Saturday, December 27, 2014

இறை அருளார் கூறும் அறவுரை.

உள்ளம்  உலகியலுக்கே தரும் முதலிடம்.-அவனியில் 

உள்ள தெல்லாம் உண்மையல்ல---அதில் 

உள்ளப்போராட்டம் ,உள்சுழல் ,வெளிசுழல் 

சுழலில் சுழன்று சூக்ஷமம்  மறந்து --சுகம் 

சுற்றமும் நட்பும் என்றே  உழன்று மெய் 

மறந்து முறை மறந்து  காலம் மறந்து 

காலன் வரும் நேரத்தில் கண் கலங்கி என்ன பயன் ?

அசாஸ்வத உலகை சாஸ்வதம் என நினைத்து 

அசாத்ய சாதனைகள்  பல புரிய 

அன்றாடம் உழைத்து அலுத்து அலைந்து 

அவனை சிவனை உலகநாதனை மறந்து ,
ஆஸ்திகள் சேர்த்து ஓய்ந்த காலம் ,
உற்றார் -சுற்றத்தார் வெறுக்கும் நேரம் 
உலகநாதனை உள்ளத்தில் அமர்த்தி என்ன பயன்?

ஊரார் போற்றும்  வினைகள் பல செய்தாலும் 

உலகம் போற்றும் உத்தமர் ஆனாலும் ,

உலகை விட்டு உயிர் பிரியும் காலம் வரும்,-அதனால் 

வேதங்களும் ஆன்மீகப் பெரியோரும் 

மதங்களும் இறையாளர்களும் கூறும் அறிவுரை:-

மன்னில் இருக்கும் மனிதர்கள் மற்றவை படைக்கும் 

பகவானை அறியுங்கள் ;

பகவானை பிரார்த்தனைசெய்யுங்கள்,

பாரினில்  அமைதி ,மனநிறைவு ,இன்னலின்றி 

மன உறுதி வாழ்க்கை -இதெல்லாம் 

இறைப்பற்று ,தியானம்  ஒன்றே.

இதை மீண்டும் மீண்டும் சொல்வதே 

இன்றைய இளம் தலைமுறைக்கு உகந்ததென்றே 

இறை அருளார் கூறும் அறவுரை.








           







Saturday, December 20, 2014

மனசாந்தி அடைவான் அன்பன்

 ॐ शरवणभव.


ஷண்முகம் சத்குணம் ஷைவம் குமாரம் குலபூஷணம்

தேவசேனாம் பதிம் வந்தேசர்வ  கார்யார்த்த சித்தயே;

அனைத்திலும் வெற்றி பெற அவனியில் 

அவதரித்த அருட் தெய்வமவன் ஆறுமுகம் .

அழகின் அவதாரம் அபிஷேகப்பிரியனவன்.

அறுபடைவீடுகளில் அவன் அருளாடல் 

அன்பர்களுக்கருளும் திருவிளையாடல்.

ஆண்டிவேடம் பூண்டு அலங்காரப்பிரியனாகி 

அரசாலங்காரத்தில்அத்புத அருளாளன் அவன்.

அவனடி பணிந்து அடைக்கலமடைந்தோருக்கு

அருள்மழை பொழிந்து இன்னல்தீர்க்கும் இனியவனவன்.

யானைமுகத்தம்பியவன் ",யாமிருக்க பயம் ஏன்?"என்றே 

யாவரையும் காக்கும்  யம பயம் நீக்கும் ப்ரத்யக்ஷமவன்.

பிரார்த்தனை   செய்தோர் பிரகாரம் செய்வோர் 

பலன்கள் பெரும் அதிசயம் புரியும் பழநிமலைவாசன்.

அவனடிசரணடைந்து மனமகிழ்ச்சி மனசாந்தி அடைவான் அன்பன்.







Friday, December 19, 2014

அவனியின் அமைதியும் உண்டு /

சனாதன தர்மம் ,
அதில்  சகலமும் சங்கமம்.

ஞானமும் உண்டு ,
பிரேமையும் உண்டு ,
அருவமும் உண்டு .
உருவமும் உண்டு .
உள்ளத்தில் உறவும் உண்டு ,
எண்ணத்தில் ஏற்றம் உண்டு -

அன்பிற்கும் அஹிம்சைக்கும்

மார்க்கம் உண்டு.

வையகம் வாழ ,

வையகம் ஒரு குடும்பம்  என்ற

அவனியின் ஒற்றுமைக்கும்

வாசகங்கள்  பல உண்டு.

வள்ளலாரின்  வாக்கியம்

அருட்பெருஞ்சோதி ,
அருட்பெருஞ்சோதி
தனிப்பெரும் கருணை  என்ற
வாசம் உண்டு.
சிந்துவை ஹிந்து என்று
அயல் நாட்டினர் கொடுத்த சொல்லே
மதமானது என்றால்
அதன் சாகர சங்கமத்தில்
சைவமும் உண்டு .
வைணமும் உண்டு.
அறிஞர் பலர் ,ஞானிகள் பலர் . அதனால்

சைவத்திலும் வைணவத்திலும்

பல பேதங்கள் உண்டு.

கிரமதேவதைகள் உண்டு.

ராமாயணம் ,மகாபாரதமும்

நாடோடிப்பாடலிலும் உண்டு.

நாட்டு நலம் மட்டுமல்ல
சர்வஜனோ சுகிநோபவந்து என்ற
உலக மக்கள் நலமாக வாழும்
பிரார்த்தனைகளும்  உண்டு.
கன்னப்பருக்கும் பெருமை உண்டு .
நந்தனாருக்கும் நற்புகழும் உண்டு.
சனாதன தர்மத்தில் சாகர சங்கமும்
அவனியின் அமைதியும் உண்டு /.









,

கடவுள்

  இறைவன்
 இரைஅளிப்பவன்.

இகபர சுகம் அளிப்பவன்.

சத்தியமும் அசத்தியமும்

ஜகத்தினில்  காட்டுபவன்.

அஹிம்சையும் ஹிம்சையும்

அவனியில் காட்டி ,

மனதில் ஈவு இரக்கம் கொடுத்தவன்

ஈஸ்வரன்.

ஈஷ்வரனின்  லீலை .
அதி அற்புதம் ;
அதி  அதிசயம்
அதி  ரகசியம்.
அவன் உணர்வு ,
அவன் தியானம்- அதி
பேரானந்தம்.
சிவ-சிவ- என்று சொல்
சித்தம்  சிதறாது.
சிவகுமரனின் ஆராதனை
சிக்கலைத் தீர்க்கும் .
சித்தி விநாயகரின் ஆராதனை பல
சித்திகள் தரும்.









Thursday, December 18, 2014

அக அமைதி அக மகிழ்ச்சி பெறுவோம்.






ஆறுமுகம்  நாம்  காணும் ஆசைமுகம்

அன்புமுகம் ;அருள்முகம்;

அறுபடை வீட்டினில் ஆறுமுகம்

அன்பருக்கு அருளும் நன் நெஞ்சம்.

வடக்கே இருந்து வந்து ,

தென்னகம் காக்கும்  கலியுக தெய்வம்.

தேனும் தினைமாவும் விரும்பும் பிரசாதம் ,

பஞ்சாமிர்தம் அவனுக்கு  பிடிக்கும் .

பாலாபீஷேகப் பிரியனவன் ,

பாலமுருகனவன்  பழனியிலே.

தகப்பன் ஸ்வாமியவன் சுவாமி மலையினிலே.

அருணகிரி பிழைபொறுத்து

திருப்புகழ்  படவைத்த தமிழன்பன்.

தாயைப்பாட மறுத்த பொய்யாமொழியை
முட்டையைப்  பாடவைத்த முருகனவன்.

கிருபானந்தவாரியாரின் அருட் கடவுள்,

பாம்பன் சுவாமிகளுக்கு காட்சி

அளித்த  மயூரநாதன் .

அவனியில் அவன் லீலை சூர சம்ஹாரம்.

அவன் மெய்ப்பதம் போற்றுவோம் ,

அக அமைதி அக மகிழ்ச்சி பெறுவோம்.



யானைமுகன் அருளவேண்டும்.




முருகா , முருகா ,முருகா -என்றே 

நெஞ்சுருக  நேசமிக்க நாம ஜபம் 

நாளும்  ஆழ்மனம் வைத்து செப்பினால்- நாம் 

விரும்பும் பலன்கள் பெற வித்தாகும்.

வித்தாகி விருக்ஷமுமாகி  பூவாகி 

காயாகி ,கனியாகி ,சுவையாகி 

தித்திக்கும்  வாழ்க்கையது.

ஜன்மப் பகை நீங்கும் ,
ஜனன தோஷம் நீங்கும் 
ஜகத்தினில் பாவம் போகும் ,
ஜாமம் எட்டிலும் பயம் போகும்.

ஜாக்கிரதை என்றசொல்லுக்கு இடமில்லை,
சரவணன் சடுதில் வந்து காப்பான்.

சத்தியம் வேண்டும் ,
ஒருமை மனம் வேண்டும் ,
மனதினில் நேர்மை வேண்டும் ,
மனம் முழுதும் முருகனின் 
மூலம் வேண்டும்;
வேல் வேண்டும் ;அவன்
 கொடி சேவல் வேண்டும்.
மயில் வாஹனம் வேண்டும் .
அகம் முழுதும் ஆறுமுகன் 
எண்ணம் வேண்டும்.
சித்தம் முழுதும்  சிங்கார வேலன் 

சிந்தனை வேண்டும்.
அலைபாயும் ஆசைகளை 
அடக்கவே வேண்டும் .
ஆறுமுகம் கருணை பெற 
யானைமுகன் அருளவேண்டும்.




Saturday, December 13, 2014

அவன்விதி ஆண்டவன் அசைவில்.

 பாரினில் பகவான்  இல்லை என்றும் 

உள்ளான் என்றும் 

தர்மம் அதர்மம்  இதில் 

தர்மம் தவித்தலும் 

அதர்மத்தின்  ஆராவாரமும் 

அனுதினமும்  பார்க்கும் காட்சிகள்.

நீதிமன்றதீர்ப்புக்குப்பின்னும் 

தீர்ப்பு ஏற்கா மக்கள் கூட்டம்.
இது  இன்றா ,நேற்றா 

புராண காலம்  முதல் இன்றுவரை,
ஹரிச்சந்திரன் காலம் ,
பிரஹலாதனின் காலம் 
ஏகலவ்யனின் கதை 
என்றெல்லாம் நாம் படித்து அறிந்தும் 

தெளிவு பெறாதது யார் குற்றம்?

பணம்  குவிக்க அதர்மம் ,
அதர்மத்தை தர்மமாகக 
தான தர்மம்.
விந்தையிலும் விந்தை மனிதன்.
விதியையே மதியால் மாற்றும் 

அதி புத்திசாலி.
ஆனால் 

அவன்விதி ஆண்டவன் அசைவில்.


Tuesday, December 9, 2014

வையகத்தில் இன்பம் பெற !

  ஞானம்  கொடுத்தாண்டவன் ,

ஞாலத்தில் படைத்தான்

 பல மொழிகள்.

இறைவன் படைப்பில்

 எவற்றிலும் ஒரு மேன்மை.

தீயவை  அழிப்பில்

மனிதனுக்கு சக்தி.

கொசுக்கள் ஏன்?

அறிவுள்ள மனிதன்

 தேக்கிவைக்கும்

கழிவுநீரால்.

இயற்கையையும்  தேக்கி

இயல்பாக  வாழும் ஆற்றல்,

பனி மழை,

வெளியே

சில் சில்
காற்று.

வீட்டுக்குள்

அனல் காற்று .

