Thursday, August 30, 2018

பக்தியும் சமரச உணர்வும் -பக்தர்கள் -சந்த்

இடைக்காலத்தில்   பக்தர்கள்- சாதுக்கள்
என்ற வேறுபாடுகள் கிடையாது.
இன்று உருவ வழிபாடு செய்ப்பவர்களை பக்தர்கள் என்றும்
அருவ  வழிபாடு செய்பவர்களை  சாதுக்கள் என்றும்
கருதப்படுகிறார்கள்.  சூர்தாஸ் ,துளசிதாஸ் ,மீரா, ஆண்டாள்
போன்ற உருவழிபாடு செய்பவர்கள்  பக்தர்கள்.
கபீர் ,ரைதாஸ் ,நாம்தேவ் போன்ற அருவ  வழிபாடு செய்ப்பவர்கள்  சந்த அதாவது சாதுக்கள்.
    பாரத ஆன்மீகத்தில்  குருவின் மகத்துவம் அதிகம்.
குரு  இன்றி ஞானமும்  விவேகமும் பெறுவது இயலாதது.

ஹிந்துமதமும் சமுதாயஉணர்வும்.

 சாதுக்கள்   மூலம்
சமுதாய பண்பாட்டில்
புது விழிப்புணர்வுகள்.:--
     கடந்த  ஒரு  ஆயிரம் வருடங்களாக
 பாரதநாட்டில்  சாதுக்களின் பரம்பரை
சமுதாயத்தில் புதிய விழிப்புணர்ச்சி
 ஏற்படுத்தியது .  இதில் பக்தியின்
 மகத்துவத்துடன்  ஒதுக்கி வெறுக்கப்பட்ட
மக்களின்  சமுதாயத்தின் வேதனைகளையும்
அவர்களுடைய மனவிருப்பங்களையும்
வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
  பக்தியின்  பெயரால் ,மதத்தின் பெயரால்
சமுதாயத்தில் நடக்கும் போலிநாடகங்கள் ,
கொடுமைகள் ,தீய முறைகள் 
ஆகியவற்றிற்கு எதிராக
சாதுக்கள் உறுதியாக எதிர்த்தனர்.
மனிதர்களை வேறுபடுத்தும் பொய்யான
சுவற்றை இந்த சாதுக்கள் தகர்த்தெறிந்தனர்.
மனித மேலும் சமுதாய மதிப்புகளை ஸ்தாபிக்க
வலிமையூட்டினார்கள் .
சமத்துவம் , உறவுமுறைகள், அன்பு ,
கடவுளின் ஆட்சி அதிகாரம்  ஆகியவற்றை
விளக்கினார்கள் . இவர்கள் சாதனையாளர்கள்.
சீர்திருத்தவாதிகள். சாதுக்களின் குணம் மிகவும்
சாந்தமானது.
 

Wednesday, August 29, 2018

சமுதாயசமரச உணர்வும் நமது ஹிந்து மதமும்

சமுதாயசமரச உணர்வும் நமது  ஹிந்து மதமும்

      சர்வேஸ்வரன்  கடல் போன்றவன் .
 ஆனால் சாதுக்கள் மேகத்தைப் போன்றவர்கள்.  சமுத்திரத்தில் அதிக தண்ணீர் இருக்கிறது .
ஆனால்  தாகம்   தணியாது.
 விவசாயத்திற்கும் பயன்படாது .
ஆனால்  சமுத்திரத்தின் தண்ணீர்
மேகமாக மாறினால்  நன்நீராக  மாறிவிடுகிறது.
அப்பொழுது அகிலம் முழுவதும் வாழ
மழையாகப் பொழிகிறது.
 சாதுக்களின் மனம் வெண்ணெய் போன்றது
சிறிது  வெப்பம் பட்டாலே உருகிவிடும்.
யாராவது சிறிது வேதனைப் பட்டாலும்
அவர்கள்  மனம் உருகிவிடுகிறது.
 சாதுக்கள் அன்பு மழை  பொழிகிறார்கள்.
அறிவு மழை  பொழிகிறார்கள்  என்று துளஸீதாஸர் சொல்கிறார்.

 எந்தவித பயனும் எதிர்பார்க்காமல் கடவுளிடம் அன்புசெய்கிறவர்களும் ,எந்தவித  உலகியல் ஆசைகளும் இல்லாதவனே , சாது என்று கபீர்  சொல்கிறார்.
சாதுக்கள் ஒரு புனித ஸ்தலத்தைவிட  அதிகம் மகத்துவமுடையவர்கள்  என்று பக்தரான பலட்டு

சொல்கிறார்.  சாதுக்கள் நோக்கில் எல்லா
உயிரினங்களுமே  சமம்தான். அவர்களுக்கு தீங்கிழைப்பவர்களையும்  நல்லது செய்பவர்களையும்
சமமாகக் கருதுவர். எப்படி இரண்டுகைகளிலும் அள்ளிய மலர்கள் வடது -இடது அறியாதோ
அவ்வாறே சாதுக்கள் நல்லவர்கள்
கெட்டவர்கள் என்ற பேதம் பார்க்கமாட்டாட்கள்.







இறையருள் இன்பம் வேண்டும்

காலை வணக்கம்
கடவுள் வணக்கம் .
காக்கும் கடவுள் இன்றைய எண்ணங்கள்
வெளிப்பட எனக்களித்த அறிவு.
கடவுள் /பகவான்/குதா/
காக்கவேண்டும் என்றால்
கருணை பெறவேண்டும் என்றால்
கடவுள் உள்ளிருந்து ஆற்றல்
அளிக்க வேண்டும் என்றால்

ஆத்ம திருப்தி , ஆத்மசந்தோஸம்
அடைய வேண்டும் என்றால் ,
அகில உலகம் சுகம் பெற வேண்டும் என்றால்
தனிப்பட்ட வாழ்வில்
ஏகாந்தத்தில் மகிழ்ச்சி வேண்டும் என்றால்
வேண்டும் இறையருள் .

புராணங்கள் வரலாறு அறிந்தால் போதாது.
வள்ளுவர் சொன்னபடி
கசடு அறக் கற்று ,
அறிந்து உணர்ந்து அதன்படி
அறநெறி ,அன்பு நெறி,சத்திய நெறி ,
அஹிம்சை நெறி , நியாய நெறி
வாழவேண்டும்.
தசரதரும் அழுதே இறந்தான் .
,ராமரும் துன்பத்திலே
கிருஷ்ணருக்குத்
தன் தாய் அரவணைப்பு
கிட்டவில்லை.
அவர் மரணமும் பாவத்தின் தண்டனையே.
புவியில் நிலை பெற்றோர் ,
பக்தர்களே!
அனைத்தும் துறந்த பக்தர்களே.
புவியாளும் அரசர்களில்
ராமா கதை சொல்லுதல் என்றால்
ராம் கஹானி கஹ்னா என்றால்
துன்பக் கதை சொல்லுதல் என்பதே
மரபுத் தொடர்.
பக்த தியாகராஜர்,கபீர்,புத்தர்,
மத்வாச்சாரியார் ,சங்கராச்சாரியார்,ராமானுஜர் ,
ராமானந்தர் அனைவரும் இன்றும்

எடுத்துக்காட்டும் மகான்கள் என்றால் ,

ஜாதி மத பேதமில்லா சமுதாயம்
தொழில் தர்மம் அமைத்தவர்கள்.
ராமானந்தர் மதம் மாறிய இந்துக்களை
தாய்மத்தத்திற்கு மாற்றியவர்கள்.
சிவத்துள் ஹரியும் ஹரியுள் சிவனும்
காத்தலும் அளித்தலும் அழித்தலும்
இன்னலும் இன்பமும் அளிக்கும் நீதியும்
கோவணாண்டியின் மகிழ்ச்சியும்
கோடீஸ்வரனின் இன்னலும் கண்டுணர்ந்து
நேர்வழியில் ,சத்தியவழியில் சென்றே
சாதனைகள் புரியவேண்டும். இறையருள் இன்பம் வேண்டும்.

Tuesday, August 28, 2018

பாரத சாது பரம்பரை

   பவித்திரம் ,பரோபகாரம் ,நல்லொழுக்கம்  என்ற விரிவான பொருள் தான் சந்த்  / சாது.  சாது என்பதன்  பொருள்
சாது ,தியாகி , மஹாத்மா ,ஈஷ்வர்  பக்தர், தார்மீக புருஷர்  என்று பரந்து  விரிந்த  பொருள்.
   சாதுக்கள் உலகத்தின் கஷடங்களைப் பொறுத்துக்கொண்டு  மற்றவர்களின் கஷ்டங்களைப்  போக்குபவர்கள்  என்றுதான்  மக்கள் கருதுகிறார்கள்.
சாதுக்கள் புனிதமானவர்கள்.எல்லா இடங்களிலும் ,எப்பொழுதும்  எளிதாக சந்திக்க  முடியும். அவர்கள்
எல்லோரையும் சமமாகக்  கருதுபவர்கள்.
பக்தர்கள்  சாதுக்களை    சாஃஷாத்  கடவுளின் உருவமாகக்
கருதினர்.

  இந்த பூமியில் கடவுளின் அவதாரம்
எப்பொழுதாவது  ஒருமுறை தான்   எடுப்பார்.
ஆனால்  சாதுக்கள் தினந்தோறும்  அவதாரம் எடுப்பவர்கள்.
சாதுக்கள் சமுதாயத்தில் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருப்பார்கள். அவர்களின்  சுக துக்கங்களை
பங்குபோடுகின்றனர். ஒரு  எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழ தூண்டுகின்றனர்.   மேலும்  எல்லோருக்கும் அன்பின் செய்தியை அளிப்பார்கள்.



      

Monday, August 27, 2018

ராமானந்தர் --பக்தி உணர்வும் ஹிந்து சமுதாயமும்-9

  ராமானந்தரின்  ஆளுமை  தாராள  மனப்பான்மை.

