் எடுத்துச் சென்றார்.
மனிதர்களை சமமாக ஏற்றுக்கொள்ளும் ராமானுஜரின் மனித நேய குணங்களை சுவாமி  விவேகானந்தர் மனதில் புகழ்ந்து பேசினார்.அவருடைய சீடர் பரம்பரையில் ஸ்ரீ ராகவாச்சாரியார் தோன்றினார்.இவருடைய சீடராக
காசியில் ராமானந்தர்  ஆனார்.
  சோழ  சாம்ராஜ்ஜியத்தில் ராமானுஜர் இருக்கும்போது ராமானுஜர் செல்லும் வழியில் ஒரு சூத்திர பெண் வந்தாள் .
ராமானுஜர் அவளை விலகிச்செல்லுமாறு கூறினார்.
அந்தப்பெண்  ராமாநுஜரிடம் கேட்டாள் ,-
நான் எந்த திக்கில் செல்வேன் ?எனக்கு நான்கு திக்குகளிலும்
சர்வ சக்தி வாய்ந்த இறைவனே  தென்படுகிறார்.எல்லா இடங்களிலும் சர்வேஸ்வரரின் புனிதம் சிதறிக் கிடைக்கிறது.
எனது புனிதமற்ற உடலைக்கொண்டு எங்கே செல்வேன்.
மகானே!துறவியே !தயவு செய்து எனக்கு  வழி  காட்டுங்கள்.
மிகப்பெரிய ஞானி ராமானுஜருக்கு எதுவுமே தோன்றவில்லை.சிலநேரம் அமைதியாக இருந்துவிட்டு சொன்னார்-"மகளே !என்னை மன்னித்துவிடுங்கள்.
நான் என் ஜாதியின் பொய்யான அகங்காரத்தில் மூழ்கியிருந்தேன் .என் ஞானத்தில் திரை போடப்பட்ட ஆணவம் இருந்தது. நீ என் கண்களைத் திறந்துவிட்டாய்.
என்னை விட நீ தான் கடவுளின் உண்மையான பக்தர்.
பின்னர் அந்த சூத்திரப்பெண்  ராமானுஜரின் சீடர் ஆகிவிட்டாள் . பின்னர் மஹத்துவம் நிறைந்த இடத்தைப் பெற்றாள் .  

No comments: