Tuesday, January 24, 2017

ராமசரிதமானஸ்----பாலகாண்டம் --ஐம்பத்தாறு.

 
   ராமசரிதமானஸ்----பாலகாண்டம் --ஐம்பத்தாறு.

    கைகேயி யும் சுமித்திராவும் அழகான புத்திரர்களைப் பெற்றனர்.

 அவதியின் அழகு இரவு -பகல் இரண்டும்
சேர்ந்ததுபோல் இருந்தது.
மாலைநேரமும் கலந்து வந்தது.
ஊதுபத்தியின் புகை இருள் மாலைநேரம்.
 அபீர் சிவப்பு வண்ணக்கலவை பறந்து கொண்டிருந்தது.
 அரண்மனையில் மின்னிய மணிகள்-ரத்தினங்கள்
நக்ஷத்திரங்கள்.
அரண்மனை கலசம் நிலவு .
இவ்வாறு பகலும் இரவும் மாலைநேரமும் கலந்த அவதி
 மிகவும் சோபித்தது.
அரண்மனையில் ஒலித்த  வேத மந்திரங்கள்
காலத்திற்கேற்ற
புள்ளினங்களின் பாடல் போல் இருந்தன.

  ஒருமாதமாகிவிட்டது. சூரியன் தன்  தேருடன்
 அங்கேயே நின்றுவிட்டான்.
பிறகு இரவு எப்படி வரும் ?
 இந்த ரஹசியத்தை  யாரும் அறியவில்லை.
சூரிய பகவான் ராமரின் புகழ்பாடி சென்றுவிட்டார்.
இந்த மஹோத்சவத்தைப்  பார்த்துவிட்டு
தன் பாக்கியத்தைப் தாங்களே
புகழ்ந்து கொண்டு தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பி சென்றனர்.
 
சிவன் பார்வதியிடம் சொன்னார் :--
நீ ராமரிடம் உண்மையான பக்தியும்
 உறுதியான அன்பும் கொண்டுள்ளாய்.
 அதனால் உன்னிடம் ஒரு ரஹசியத்தை   சொல்கிறேன்.
 நானும் காக்புஷண்டியும்  மனிதவடிவில் அங்கு இருந்தோம்.
ஆகையால் எங்களை யாரும் அறியவில்லை.
  பரம ஆனந்தத்துடனும்  அன்புடனும் மிக மகிழ்ச்சியுடன்
அங்கு சுற்றிக்கொண்டிருந்தோம்.
ஆனால் இந்த சுபமான  நிகழ்வை ராமரின்
 கிருபை உள்ளவர்கள் தான் அறிந்து கொள்ள முடியும்.

    இந்த சுப நேரத்தில் அரசன் அனைவரின்
 மனம் விரும்பியபடி தான-தர்மங்கள் செய்தான்.
 யானை, குதிரை ,தேர்,பசுக்கள்,வைரங்கள்,
வித விதமான ஆடைகள் கொடுத்தான்.
 அரசன் அனைவரையும் திருப்திபடுத்தினான்.
இதனால் அனைவரும் ஆழ்மனதில் இருந்து
 குழந்தைகளை சிரஞ்சீவியாக இருக்க ஆசிகள் வழங்கினர்.

இவ்வாறு சில தினங்கள் கழிந்தபின் ,
அரசர்  தன் குரு வசிஷ்டரை
தன் மகன்களுக்கு  பெயர் சூட்ட அழைத்தார்.
அப்பொழுது குரு அரசரிடம் இவருக்கு
ஒப்பிடமுடியாத பல பெயர்கள் இருக்கின்றன.
இருப்பினும் என் அறிவுக்கேற்ற பெயரை சொல்கிறேன்.
 
 ஜ்யேஷ்ட புத்திரர் ஆனந்த சமுத்திரமும்
 சுகத்தின் நிதியுமாவார்.
அவர் மூவுலகிற்கும் சுகம் அளிப்பவர்.
உங்களின் மூத்தமகனின் பெயர் ராமர்.
அவர் அகில உலகத்திற்கும் அமைதி அளிப்பவர்.

இரண்டாவதாக உலகத்தையே  வளர்ப்பவர்,
அவருடையபெயர் பரதன்.
மூன்றவதாக உள்ளவனை நினைத்தாலே
விரோதிகள் அழிந்துவிடுவர்.
அவன் பெயர் சத்துருக்னன்.
நல்ல லக்ஷணங்களுடன் ராமரை அதிகம் விரும்பும்
புத்திரன் அவன் பெயர் லக்ஷ்மணன்.
குருஜி நன்றாக சிந்தித்து ஆலோசித்து
 இந்த பெயர்களை  சூட்டினார்.
 பிறகு அரசனிடம் ,அரசே ! உங்கள் நான்கு புத்திரர்களும்
வேதங்களின் தத்துவங்கள்.
சாக்ஷாத் பராத்பர பகவான்கள்.
முனிவர்களுக்கு செல்வம் போன்றவர்கள்.
பக்தர்களுக்கு சர்வமும் அவரே.
சிவனுக்கு அவர் உயிர் போன்றவர்.
இப்பொழுது அவர் உங்களுக்காக பாலலீலைகள்
புரிவதை சுகமாகக் கருதுகிறார்.
லக்ஷ்மணன் குழந்தைப் பருவத்திலிருந்தே
ராமரை மிகவும் நலம் விரும்பி என அறிந்து
அவருடன் தன்னை இணைத்துக்கொண்டார்.

பரதனுக்கும் சத்ருக்கனனுக்கும்ராமர்
சுவாமி . இருவரும் அவர்களின் அன்பிற்குப்
பாத்திரமான தொண்டர்கள்.
 கருப்பும் வெள்ளையுமான
இரு மகன்களின் ஜோடிப் பொருத்தத்தையும்
அன்பையும் கண்டு   திருஷ்டி கழித்தனர்.
நான்கு சகோதரர்களும் ஒழுக்கம்,அழகு,
குணங்களின் இருப்பிடமாகத் திகழ்ந்தனர்.
ஆனால் ராமரிடம் இவைகள் சற்று அதிகமாகவே காணப்பட்டது.

 ராமரின் இதயத்தில் கருணை என்ற நிலவு பிரகாசித்தது.
அவருடைய மனோஹர சிரிப்பு
 அந்த கருணை என்ற நிலவின் கதிர்கள்.
 அம்மா மடியிலும் ,தொட்டிலிலும் அவரை மிகவும் கொஞ்சுவாள்.
  இன்று கௌசல்யாவின் அன்புக்கு கட்டுப்பட்டு
மழலைச் செல்வமாக  விளையாடும் ராமர்
பகவான்.சகல லோகத்திலும் வியாபித்திருப்பவர்.
 பிரம்மா.  பிறவியற்றவர். விநோதமில்லாதவர். மாயையில்லாதவர்.

Post a Comment