சமுதாயத்தில் எவ்வித அனுகூலமற்ற தன்மையை  ஏற்கவில்லை.  அவர் மனிதநேயமிக்க சாது என்பதே  உண்மை.   பிறப்பின் அடிப்படையில்   உயர்வு -தாழ்வு என்ற எண்ணத்தை  கடுமையாக  எதிர்த்தார்.
  அவர்  சமுதாயத்திலும் மத நோக்கத்திலும்  ஒதுக்கப்பட்ட  மேலும்  சுரண்டப்பட்ட  மனிதர்களின்  முன்னேற்றத்திற்காக
நன்மைக்காக  உறுதி பூண்டார்.
   பக்தி ரசம்  எல்லாவித
ஏற்றத்தாழ்வையும் போக்கமுடியும்
என்று சொன்னார்.
  அந்த ஒரு கால கட்டத்தில்
குற்றங்களைத்தடுக்க ,
 மனிதநேயம்  வளர்க்க
சரியான நடவடிக்கைதான்.
ஆனால்  துணிச்சலான காரியம்.
 அவரைப்போன்ற   உறுதியும்  துணிச்சலும்
  மிக்க சிந்தனையாளரால் தான் முடியும்.
   
        ராமானந்தரின்  சீடர்களில்
உருவமற்ற இறைவனை
   வழி  படுபவர்களும்,
உருவமுள்ள இறைவனை
 வழிபடுபவர்களும்  இருவகையினருமே
 இருந்தனர்.

ஆனால் அவர்கள் ராமானந்தர் சீடர் ஆனதும்
ராமர்  என்பதே  கடவுள் என்று  ராமநாமம் ஜபித்து
புகழ் பரப்பினர். கபீர் உருவ வழிபாட்டிற்கு எதிரி.
ஆனால்  அவரும்  ராம நாமத்தை ஏற்றார்.
துளசிதாசர்  உருவ வழிபாட்டை  விரும்புபவர்.
அவரும்  ராமரின் பக்தர்.
கபீரின் ராமர் அளவில்லா சக்தி கொண்டவர்.
துளசரின் ராமர்  தசரதரின் புத்திரர்.
 மனித அவதாரங்களின்
கஷ்டங்களை  அறிந்தவர்.
கபீரின்  ராமரின் கரங்கள்  எண்ணிக்கையில்   எல்லை கடந்தது.  துளசியின்  ராமர்  இருகரங்கள் .


ராமானந்தர் ராமரின் உருவமற்ற உருவமுள்ள தன்மை

இரண்டுமே  ஏற்றார்.

 ராமானந்தர்  குரு ராகவானந்தரிடம்  யோகா கல்வி பயின்றார்.

  அந்தக்காலத்தில் இருந்தே ஹிந்துக்களின் எண்ணம் ஹிந்து
முஸ்லீம்  ஆகலாம். ஆனால் முஸ்லீம் ஹிந்து ஆக முடியாது.
ராமானந்தர் ஹிந்துக்களின் இந்த எண்ணத்தை மாற்ற முயன்றார்.  அவர் முஸ்லீம் ஹிந்துக்களை சாஸ்த்திர ரீதியில்
மீண்டும் ஹிந்துக்களாக்கினார். ஆயிரக்கணக்கான   மதம்
மாறிய  ஹிந்துக்களை மீண்டும் ஹிந்துக்களாக்கி புரட்சி செய்தார் . அயோத்தியா அரசர் ஹரிசிங்கின் தலைமையில் முஸ்லிமாக மாறிய 35 ஆயிரம் ஹிந்துக்களை பராபரிவர்த்தன்  மறு மாற்றம் என்ற உரையில் தாயமாதத்திற்கு மாற்றினார். இதை ஸ்வதர்மம்  என்கிறார்.
தாய் மதம் மாறிய ஹிந்துக்களுக்கு உரிய மரியாதை அளித்தார். வீடு திரும்புதல் என்ற முறையில் அவர் சிஷ்யர்கள்  மதம் மாறிய இந்துக்களை மீண்டும் ஹிந்துக்கள் ஆக்கி  வைஷ்ணவ தர்மத்தை ஏற்கும்படி  செய்தனர்.அவர்கள் கையில் துளசிமாலை ,நெற்றியில் வைஷ்ணவ நாமம்  ,நாவில்    ராமநாமம்  இதுவே
மதம் மாறிய   முஸ்லிம்களின் ஹிந்து  மத சன்னமாகியது.
இந்த முறையால்  இந்துக்களிடம்  தன்னம்பிக்கை ,ஹிந்துத்தப் பற்று உறுதியாகியது.

  ராமானந்தரின்  மிகப்பெரிய மாற்றம்  ஹிந்தியில்
 தர்ம   நூல்களை எழுதியதாகும் . மக்கள் தேவவாணி சம்ஸ்கிருதம் விடுத்து மக்கள் பேசும் மொழியை ஏற்றனர்.
வாலமீகி ராமாயணத்தைவிட துளசி ராமாயணம் ஒவ்வொரு வீட்டிலும்  பாராயணம்  செய்யப்பட்டது.
மக்கள் மொழியில்  பக்திநூல்கள் எழுதியதால் ராமனந்தர் வையகப் புகழ்பெற்றார். அவர் ஜகத்  குருவாக வாழ்ந்தார்.






       

Sunday, August 26, 2018

பக்தி உணர்வும் ஹிந்து சமுதாயமும் ஸ்ரீ ராமானந்தர் --9

பக்தி உணர்வும் ஹிந்து சமுதாயமும்  ஸ்ரீ  ராமானந்தர் --9

            அனைவருக்கும்  பக்தி சாதனையின்
அதிகாரமும் உரிமையும்  இருக்கிறது.

   ஸ்ரீ ராமானந்தர்  பக்தியின்
முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல ,
சமுதாய ஒற்றுமைக்கும்
மறக்கமுடியாத தொண்டாற்றியுள்ளார்.
  சமுதாயத்தின் உயர்ந்த -தாழ்ந்த ஜாதி
 உணர்வுகள்   அறத்திற்கும் மதத்திற்கும்
எதிரானது என்றார்.
 கடவுளின் பிரார்த்தனைக்கு
அனைவரும் அதிகாரம் பெற்றுள்ளனர்.
கடவுளிடம்  சரணாகதி அடைவதற்கு
அனைவருக்கும் அதிகாரமும் உரிமையும் உண்டு.
உயர்ந்த தாழ்ந்த ஜாதி என்று இறைவனுக்கு வேறுபாடு கிடையாது.
 சுவாமி ராமானந்தர்  கூறுவார்--யாருமே ஜாதியைப்பற்றி
கேட்காதீர்கள். "பகவான்  ஹரியை பஜனை   செய்பவர்கள்
யாராயிருந்தாலும்  ஹரியே " என்பார்.  அவர் உபன்யாசம் மட்டும் செய்யவில்லை 25000  சீடர்களைக்கொண்ட
மிகப்பெரிய சிஷ்யர்கள்  பரம்பரையை உருவாக்கினார்.
அனைத்து ஜாதியினருக்கும் குருமந்திரம் அளித்து தீக்ஷை வழங்கினார்.  பக்தியின் மூலம் சமுதாய மாற்றத்திற்கான புதிய  யுகத்தின் தலைமுறையை உருவாக்கினார்.
அவ்ரசீடர்களில்   அனந்தானந்தா ,சுகானந்தா,நரஹரியானந்தா,யோகானந்தா  அனைவரும் பிராமணர்கள்.சந்த்  பீப்பா -க்ஷத்திரியர்,சந்த்  கபீர் -நெசவாளி ,சந்த்  சேன் -சவரத் தொழிலாளி,சந்த்  தன்னா -ஜாட் ,பக்த ரைதாஸ் -சக்கிலியர்.அவரின் சிஷ்யைகள் பத்மாவதி, சுரசரி .
கடவுள் பக்தர்கள் அனைவரும் சமம் என்றார் .




Saturday, August 25, 2018

பக்தி உணர்வும் ஹிந்து சமுதாயமும் ஸ்ரீ ராமானந்தர் --8

  வட பாரத பக்திப்  புரட்சியில் ஸ்வாமி ராமானந்தரின்  பங்களிப்பு ஒப்பிடமுடியாதது. அவர் பிறந்தவருடம் விக்கிரமி வருடம் 1356இல் இருந்து 1505 அதன்படி வருடம் கிபி 1356 இல் இருந்து 1505 வரை. அசாதாரண ஆளுமை ,நன்னடைத்தை பலம்  ஆகியவை ஹிந்து தர்மத்தில் மிகுந்த வலிமை ஏற்படுத்தியது .அனைத்து இடங்களிலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது.
  ராமானந்தர் அவரது  காலத்தில் செல்வாக்குள்ள வழிகாட்டியாகத் தோன்றினார். அந்தக்காலத்திய எல்லா சாதுக்களும் இவரது தாக்கத்திற்கு உட்பட்டிருந்தனர். இவர் பிரயாகையில் பிறந்து பன்னிரண்டு வயதிலேயே காசியில் இருந்து  சாஸ்த்திரங்களைப் பயின்றார். திருமணம்  செய்துகொள்ளவில்லை.ஸ்ரீ ராகவானந்தா விடம்  தீக்ஷை பெற்று  காசியில் பஞ்ச கங்கைக்  கரையில் தவம் நிறைந்த வாழ்க்கையை ஆரம்பித்தார்.
உயர்ந்த  துறவியான ஸ்ரீ ராமானந்தர் முழு மனிதத்துவம் ,நாடு ,ஹிந்து சமுதாயம் ஆகியவற்றைக்  காக்க வாழ்க்கை முழுவதும்   துறவு வாழ்க்கையை ஏற்றார்.
 அவர் தன சீடர்களுக்கு செய்த உபதேசம் --
"எல்லோரும்   ராமர் புகழ் பாடுங்கள்.எல்லோருக்கும் பக்தி பாராயணம் கற்றுத்தருங்கள்.
  நூற்றுக்கணக்கான சாதுக்களை  -மஹாத்மாக்களை
ஒன்று திரட்டி பக்தி  விழிப்புணர்வு,உலக அமைப்பு .சமுதாய ஒற்றுமை ஆகிய மகத்துவம் நிறைந்த பணியில் ஈடுபட்டார்.
 வட  பாரதம் ,வங்காளம் ,மஹாராஷ்ட்டிரம் ,அசாம் முதலிய இடங்களில் தொடர்ந்து பக்தியின் பிரவாகம் ஓடிக்கொண்டிருந்தது.  இதற்கு மிகவும் அதிக பொறுப்பேற்றவர்  ராமனந்தர்.
பக்தி தெற்கு பாரதத்தில்  பிறந்தது. அதை வட  பாரத்தில் கொண்டுவந்து வளர்த்தவர் ராமானந்தர்.இந்த பக்திப்  புரட்சி
அரசியல் மற்றும் சமுதாயத்தில் புதிய புரட்சியைத் தோற்றுவித்தது. ஸ்ரீ ராமநந்தரின் தூண்டுதலால் ஹிந்து மத சாதுக்களும் துறவிகளும்  சமுதாயத் தீமைகளையும் ,முகலாயரின் கொடுமைகளையும் ஒழித்து  வெற்றிபெற
எதிரிகளைத் தோற்கடிக்கத் தயாராயினர்.

रामनुजर -ராமானுஜர் -சமுதாய சீர்திருத்தவாதி


  ராமானுஜர்  மிக  உயர்ந்த சீர்திருத்தவாதி.
வட   பாரதத்தில்  பதிநான்காம்   நூற்றாண்டில்
சுவாமி ராமானந்தர்   பக்தியின் உரிமையை
அனைவருக்கும் அளித்தார்.அவர் அனைவருமே
சரணாகதிக்கு உரிமையுள்ளவர்கள் என்கிறார்.
இந்த மனோபாவம்  அவருக்கு
 ராமாநுஜரிடம் இருந்து வந்தது.
பிரபத்தி என்பது ஆழ்வார்கள் மூலம்  சரணாகதிக்கு க்
கொடுத்த  சொற்பொருள் விளக்கமாகும்.
ஆழ்வார்கள் பக்தியை இயக்க குறிப்பிட
ஸ்ரீ ராமானுஜர் "பிரபத்தி சொல்லை
மீண்டும் பிரயோகித்தார்.
 ஸ்ரீ ராமானுஜர் காலத்தில் வேத சாஸ்த்திரங்கள்
மற்றும் மத   நூல்களை படிக்க மற்றும் கற்பிக்க
எல்லா இன -ஜாதி மக்களுக்கும்
   எளிதாக்கப் பட்டன. இப்பொழுது சாமானியனும்
ஆழ்வார் பக்தர்கள் மூலம் மக்கள் மொழி தமிழில் எழுதப்பட்ட பவித்திரமான பஜனைகள், திராவிடவேதங்கள்
திவ்விய பிரபந்தம் என்ற பெயரில் கிடக்கின்றன.
   இவ்வாறு தன்  120 வருட  தீர்க்க வாழ்க்கை காலத்தில்
ஹிந்து தர்ம நூல்களுக்கு காலத்திற்கேற்றவாறு
விளக்கமளித்து சமுதாயத்தின் முன் வைத்தார்.
தீண்டப்படாத ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கும் எல்லா அறநூல்களையும்  படிக்க ஏற்பாடு செய்தார். சூத்திரர்களை ஆலயத்திற்குள் பிரவேசிக்க ஏற்பாடு செய்தார். ஐந்தாம் ஜாதி என்று சூத்திரர்களைவிட தாழ்ந்தவர்களுக்கு ஆளாய பிரவேசம் அளித்து வைஷ்ணவ தர்ம  தீக்ஷை அளித்தார்.
சூத்திர குருவினர்களின் சீடனாகி வேதம் பயின்றார். அநேக சூத்திரர்களை தன்  சீடராக ஏற்றார். ஒரு முகலாயப்பெண்ணிற்கும் ஆலயத்திற்குள்
அழைத்து பூஜை பக்திசெய்ய அனுமதித்தார்.
ராமானுஜர் மூலம் நிறுவப்பட்ட நூற்றுக் கணக்கான
மடங்கள் ,ஆஷ்ரமங்கள் ,வித்தியாலயங்கள் மூலம்
ஆயிரக்கணக்கான சாதுக்களை  நாடுமுழுவதும்  யாத்திரைக்கு அனுப்ப  முயன்றார். இவ்வாறு வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு என எல்லா திசைகளிலும் வைணவ சமுதாயத்தை விரிவாக்கினார்.
இவ்வாறு  ராமானுஜரின் முயற்சியால் வைணவ தர்மம்
பரவி மக்களுக்கு பக்திப்புரட்சி ஏற்படச்செய்தார்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பரந்து  விரிந்த பகுதி புரட்சி என்ற கனல் ஸ்ரீ ராமானுஜரின் தீப்பிழம்பாகும்.
ராமானுஜர் போற்றுதலுக்கு உரியவர்.


Friday, August 24, 2018

ஆலயங்கள் சீரமைப்பு =ராமானுஜர்--7

ராமானுஜர் மேலக்கோட்டை ஆலயத்திற்குப்பின் பல ஆலயங்களை கட்டுவித்தார் .பூஜை முறைகளையும் அனுஷ்டானங்களில் சில சீர்திருத்தங்களையும் ஏற்படுத்தினார்.எல்லா ஜாதிமக்களுக்கும் ஆலயங்களில் இடமளித்தார்.ஸ்ரீ ராமானுஜர் அமைத்த ஆலயங்களின் மூலமும்  மடங்களின்   மூலமும் வைணவ பக்தி மிக வேகமாக பரவியது.
ராமானுஜரின் முக்கிய சீடர்கள் 74 பேராவர். அதில் அனைத்து ஜாதியினரும் இருந்தனர். எல்லாமடங்களின்  கண்காணிப்பை ராமானுஜர் மேற்கொண்டார். மற்ற மதங்களை அவர்களுடைய சீடர்கள் அவர் வழியைப் பின்பற்றி ஏற்றனர். அவர்களுடைய வழிகாட்டுதலால் ஆயிரக்கணக்கான வைணவ பக்தர்கள் வைணவ தர்மத்தைப் பரப்பினர். வைணவ தர்மம் வேகமாக பரவி தன்
சிகரத்தைத் தொட்டதற்கு காரணம் ராமானுஜரின்  பங்களிப்புதான். பாரத தர்ம வளர்ச்சியில் ராமானுஜருக்கு சமமான வேறு உயர்ந்த வைஷ்ணவாச்சாரியார் வேறு யாரும் இல்லை .
ராமானுஜரின்  சீடர் குருகேஷ்  அவர் கூரத்தாழ்வார் ,பிள்ளான் என்ற பெயரிலும் புகழ்பெற்றவர். அவர் ராமானுஜரின் தூண்டுதலால்  ஸ்ரீ நம்மாழ்வாரின் திருவாய் மொழிக்கு ஒரு பெரிய பாஷ்யம் எழுதினார்.ஸ்ரீ ராமானுஜர் நம்மாழ்வாரின் திருவாயமொழியைத்தான் பின்பற்றினார்.
ராமானுஜரின் பக்தி கோட்பாடுகளில் ஆழ்வார்களின் எண்ணங்களின் ஆழ்ந்த தாக்கம் உள்ளதை எல்லா வித்வான்களும் ஒப்புக்கொள்கின்றனர்.
ராமானுஜர் மேலக்கோட்டை ஆலயத்திற்குப்பின் பல ஆலயங்களை கட்டுவித்தார் .பூஜை முறைகளையும் அனுஷ்டானங்களில் சில சீர்திருத்தங்களையும் ஏற்படுத்தினார்.எல்லா ஜாதிமக்களுக்கும் ஆலயங்களில் இடமளித்தார்.ஸ்ரீ ராமானுஜர் அமைத்த ஆலயங்களின் மூலமும்  மடங்களின்   மூலமும் வைணவ பக்தி மிக வேகமாக பரவியது.
ராமானுஜரின் முக்கிய சீடர்கள் 74 பேராவர். அதில் அனைத்து ஜாதியினரும் இருந்தனர். எல்லாமடங்களின்  கண்காணிப்பை ராமானுஜர் மேற்கொண்டார். மற்ற மதங்களை அவர்களுடைய சீடர்கள் அவர் வழியைப் பின்பற்றி ஏற்றனர். அவர்களுடைய வழிகாட்டுதலால் ஆயிரக்கணக்கான வைணவ பக்தர்கள் வைணவ தர்மத்தைப் பரப்பினர். வைணவ தர்மம் வேகமாக பரவி தன்
சிகரத்தைத் தொட்டதற்கு காரணம் ராமானுஜரின்  பங்களிப்புதான். பாரத தர்ம வளர்ச்சியில் ராமானுஜருக்கு சமமான வேறு உயர்ந்த வைஷ்ணவாச்சாரியார் வேறு யாரும் இல்லை .
ராமானுஜரின்  சீடர் குருகேஷ்  அவர் கூரத்தாழ்வார் ,பிள்ளான் என்ற பெயரிலும் புகழ்பெற்றவர். அவர் ராமானுஜரின் தூண்டுதலால்  ஸ்ரீ நம்மாழ்வாரின் திருவாய் மொழிக்கு ஒரு பெரிய பாஷ்யம் எழுதினார்.ஸ்ரீ ராமானுஜர் நம்மாழ்வாரின் திருவாயமொழியைத்தான் பின்பற்றினார்.
ராமானுஜரின் பக்தி கோட்பாடுகளில் ஆழ்வார்களின் எண்ணங்களின் ஆழ்ந்த தாக்கம் உள்ளதை எல்லா வித்வான்களும் ஒப்புக்கொள்கின்றனர்.

பக்தி உணர்வும் ஹிந்து சமுதாயமும்6 ராமானுஜர் தொடர்ச்சி 7

  ராமானுஜர்  தன்  குரு  திருமலையாண்டான்
  மற்றும் ஆளவந்தார் ஆள்வானிடம்
 திருவாயமொழியின்  ஞானத்தைப் பெற்றார்.
 பிருமலை  நம்பியிடம் ராமாயணம் பயின்றார்.
 இவ்வாறு ராமானுஜரின்  ஞானம் விரிவடைந்தது.
தன்  இருபத்து மூன்று வயதிலேயே 
கிருஹஸ்தாஸ்ரமத்தை  விடுத்து
 துறவறம் பூண்டார்.
அவர் மனித சமுதாயத்தை குற்றமற்ற 
குணம் நிறைந்த சமுதாயத்தை
மாற்றும் உன்னத செயலில் ஈடுபட்டார்.
பயணங்களும் இலக்கியப்படைப்பும் :-
   ஸ்ரீ ராமானுஜர் உலக விழிப்புணர்வுக்கு ஆதாரம்
பக்தியே என்றார் .பக்தியை பிரச்சாரம் செய்யவும் பக்தி முன்னேற்றத்திற்கும் அவர் மற்ற ஊர்களுக்குச் சென்றார்.
அவர் ராமேஸ்வரத்தில் இருந்து பத்திரி நாத் வரை பயணம் செய்தார்.மேற்கில் மஹாராஷ்டிரத்தில் இருந்து கிழக்கில் ஒரிசா சென்று தென்னகம் திரும்பினார். தன்  அன்பு சீடரான கூரத்தாழ்வாருடன் ஸ்ரீ நகர் சென்று ஸ்ரீ ரங்கத்திற்குத் திரும்பினார்.  திரும்பியதிலிருந்து பாஷ்யம் எழுதத் தொடங்கினார்.பின்னர் வேதாந்த தீபம் ,வேதாந்த சாரம்,கீதாபாஷ்யம் ,நித்ய பாராயணம்,கத்யத்திரயம்
ஆகிய நூல்களை எழுதினார். அவர் ஆழ்வார்பக்தர்களுடன் தொடர்புள்ள இடங்களுக்குப் பயணம் செய்தார். மீண்டும் வட இந்திய ப்  பயணம் மேற்கொண்டார். ஆஜ்மீர்,மதுரா,பிருந்தாவன்,பத்ரிநாத் ,காசி ,இறுதியாக பூரி சென்று அங்கு ஒரு மதத்தை நிறுவினார். தென்னிந்தியாவில்
பல இடங்களில் தன மடத்தை  நிறுவினார் .அவருக்கு ஆழ்வார்களின் ப்ரபந்ததங்கள் மீது மிகவும் பற்று இருந்ததற்குச் சான்று அவர் தன் ஆலயங்களில் பிரபந்தங்களுக்கு  முக்கியத்துவம் அளித்து வழிபாட்டு முறைகளாக்கினார்.
   வைஷ்ணவ சம்பிரதாயங்களுக்கு மூலமாக இருப்பது பிரபந்தங்களே .ஸ்ரீ நம்மாழ்வார் சூத்திரர்.ஆனால்  நம்மாழ்வார் இயற்றிய திருவாய் மொழி  வைஷ்ணவ பக்திக்கும் ,சம்பிரதாயங்களுக்கும் ,தத்துவங்களுக்கும்
ஆதாரமான நூலாகும். இராமானுஜர் பிரபந்தங்களில் கூறப்பட்ட அடிப்படைக்கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தார்.ப்ரபந்தங்களின்  எண்ணங்களை யுகத்திற்கேற்ற படி அறிவியல் விளக்கம் அளித்தார்.
 புகழ் பெற்ற  எழுத்தாளர்  ஸ்ரீ ராமானுஜாச்சாரியாருக்கு முன்பே ஆழ்வார்கள் தங்கள் பாசுரங்கள் மூலம்  பக்தியின் அழகான பூமியை அமைத்திருந்தனர்.ஸ்ரீ ராமானுஜர் விரிவு படுத்தினார். ஸ்ரீ ராமானுஜர் கர்நாடகத்தின் மேல்கோட்டையை தனது பிரச்சாரமையமாக்கினார்.
அவருடைய அதிக சீடர்கள் பிற்பட்ட கீழ்ஜாதியைச் சேர்ந்தவர்கள் .எல்லோருமே மிகச் சிறந்த பக்தர்கள்.
ஸ்ரீ ராமானுஜர் காலத்தில் தேர் இழுப்பவர்கள் கீழ்ஜாதிச் சீடர்களே. அதே பரம்பரையைச் சார்ந்தவர்களேஇன்றும் அப்பணியைச் செய்கின்றனர்.மாலிக்காபூர் தன படையெடுப்பின் போது  இங்குள்ள அழகான சிலையைக் கவர்ந்து தில்லிக்கு எடுத்துச் சென்றார். ஸ்ரீ ராமானுஜர் தன்  சீடர்களின் ஒத்துழைப்பால் அதை மீண்டும் தில்லியில் இருந்து மீட்டுவந்தார்.ஆகையால் அந்த ஜாதியினருக்குத் தேர் இழுப்பதில் முன்னுரிமை அளித்தார். அவர்கள் இழுத்தபிறகே மற்றவர்கள் தேர் இழுக்கமுடியும்.
  ஸ்ரீ ராமானுஜரின் குரு மஹாபூர்ண குருதேவ் சூத்திர பக்தனின் சவத்திற்கு  இறுதிச்சடங்கு செய்தார்.
அதனால் அவரை கடுமையாக விமர்சித்தனர். அவருடைய ரத்த உறவுகளும் அவரை விலக்கிவைத்தனர் .
ராமானுஜர் இந்த நிகழ்ச்சியால் மிகவும் வருத்தமுற்றார்.
உறவினர்கள் நடத்தைப்பற்றி தன குருவிடம் வினா எழுப்பினார். அதற்கு குரு சொன்னார் தர்மம் என்பது மஹான்கள் செல்லும் வழியைப் பின்பற்றுவதே.
 மனித யோனியில் பிறக்காத பறவை யோனியில் பிறந்த ஜடாயுவிற்கு  ஸ்ரீ ராமர் இறுதிச் சடங்கு செய்துள்ளார்.
யுதிஷ்டர் க்ஷத்திரியராக இருந்தாலும் விதுரனை வழிபட்டார்.
உண்மையான பக்தர்களுக்கு ஜாதியில்லை.அவர்கள் எல்லா ஜாதியினர்களைவிட  உயர்ந்தவர்கள். ஸ்ரீராமர் ,யுதிஷ்டர் போன்ற  அறங்காவலர்கள் மூலம் ஒருபொழுதும் தகுதியற்ற ஆசாரங்கள் நடக்காது.  நான் இன்று இறுதிச் சடங்கு செய்த சூத்திரன்  என்னைவிட ஆயிரம் மடங்கு  அதிகமுள்ள பக்தன்.
அவனுக்குத் தொண்டு செய்ததை நான் மிகவும் நன்றியுள்ளவனாகக் கருதுகிறேன்.



பக்தி உணர்வும் ஹிந்து சமுதாயமும் -ராமானுஜம் 6.

 ராமானுஜர்   பால பருவத்தில் "யாதவ் பிரகாஷ் "என்ற பெயருள்ள அத்வைத்  வித்வானிடம்  கல்வி பயின்றார்.
பிறகு கருத்து வேறுபாட்டின் காரணமாக அங்கிருந்து சென்றுவிட்டார்.பிறகு  யமுனாச்சாரியாரின் சீடனாகி ஸ்ரீ சம்பிரதாயத்தைத்  தோற்றுவித்தார்.யமுனாச்சாரியாரின்
வைகுண்டவாசத்திற்குப்பின்  தன்னுடைய அசாதாரண
செல்வாக்கும்  ஞானத்தின் காரணமாக வைஷ்ணவ மதத்தின் சிம்மாசனத்தின் வாரிசானார்.
  ஸ்ரீ ராமானுஜரின் ஐந்து ஆச்சாரியர்களில் ஸ்ரீ பெரியநம்பி தான் ஸ்ரீ ராமானுஜரின் குரு ஆவார். அவர் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர். ராமானுஜர் வேதங்களையும் நாலாயிர திவ்விய  பிரபந்தத்தையும் ஸ்ரீ ராமானுஜர் பெரியநம்பி அவர்களிடம் தான் பூர்த்தி செய்தார்.
பெரிய நம்பித்தான் ஸ்ரீ ராமானுஜருக்கு வைஷ்ணவ சம்பிரதாய தீக்ஷை அளித்தார்.
  ஸ்ரீ ராமானுஜரின் அடுத்த குரு திருக்கோஷ்டியூர்  நம்பி ஆவார். திருக்கோஷ்டியூர் நம்பி சூத்திரர். அனால் வேதத்தில் மேதாவி.மிகப்பெரிய பக்தர். அதனால் அவர் அவரிடம் பயின்றார்.
திருக்கோஷ்டியூர்  நம்பி ராமாநுஜரிடம் கேட்டார்--
"நான் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த சூத்திரன்.
நீ பிராமணன் .நான் எப்படி உனக்கு குரு ஆக முடியும்?
 ஸ்ரீ ராமானுஜர் அதற்கு பதிலாக வினா எழுப்பினார்-
பூணூல் போடுவதால் ஒருவர் பிராமணனாக முடியுமா?
இறைவன் மேல் பக்தியுள்ளவன் தான் உண்மையான பிராமணன்.உயர்ந்த ஆழ்வார்கள் பக்தர்கள்.வெவேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள்.ஆனால் எல்லோருமே பகவானின் பக்தர்கள். தாழ்ந்த குலத்தில்  பிறந்த திருப்பாணாழ்வார்
தன்  தகுதியின் காரணமாக அநேக பிராமணர்களால் பூஜிக்கப்படுபவர் . ஸ்ரீ ராமானுஜாச்சாரியாரின் திறமையையும் பக்தியும் கண்டு திருக்கோஷ்டியூர் நம்பியும்
அவருக்கு கற்பிக்க சம்மதித்தார்.
  ஸ்ரீ  ராமானுஜருக்கு "ஓம் நமோ நாராயணா"என்ற எட்டெழுத்து  மந்திரத்தைக் கற்பித்து,இதை ரகசியமாக வைத்திரு. யாரிடமும் சொல்லாதே. சொன்னால் நரகம் தான்
கிடைக்கும் என்கிறார்.  ராமானுஜர் ஆலய கோபுரத்தின்
உச்சியில் ஏறி நின்று மக்களை ஒன்று திரட்டி உயர்ந்த குரலில் தன்  குருவின் மந்திரமான "ஓம் நமோ நாராயணா "வை அனைவருக்கும் சொல்லி இதனால் முக்தி கிடைக்கும் என்று சொன்னார். மீண்டும் குரு அவரிடம் உனக்கு பாவம் உண்டாகும் என்றார். அப்பொழுது ராமானுஜர் சொன்னார் --
"இத்தனைபேருக்கு முக்தி  கிடைக்கும் என்றால்  நான் நரகத்தில்  இருக்க விரும்புவேன் என்கிறார்.

பக்திஉணர்வும் ஹிந்து சமுதாயமும் --5-ஸ்ரீ ராமானுஜர்

          ஸ்ரீ ராமானுஜர்  இன்றிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு  முன்  தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில்  பிறந்தார். அவர் வாழ்ந்த காலம் விக்ரமை ஸம்வந்த் 1074இல் இருந்து 1194 வரை . அதன்படி வருடம் 1017இல் இருந்து 1137 வரை . அவர் பிறப்பால் அந்தணர். ஆனால் அவர் சமுதாயத்தின் பின்தங்கிய தாழ்த்தப்பட்டவர்களின்  துன்பங்களை இதயத்தால் உணர்ந்தார். அவர்களிடம் இரக்கம் கொண்டார்.
அவர்கள் நிலைகண்டு அனுதாபம் அடைந்தார். அந்தக் காலத்திய  அனுஷ்டான முறைகளில் முடிந்த அளவிற்கு சீர்திருத்தங்கள் கொண்டுவந்தார். அவர் அந்தணர்கள் முதல் கலப்புமண சாண்டாளர்களுக்கும்  மிக உயர்ந்த ஆன்மீக உபாஸனையை ஆரம்பித்து அனைவருக்கும் பக்தியின்
நுழைவாயிலைத் திறந்து விட்டார். இதனால் அவர் பல எதிர்ப்புகளை எதிர்கொள்ளவேண்டிவந்தது.ஆனால் அவர் எவ்வித அச்சமும் இன்றி தன ஆன்மீகப் பணிகளைத் தொடர்ந்தார். அவர் சமுதாயத்தின் ஜாதி ஏற்பாடுகளை முறைகளை முற்றிலும் ஏற்கவில்லை. ஸ்ரீ ராமானுஜர் முதுமையில் குளிக்கச் செல்லும்போது இரண்டு அந்தணர்களின் தோள்களில் கைவைத்துச் செல்வார்.
குளித்துவிட்டு வரும்போது இரண்டு  தோல்  விற்பவர் தாழ்ந்தஜாதிகளின் தோளில் கைகளைப்போட்டுவருவார்.
மக்கள் இதை எதிர்த்தால்  ராமானுஜர் முதலில் உங்கள்
மனத்தின் களங்கத்தைப் போக்குங்கள் என்பார்.
ஜாதிகள் கிடையாது  குணம் தான் நலத்திற்கு  காரணம் என்று கூறுவார். ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ ரங்கப்பட்டினத்தின் வடக்கில் மேல்கோட்டை என்ற பெயருள்ள புகழ்பெற்ற திருநாராயணன் பெருமாள் என்ற வைஷ்ணவ ஆலயத்தை
ஸூத்திரர்களினும்   தாழ்ந்த ஐந்தாம் ஜாதியினருக்குத் திறந்துவிட்டார். வருடம் 1099இல் இந்த ஆலயத்தை ஸ்ரீ ராமானுஜர் தான் கட்டுவித்தார் . அவர் அந்தணர்கள் அல்லாதவரையும் வைஷ்ணவர்கள் ஜாதி அடையாளங்களை
போடச்  செய்தார். வைஷ்ணவர்களின்  ஜாதி அடையாளங்களைப் போடச்செய்தார்.அதற்கு கட்டளை இட்டார்.மற்ற ஆலயப்  பிரவேஷங்களுக்கும் ஏற்பாடுசெய்தார்.
தாழ்ந்த ,அடைக்கலம் அற்ற மனிதர்களும்
தன்  பக்தி ,சமர்ப்பணம் மற்றும் ஞானம்  மூலம்
கடவுளை காணமுடியும் ,பெற முடியும் என்று
ராமானுஜர் சொல்வார்.  மனிதர்களின் அனைத்து நற்பணிகளிலும் ஆண்டவன் தானே உடன் இருக்கிறார்.
மனிதர்கள் நற்பணியாற்றினால் அவர்களின் ஜாதி முக்கியமல்ல. செயல்கள் தான் முக்கியத்துவம் பெறும் .
அவருடைய இந்த பரந்த மனப்பான்மை தான் சமுதாயத்தில் நல்ல உணர்வுகளையும் சகிப்புத்தன்மையையும் தோற்றுவித்தது.ஜாதி,இன  சம்பிரதாய வேறுபாட்டிற்கு அப்பாற்பட்ட  சமுதாய முறையை நிர்மாணிக்க முயற்சி செய்தார்.
ஸ்ரீ ராமானுஜர் அவருடைய காலத்தில் மிகப்பெரிய வித்துவான்.துணிச்சல் மிக்கவர். சமுதாய நோக்கில் தாராளமுள்ள தார்மீக வழிகாட்டி.  ஆதி சங்கராச்சாரியார் போன்று இவரும் காசி ,அயோத்தியா, பத்திரிநாத்,ஜெகந்நாதபுரி ,துவாரகை ,மு தலிய
ஸ்தலத்திற்கு பாரத புனித யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
அந்த புனிதஸ்தலங்களில் தன்  ஆன்மீக சமுதாயஎண்ணங்களையும் எடுத்துச் சென்றார்.
மனிதர்களை சமமாக ஏற்றுக்கொள்ளும் ராமானுஜரின் மனித நேய குணங்களை சுவாமி  விவேகானந்தர் மனதில் புகழ்ந்து பேசினார்.அவருடைய சீடர் பரம்பரையில் ஸ்ரீ ராகவாச்சாரியார் தோன்றினார்.இவருடைய சீடராக
காசியில் ராமானந்தர்  ஆனார்.
  சோழ  சாம்ராஜ்ஜியத்தில் ராமானுஜர் இருக்கும்போது ராமானுஜர் செல்லும் வழியில் ஒரு சூத்திர பெண் வந்தாள் .
ராமானுஜர் அவளை விலகிச்செல்லுமாறு கூறினார்.
அந்தப்பெண்  ராமாநுஜரிடம் கேட்டாள் ,-
நான் எந்த திக்கில் செல்வேன் ?எனக்கு நான்கு திக்குகளிலும்
சர்வ சக்தி வாய்ந்த இறைவனே  தென்படுகிறார்.எல்லா இடங்களிலும் சர்வேஸ்வரரின் புனிதம் சிதறிக் கிடைக்கிறது.
எனது புனிதமற்ற உடலைக்கொண்டு எங்கே செல்வேன்.
மகானே!துறவியே !தயவு செய்து எனக்கு  வழி  காட்டுங்கள்.
மிகப்பெரிய ஞானி ராமானுஜருக்கு எதுவுமே தோன்றவில்லை.சிலநேரம் அமைதியாக இருந்துவிட்டு சொன்னார்-"மகளே !என்னை மன்னித்துவிடுங்கள்.
நான் என் ஜாதியின் பொய்யான அகங்காரத்தில் மூழ்கியிருந்தேன் .என் ஞானத்தில் திரை போடப்பட்ட ஆணவம் இருந்தது. நீ என் கண்களைத் திறந்துவிட்டாய்.
என்னை விட நீ தான் கடவுளின் உண்மையான பக்தர்.
பின்னர் அந்த சூத்திரப்பெண்  ராமானுஜரின் சீடர் ஆகிவிட்டாள் . பின்னர் மஹத்துவம் நிறைந்த இடத்தைப் பெற்றாள் .  

Thursday, August 23, 2018

பக்தி உணர்வும் ஹிந்து சமுதாயமும்.4. புத்தர் வேற்றுமைக்கு எதிரானவர்

  புத்தரின்  காலம்  விக்கிரமி வருடம் .மு 509-430 ;கி.மு.566-487.

மனித  துன்பங்கள் மற்றும்  மற்றவர்களின்
 இன்னல் கண்டு உருகுகின்ற  மஹான்களில்
 பகவான் புத்தரின் பெயர் மிகவும்  உயர்ந்தது.
மகத்துவம் நிறைந்தது.
 அவர் ஏசுவிற்கு முன் பிறந்தார்.
பகவான் புத்தரின்  இதயத்தில்
மனிதர்களின் வேறுபாட்டை ஏற்படுத்தும்
 மனிதத் தன்மை யற்ற  அவமானத்தைக்கண்டு   துன்பப்பட்டது.  அவர் அரசகுமாரர் .
அவர் அரசகுடும்பத்தை விட்டு விட்டு
பேசாமல் வீட்டில் இருந்து புறப்பட்டு விட்டார். 
 துறவறம் பூண்டு  வீடுவீடாக பிக்ஷை எடுத்து
 வாழ்க்கைக்கு ஆதாரமாக்கினார்.
அவர் ஜாதிவேறுபாடாற்ற ஒரு புதிய சமுதாய
 தத்துவத்தை மக்களுக்கு முன் வைத்தார்.
அவர் தன்  முதல் உபதேசத்தை காசியில் (சாரநாத்)தொடங்கினார்.
இதற்குப்பிறகு அவர் 44 ஆண்டுகள்
 தொடர்ந்து உபதேசித்துக் கொண்டே  இருந்தார்.
கௌதம் புத்தரும்  சுனீத்தும் :-
சுனித்   தாழ்ந்த வஞ்சிக்கப்பட்ட 
ஜாதியைச் சேர்ந்த இளைஞன்.
சாலையைக் கூட்டிக்கொண்டிருந்தான்.
புத்தர்  அவ்வழியில் வருவதைப்  பார்த்து
விலகி நின்றான்.
அவனை  புத்தர் தீண்டக் கூடாது என்று
நினைத்தான் .
பகவான் புத்தர் அவனுக்கு
 அருகில் சென்று  கேட்டார் :-
நீ வேலையை விட்டுவிட்டு
என்னுடன் வர தயாரா ?
தீண்டப்படாத சுநீத்திற்கு  மிகவும் ஆச்சரியம்.
இதுவரை அவனிடம் இப்படி யாரும்
நடந்து கொண்டதில்லை.
அவன் புத்தரிடம் சொன்னான்---
நீங்கள் தான் என்னிடம் அன்பாக
நடந்துகொள்ளும் முதல் மனிதர்.
நீங்கள் அடைக்கலம் கொடுத்தால்
உங்களிடம்  பணியாற்றுவதை என்னுடைய
சௌபாக்கியமாக உணர்கிறேன்.புத்தர் சுநீத்திற்கு
தீக்ஷை அளித்தார். அவனை புத்த சங்கத்தின்
அங்கத்தினர் ஆக்கினார்.
 ஆனந்தனும் சூத்திர பெண்ணும் :-
 கௌதமபுத்தரின் சகோதரர் ஆனந்தர்,
சிற்றப்பா மகன்.அவர் புத்தரின் மிகவும் அன்பான சீடர்.
சிராவஸ்தியில் பிக்ஷை வாங்கிய பின் விஹாருக்கு திரும்பிக்கொண்டிருந்தார் .அந்த நேரம் ஒரு பெண் தண்ணீர்
கிணற்றில் இருந்து எடுத்துக்கொண்டிருந்தாள் .ஆனந்தர்  அவளிடம் தண்ணீர் கேட்டார் .அந்தப்பெண் தான்  சூத்திரர் என்று  தண்ணீர் கொடுக்கத்  தயங்கினாள். ஆனந்தர் அவளிடம்  தண்ணீர் தானே கேட்டேன் . உன் ஜாதி கேட்கவில்லையே என்றார் .என் தாகம்  தணிய தண்ணீர் கேட்கிறேன். ஆனந்தர் தண்ணீர் குடித்தார். பின்னர் அந்தப் பெண் மற்ற பெண்களுடன் பௌத்த சங்கத்தில் சேர்த்துக்கொண்டாள் .
 பகவான் புத்தர் சொன்னார்--"ஜாதியின் அடிப்படையில் யாரும்  சிரியவரோ பெரியவரோ ஆக முடியாது.
இந்த பழைய சமுதாய முறைதான் இந்த அநியாயத்தை அன்னை  என்று  புத்தர் நினைத்தார். ஆகையால் அவர் இந்த முறையை எதிர்த்தார்.
ஜாதி -இனம் -சம்பிரதாய மில்லா
 ஒரு  புதிய சமுதாயத்தை
அமைக்க முயற்சி செய்தார்.
  நடைமுறையில் இருந்த கர்மகாண்டங்கள் ,
உருவ வழிபாடு போன்ற வற்றை கடுமையாக 
உறுதியாக எதிர்த்தார்.
புத்தர் ஜாதி வேறுபாட்டை ஒழித்து
ஒரு புதிய சமுதாய முறையை உருவாக்கினார்.
 ஜாதி முறைக்கு புதிய விளக்கமளித்தார்.
அவர் தன்னுடைய சம்பிரதாயத்திற்கு
தலைவராக  இருந்தார்.அநேக அரசர்கள்,உயர் ஜாதியினர்,
பணக்காரர்கள் அவரை வழிபட ஆரம்பித்தனர்.
அன்றைய கால கட்டத்தில் அவர் மிக
அதிக பணிவான கருணை நிறைந்தவராக இருந்தார்.
   "நான் நோயாளிகளுக்கு வைத்தியன்,மனிதனுக்குநண்பன் ,
மிகப்பெரிய ஏழை மனிதன். ஜீவன்களிடம் கருணை இருக்கிறது. அதனால் நான் அறிவுப் பார்வையால் உலகத்தை  சோதித்தறிந்தேன்.  தூய மானமுள்ள மனிதர்களுக்கு  பஞ்சமில்லை. " என்று புத்தர் சொல்லிவந்தார்.  ஸீடன் ஆனந்தர் அவர்
 இறப்பதற்கு முன் சங்க ஒழுங்கு முறையை
எப்படி  பாதுகாப்பது என்று வினவினார்.
அதற்கு புத்தர் சங்கத்தைப் பற்றி ஏன்  ஆலோசனை வழங்க வேண்டும்?
பின்னர்  அவரே  தன்  உபன்யாசத்தில் சொன்னார் --"ஆனந்தா !ஆத்மதீபோ  பவ ." அதாவது  நீ உன் ஆள்
மனதில் ஒளி மயமாக இரு. அந்த இதய ஒளியில் நீயே உன்வழியை  விரிவாக்கு .  பௌத்த தர்மத்தில் எல்லாவித வேற்றுமைகளுக்கு  மேல் எழுந்து மனித அளவில் அன்பு மற்றும் கருணை பெறுவதற்கு வலியுறுத்தினார்.
ஆணவம்  என்ற  பொய்யான சுவர்களை தகர்த்தெறிய வேண்டும் என்றார்.
கௌதம் புத்தரும் ஜாதி வேறுபாடும் :-
பகவான் புத்தரும் எவ்வித ஜாதி
சம்பிரதாய வேறுபாடுகளை ஏற்கவில்லை.
"மன்ஜிம்  நிகாய"  என்ற  நூலில் 
 ஒரு நிகழ்ச்சிபற்றிய வருணனை வருகிறது.
காசியில் உள்ள அந்தணர்கள் ஆஸ்வலயன்  என்ற
பண்டிதரை ஒரு குழுவுடன்  புத்தரிடம்
பேச்சுவார்த்தை நடத்த அனுப்பினார்கள்.
அந்தணர்களின் மேன்மை பிறப்பால்
 ஏற்படுகிறது என்பதை  உறுதி படுத்த வந்தனர் .
புத்தருடன் இவர்கள் செய்த  சர்ச்சை
 மிகவும் ருசிகரமாக  இருந்தது.
பகவான் புத்தர் பிறப்பால் அந்தணர் உயர்ந்தவர் என்பதை மறுத்தார். அந்தணர்கள் கூற்றை ஏற்கவில்லை.

புத்தர் :--அந்தணர் மற்றும் சூத்திரரின் பிறப்பு ஒரே வீதமாகத்தானே  ஏற்படுகிறது ?
ஆஸ்வலாயன் :- ஆம் !பகவானே!ஒரேவிதமாகத்தான் .
பகவான் புத்தர் :-எல்லா ஜாதிகளை சேர்ந்தவர்களும் திருடாமல் , பொறாமை ,வெறுப்பு ,பேராசை இன்றி
நடந்துகொண்டால் ,ஸ்வர்கத்தில் பிறப்பார்கள் அல்லவா ?
ஆச்வலாயன்:-ஆம்! பகவானே!
பகவான் புத்தர்:-அந்தணர்கள் சந்தன விறகை எரிக்கிறார்கள். சூத்திரர்கள்   ஆமணக்கு விறகை எரிக்கிறார்கள். அதன் எரிவதால் உண்டாகும் தணலில்
தன்மையில் ஏதேனும் வேறுபாடு உண்டா ?
ஆஸ்வலாயன்  :- எந்த வேறுபாடும் இல்லை, பகவானே!
புத்தர்;-   ஒருமனிதன்  ஒழுக்கமுள்ளவன் .மற்றவன் ஒழுக்கமற்றவன் .அவர்களில் உயர்ந்தவன் யார் ?
ஆஸ்வலாயன் :--ஒழுக்கமுள்ளவனே !பகவான்!
 அப்பொழுது  புத்தர்  பிறப்பால் ஜாதியின் மதிப்பற்ற
சாரமற்ற தன்மையை விளக்கி வாழ்க்கையின் தூய்மை
பற்றி உபதேசமாளித்தார்.
  சம்ஸ்கிருத மொழிக்கு பதிலாக  கிராமத்தில் நடைமுறையில் இருந்த பாலி  மொழியில்  புத்தர்
நூல்களை இயற்றத்  தொடங்கினார்.
தர்மம் என்ற சமமான சொல்  தம்மம்  . அதிலிருந்து
பௌத்த தம்மம் ஸ்தாபிக்கப்பட்டது.
சிறப்பான  அறிவுத்திறன் ,கருணை மற்றும் அன்புநிறைந்த
நடவடிக்கையால்  லக்ஷக்கணக்கான மக்கள் அவரின் சீடர்களாகி  புத்தரைப் பின்பற்றத்  தொடங்கினார்கள்.
சில நூல்களில்  சூத்திரர்கள் வேதம் படிப்பது கூடாது. அவர்கள்  ஒதுக்கப்பட்டவர்கள்  என்று எழுதப்பட்டுள்ளது.
புத்தர் தர்ம நூல்கள் மற்றும் மற்றவர்கள் சொல்வதை நம்பாதீர்கள் என்று  அறிவித்தார்.
 தன்  அனுபூதியால் உண்மையை ஆராய்ச்சி செய்யுங்கள்.
அதன்  அஸ்திவாரக்கற்கள் அதன் முழு தத்துவமும் நடைமுறையும் ஒவ்வொரு மனிதனையும் சமமாக கருதுவதில் தான் எழுப்பப்பட்டுள்ளது.
 அதற்கும் ஹிந்துத்துவத்தின்  சொந்த
உண்மையான எண்ணங்கள்  அப்படியே உள்ளன. அவருடைய எண்ணங்கள் வேகமாகப் பரவியது.
 உலகின் பல நாடுகளில்  பரவி   பின்பற்றப்பட்டது.
ஹிம்சை மற்றும் சுயநல மனித சமுதாயத்தில்  இது ஒரு
புதிய சூரியோதயமாக பிரகாசித்தது.
புத்தமதக் கொடி  எடுத்துக்கொண்டு பல இளைஞர்கள்
பலநாடுகளுக்குச் சென்றனர். அங்கே அவர்களுக்கு நம்பியதைவிட  அதிக வெற்றி கிடைத்தது.
புத்தமதம்  சங்கடத்தில் :- ஹிந்து சமயத்தின் மாற்றமும் எண்ணங்களின் சுதந்திரமும் புத்த மதத்தைப் பல பிரிவுகளாக பிரிந்துவிட்டது. புத்தமதத்தில்  மகாயானம் ,ஹீனாயானம் ,வஜ்ரயானம் ,சஹஜயானம் என்ற பல வழி
பிரிவுகளாக்கியது. அஹிம்சை அதிகமாக இருந்ததும் ,
ஒழுங்கற்ற நிலை ,கர்மகாண்டங்கள் அதிகரித்தது,
அதனால் போராட்டங்கள் அதிகமாயின. தங்களுடைய  தவறுகளைப்  போக்கி பழைய வேதகால பரம்பரையை மீண்டும் கொண்டுவருவது சரியென சமுதாயத்திற்குத் தோன்றியது. ஆறாம் நூற்றாண்டிற்குப் பிறகு  சில விசித்திரமான மாற்றங்கள் உண்டாகத்தொடங்கின .
புத்தமத  நூல்கள் சம்ஸ்கிருதத்தில் எழுதத்  தொடங்கினர்.
குமாரலிபட்டர் புத்த குருமார்களிடம் இருந்து சம்ஸ்கிருதத்திலேயே கல்வி பயின்றார். புத்தர் உருவ வழிபாட்டிற்கு எதிரானவர். ஆனால் அவர் மரணமடைந்த ஐநூறு ஆண்டுகளுக்குப்பின் அவருடைய சிலைகள்  அவரின் சீடர்களால்  உருவாக்கப்பட்டு வழிபடத்தொடங்கப்பட்டது.
இது மாற்றமடையும் காலமாக மாறியது. ஆனால் புத்தமதம் பல வெளிநாடுகளில் வேரூன்றி இன்றும் பின்பற்றப்படுகிறது.
பாரத தேசசெதேசீயக்கொடியின் நடுவில் இருக்கும் சக்கரம் புத்தமத ஸ்தூபியின் வடிவமே.அது தர்ம  சக்கரமாக விளங்குகிறது. காந்தீஜியின் அஹிம்சை செய்தியும் புத்தரிடமிருந்தே பின்பற்றப்பட்டது. டாக்டர் அம்பேத்காரும் அன்பின் அடிப்படையில் சமத்துவம் என்பதை  பகவான் புத்தரின் தத்துவத்திலிருந்துதான் ஏற்றார். நான் சுதந்திரம் ,
சமத்துவம் ,பந்துத்துவம் போன்றவற்றை பிரஞ்சு  புரட்சியில் இருந்து அல்ல ,பகவான் புத்தரின் எண்ணங்களில் இருந்து தான் பெற்றேன் பகவான் புத்தர்   கருணை , அன்பு,தயை மற்றும் அன்பின் பிரதிபிம்பமாக இருந்தார்.



















பக்தி உணர்வும் சமுதாயமும் --3


பக்தி உணர்வும் சமுதாயமும் --3


கபீர் தாசரும்  இந்த வையகக்  

கடலைத் தாண்ட ஹரியின் பெயர் மட்டுமே
 உதவியாகும் என்கிறார் .
குரு நானக்கும்  ராமநாமம்   ஜபித்தால்  மட்டுமே   

மு ன்னேற்றம் ஏற்படும்  என்கிறார்.
சாது தரியா   என்பவரும் ராமன் பெயரை
 ஜெபிக்காமல் உலக வினையில்  இருந்து
 விடுபடுவது கடினம்  என்கிறார்.
 சாதுக்களின் சேர்க்கை ,
ஹரி பஜனை இடைவிடாமல் 
ஜபிக்கவில்லை  என்றால்
வரும் ஜனன-மரண வருகையில்
 இருந்து தப்ப முடியாது.
அந்த சூழலில் சுற்றிக்கொண்டே இருப்பதுதான்நடக்கும்.
புனித நாமதேவரும்  ராமநாமம் தான்
மிக உயர்ந்த  பொருளாகும்  என்கிறார்.

  புனித சாது கபீர் ராமநாமம்  ஜபித்ததால்
தான்    உலகப் புகழ்பெற்று விளங்குகிறார்.
பிறவி எடுப்பதிலிருந்து  விடுதலை பெற்றுவிட்டார்.
  தாழ்ந்த    நேர்மையற்றுப் பிறந்த சண்டாளன்
  ராமநாமம்  ஜபித்தால்  உயர்ந்தவனாகிவிடுவான்.
உயர்ந்த குலத்தில் பிறந்தும்  ராமநாமம்
           ஜபிக்கவில்லை என்றால்  தாழ்ந்தவன்  ஆகிவிடுவான்.

இப்படி புனித  சாதுக்கள் பரம்பரை
ராம நாமம்  ஜெபிப்பதை
பகவான் பக்திக்கு  ஆதாரமாக ஏற்று
பிரச்சாரம் செய்தனர்.
 ஸ்ரீ குரு தேகபஹாதுர்  :-
 ஹரியின்  பெயர் எப்பொழுதும் சுகம் தருவது.
அஜாமில்  இறைநாமம்  சொல்லி முக்தி அடைந்தான்.
கணிகையும்  முக்தி அடைந்தாள்.
 பக்தியால் தான் மனிதனின் பெயர் உயர்கிறது .
ப்ருஹந்நாராதீய  நூலில் விஷ்ணுபக்த சாண்டாள்
பிராமணனை விட  உயர்ந்தவனாகவும்  பக்தி இல்லாத
பிராமணன்  சாண்டாளனாகவும் சித்தரிக்கப்படுகிறான்.
  இந்த பக்த கவிஞர்கள் வெவ்வேறு இனத்தை ஜாதியைச் சேர்ந்தவர்கள். ஆனால் எல்லோரின் கருத்தும் ஒன்றே .
ஹரிநாமம் தான்   உயர்ந்தது.இதில் ஜாதி-இன  -மொழி பற்றிய சிந்தனை  வீணானது.
பகவானை   பஜனை செய்யும்  அதிகாரம் உரிமை அனைவருக்கும்  உண்டு.
      ஜாதி -இனம் யாரும் கேட்கவே வேண்டாம். ஹரியை பஜனை செய்பவன்  ஹரியாகவே  ஆகிவிடுவான்.

எல்லா ஆன்மீக மஹான்களும்   கடவுளின் நாமத்தை ஜெபிப்பதே கடவுளை சந்திக்க  ஒரே  எளிய வழி  என்கின்றனர்.
இதில் ஜாதி-இன -உயர் குலம் -தாழ்  குலம்
 ஆகியவற்றிற்கு எவ்வித  மகத்துவமும் இல்லை.
பூஜை=கர்ம காண்டங்கள்
வெளி ஆடம்பரங்கள் ,மந்திரங்கள்,
சுலோகங்கள் ஆகிய எதுவும்  தேவை இல்லை.
ஹரி ஸ்மரணை  எளிதாக ஏற்றுக்கொள்ளுவதாக இருந்தது.
அதனால் எல்லா வேற்றுமைகளையும் போக்க
இது ஒரு முன்னுரையாக இருந்தது.
   


Wednesday, August 22, 2018

பக்தி உணர்வும் சமுதாயமும் -2.

நமது நாட்டில் ஆயிரக்கணக்கான
 ஆண்டுகளாக பக்தர்களின் நீண்ட
 சங்கிலித் தொடர் பரம்பரை
வந்து கொண்டிருக்கிறது. 
இதில் எல்லா ஜாதியைச்
சார்ந்தவர்களும் ,
இனத்தவர்களும் ,
எல்லா மொழியினர்களும்
வருகின்றனர்.
நாயன்மார்கள் ,ஆழ்வார்கள் ,
ராமானுஜாச்சாரியார் ,வல்லபாச்சாரியார் ,
நரசி மேத்தா ,
கபீர் ,ரைதாஸ் ,சங்கர் தேவ் ,
சைதன்ய மஹாப்ரபு ,
மீராபாய் ,ஆண்டாள்,சூரதாஸ்,
ஞானேஸ்வர் ,துக்காராம் ,பஸ்வேஷ்வர் ,
புரந்தரதாசர்,கம்பன்  முதலியோரின்
சங்கிலித்தொடர் பிரிக்கமுடியாதது.
இந்த பக்தி அடியார்களின்
இலக்கியத்தில் ஜாதிக்கு இடம்
எதுவுமே கிடையாது.
மீரா  ரைதாசின்  பக்தை  ஆனது
உயர்குல -தாழ்குல வேறுபாடற்றது.
ரஸ்கான்  முஸ்லிமாக இருந்தாலும்
 ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்.
அநேக ஆழ்வார்களும்
 நாயன் மார்களும்
 கீழ் ஜாதியினராக இருந்தும்
தன்  பக்தி மகிமையால்
 வணங்கத்தக்க சான்றோராக
 விளங்கினார்கள்.
விளங்குகிறார்கள்.
பக்தி மார்கத்தில் நாம ஜபம் ,
நாம சுமரினை மகத்துவம் நிறைந்தது.
வேதகாலத்தில் இருந்தே ஜெபத்தின் மகத்துவம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும் .
சத்யுகத்தில் தியானம்,
திரேதா யுகத்தில் வேள்வி ,
துவாபரயுகத்தில்
பூஜை  மூலம்  கிடைப்பதெல்லாம் ,
கலியுகத்தில்
இறைவன் நினைத்தால்
  ஹரி கீர்த்தனை செய்தால்
 கிடைத்துவிடுகிறது  என்று
விஷ்ணுபுராணத்தில்
 சொல்லப்பட்டிருக்கிறது.
கலியுகத்தில் யோகம்,ஞானம் ,
பக்தி  ஆகியவை அறிய வேண்டியதில்லை .
ராமரின் புகழ் பாடுவதே ஆதாரம் .
கடவுள் பெற கர்மம்,யோகம், பக்தி ,ஞானம்  தேவை.
ஆனால் சாமான்யனுக்கு நாம ஜபம் எளிது.
ஆகையால் சாதுக்கள் நாம ஸ்மரினை,
பெயர் ஜபம் செய்து ,
தங்களைத் தொடர்பவர்களையும்
நாம ஜெபத்திற்கு உபதேசம் செய்தனர்,
 

பக்தி உணர்வும் ஹிந்து சமுதாயமும் -1

          ஹிந்து சமுதாயத்தில் பக்திக்கு
  மிகவும் மகத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து படைப்புகளும் பகவானின் எல்லையற்ற
 லீலையின்   ஒரு சிறு பகுதி தான்.
 இந்த கருத்துப்படி அனைத்தும் இறைவனின்
கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றன என்று
பக்தியில் ஈடுபட்டு தன்மயமாகி   சுகத்தைப் பெறுகிறான்.

நாரதரைத்தான் நாம் பக்தியின் ஆதி  மனிதன் என்று ஏற்கிறோம் .
 அவர் விஷ்ணு  பக்தர். திரிலோகசஞ்சாரி .
மூன்று உலகங்களிலும் இறைவன் புகழ்பாடி
அதிலேயே ஆனந்தம் அடைபவர்.
  பக்தி உணர்வில் எவ்வித வேறுபாடும்  இல்லை.
எல்லா அசையும் அசையா படைப்புகளில்
கடவுளை உணர்வுதான் பக்தி. 
நடப்பதெல்லாம் இறைவனின்  விருப்பப் படியேதான்  நடக்கும்.
எல்லா உயிரினங்களுக்குள்ளும் பரமாத்மா  வாழ்கிறார்.
பக்தனின் உணர்வில்  அனைத்துமே அவன் வடிவமே.
கடவுள் மேல் பக்தி இருந்தால் எந்தவேறுபாட்டையும்
மனித மனம் ஏற்காது, சிறியவன் -பெரியவன் ,பணக்காரன் -ஏழை ,நகரத்தான் -கிராமத்தான் ஹரிஜன் -பிராமணன் 
அனைவருமே பகவானுக்கு முன்   சம மே .

Monday, August 20, 2018

சமுதாய சமரசமும் நமது நாட்டு சாதுக்களும்

சமுதாய  சமரசமும் நமது  நாட்டு சாதுக்களும்

நமது  நாட்டில்  அந்நிய ஆட்சியில்   மக்கள் அச்சமும் பீதியும்  அடைந்து வருத்தமும் துன்பமும்  அடைந்த போது பாரத பக்தி ஓட்டமும் ,சாதுக்களும்
சமுதாயத்தில்  புதிய வாழ்க்கையை  ஆரபித்தன. இடைக்கால பக்தி  இலக்கியங்களும் ,காவியங்களும் ,சாது இலக்கியங்களும் காலத்தை வென்று
இலக்கிய ஒழுக்கத்தை   உணரவைத்துக் கொண்டிருக்கின்றன.இந்த  சாதுக்களின் உலக அறங்களும் மனிதநேய  பங்களிப்பும் எண்ணக்கூடியதும்
சிந்திக்கக் கூடியதும்  ஆகும். சாதுக்கள் இடைக்கால  சமுதாயத்தில்
பரவியிருக்கும்  மாற்றங்கள், ஜாதி- சம்பிரதாய அடிப்படையில்   சமுதாயத்தில் ஏற்படும் வீழ்ச்சி முறைகள், பிரிவினைஏற்படுத்தும்   மாற்றங்களை கடுமையாக விமரிசித்து அறைகூவல் விடுத்தனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்  இந்த ஜாதி -சம்பிரதாய வேறுபாட்டை மிகைப்படுத்தி திட்டமிட்ட சூழ்ச்சி மூலம் தாழ்த்தப்பட்ட  இனம் என்று சொன்ன சம்பிரதாய மக்களை சமுதாயத்தில் இருந்து பிரித்து மதம் மாற்றம் செய்வித்தனர். அதன் காரணமாக  இன்றைய சூழலில் எல்லா சாதுக்களின் இலக்கியங்களும்
புதிய தூண்டுதல்கள்  அளிக்கும் திறனைப் பெற்றுள்ளன..கபீரின்  எதிர்ப்புக்குரல் ஜாதி வேறுபாட்டின் அடிப்படை ஆதாரங்கள்,,போலிகள்,மற்றும் தீண்டாமை எதிர்ப்புகள் , துளசி ராமாயணத்தில் அரசகுடும்பத்தைச்  சேர்ந்த
ராமர் படகோட்டி குகனை   அரவணைத்தல் ,கோல்,கிராத்து ஜாதி களிடம்  கிழங்கு வாங்கி சாப்பிடுதல், சபரியின் எச்சில் இலந்தைப்பழம்  வாங்கி சாப்பிடுதல் , அவர்களிடம் ஜாதி பற்றிய கேள்விகளோ சிந்தனைகளோ இல்லை. இவைகளுக்குப்பின் எழும் குரல்  மனிதர்களை மையமாக வைத்து
மனிதத்தன்மை ,மனித நேயத்தை ஆராதிப்பதே.  சாதுக்கள் மஹான்கள் கூறிய
ஒற்றுமை ,மனிதநேய கோட்பாடுகளை வேள்வி ,பூஜை செய்ப்பவர்கள் தலித் என்று வெறுக்கப்பட்ட நிலையும் மனிதநேயத்தின் சுவாபிமானதாக நிலைத்து விட்டது.

Friday, August 10, 2018

மன நிம்மதி

மனித மனம் இறைவனையே துதித்தாலும் இறையச்சம்
இருந்தாலும்
நேர்மை யாக இருக்க

இறைவன் முன் உறுதிமொழி
எடுத்தாலும் அது உலகியல்
மாயை முன் பிரசவ வைராக்கியம் ஆகி
விடுகிறது .
வலி பிரசவ வலி தாங்காமல்
மனைவி துடிப்பது கண்டு
கணவனும் மனைவியும்
இனிமேல் குழந்தை வேண்டாம்
என்று சபதம் எடுத்தாலும்
அந்த சபதமும் வைராக்கியமும்
அந்த வலி வேதனையும் மறந்து
குழந்தைக்கு ஆசை . அடுத்த சில
மாதங்களில் .

மயான வைராக்கியம் தலைவரோ , நண்பரோ ,
உறவினரோ இறைவனடி சேர்ந்த பின்
இதுதான் வாழ்க்கை .
இருக்கும் வரை நேர்மையாக, ஊழலின்றி இருக்க உறுதி மொழி பூண்டாலும்
கையூட்டு ,மீண்டும் ஊழல் , பொய்யான
வாக்குறுதி என்றே உலகியல் வாழ்க்கை.
இப்படியே நாம் உலகியல் ஆசை பந்தங்களில்
நடுநிலை தவறி , வாக்கு தவறி , நேர்மை தவறி ,
சத்தியம் விடுத்து இறைவன் மேல் உள்ள பயம் மறந்து, அவனால் தரும் உடல் , நோய் , மனக்கஷ்டம் , பதவி ,பொருள் , அதிகாரம் இருந்தும் நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்ந்து மடிகிறோம் .


நமக்கு வரும் இன்னல் கள் , நோய்கள் ,வறுமை ,வெறுமை , இன்பங்கள் , துன்பங்கள் ,
அனைத்திற்கும் வினைப் பயன் தான் காரணம் .
நிச்சயம் நாம் நமது தீய செயல்கள் மறந்து உணர்ந்து திருந்தி வாழ்ந்தால் வையகம் புகழும் . நம் சுற்றத்தார் புகழ்வர்.
நமக்கு வேண்டியது இது தான்
இறைவன் மீது பக்தி ,இறைவன் இன்னல் தருவான் என்ற எண்ணம் ,
இறைவன் மீது முழு நம்பிக்கை .
தவறான செய்கை, தவறான பொருள் சேர்க்கை ,

தவறான பதவி உயர்வு , தவறான பதவி , அதிகார துஷ்ப்பிரயோகம் தனிமையில் மகிழ்ச்சியோ , நிம்மதியோ , உண்மையான மன அமைதியோ , மன நிறைவோ தராது. மனிதர்கள் மனமகிழ்ச்சியுடன் ,மன நிறைவுடன் , இன்னலின்றி வாழ பக்தி மார்க்கமே சிறந்தது. அதை நூறு சதவிகிதம் கடைபிடிக்க வேண்டும். அந்த மதிப்பெண் அவன் போட்டு சுகமோ ,துன்பமோ ,மகிழ்ச்சியோ தருவான்.