இது அறிவியல் அறிவு .

அவன் அளித்தது.

ஆனால்  தக்க ஆடை இன்றி

உலாவு வது  கடினம்.-இது

இறைவனின்  எச்சரிக்கை.--நான்

அளித்த ஞானம்  ,

ஒருவரையரையுள்

உன் வெற்றி.

என் சக்தி  உணர்ந்தேசெயல்  படு.

என்னை உணர்ந்தே செயல் படு.

எண்ணியே  செயல் படு.

சித்தத்துள் என்னை வை.

சிந்தனையில் என்னை வை .

சீரிய வாழ்வில்

சத்தியத்தைக் கடைப்பிடி.

சாந்தியைப் பெறுக,

சந்தோசம்  பெருக.!.

வையகத்தில்  இன்பம்  பெற !







Monday, December 8, 2014

அகத்தில் அமர்த்தலாம் குடி.

ஆண்டவனைத் தேடிச்செல்வோர் ,

அறிவிலிகள் ;

ஆண்டவனைத் தன்னிடத்தே வரவழைப்போர்

ஞானிகள்.

ஆஷ்ரமங்களில்  கூட்டம் கூட்டுவோர்

ஆனந்தம் உணர்வோர்  --ஆனால்
அங்கும் உண்டு எத்தர்கள் .

ஞானம் தரும் இடங்கள் ஆஷ்ரமங்கள்,

அக்ஞானம் ஒழிக்கும் இடம் ஆஷ்ரமங்கள்.

அன்னதானம் வழங்கும் இடம்  ஆஷ்ரமங்கள் .

அங்கு  சேரும் பணங்கள் ,

சிலருக்கு பாதை மாற்றும்

      பலருக்கு போதை தரும்.

அதில் சேரும் சொத்துக்கள்

உடனடி தானதர்மங்கள் ஆனால்
உள்ளத்தில் இருப்பான் ஆண்டவன்.

உண்மை  தோற்றங்கள் ஜீவசமாதி ஆனபின்
வழித்தோன்றல்கள் வழிமாறி திசைமாறி
வசை மாரி யில் குளித்தே
வஞ்சகம் பல புரிவார்.--எனவே

நெஞ்சகத்தில் அவனை வைத்து
நேர்மையுடன் பூஜித்தால் .இச்
ஜகத்தில் இன்னலின்றி
ஜகந்நாதனை  அகத்தில்
அமர்த்தலாம் குடி.





Sunday, December 7, 2014

இன்பமே !சமரசமே!சமத்துவமே !!சாந்தியே!!

பாரினில் பகவான் உள்ளான்  என்பதை

பரிதியின்  பிரகாசம் பிரதிபலிக்கும்.

பரிதியின் வெப்பம்   தணியும் போது

நிலவின் குளிர்ச்சி தெளிய வைக்கும்

வைகறைப் பொழுதில் பனித்துளிகள்

இறைவனின் இயற்கையைச் சித்தரிக்கும்.

இயற்கையின் மாற்றங்கள் ,

இயற்கையின் இன்பங்கள் ,

இயற்கையின் இன்னல்கள் ,

இயற்கையின் படைப்புகள்

இறைவனின் லீலைகள். இதற்கிடையில்

அறிவியல்  அற்புதங்கள் -அதில்

அநேக மாற்றங்கள் , அவைகளை
அனுபவிக்க  பொருளாதார
ஏற்ற தாழ்வுகள்.


இயற்கைசெல்வங்கள்

ஏற்ற-தாழ்வு பார்ப்பதில்லை .

இயற்கை இன்பங்களில்

சமத்துவமே.

இயற்கை இன்னல்களில்

 சமத்துவமே.

இயற்கையின்  பிறப்பில்

சமத்துவமே.

இயற்கையின்  இறப்பில்

சமத்துவமே.

பூவின் இயற்கை ஆனந்தம்

பூவின்  மனம்  இயற்கை ஆனந்தம்

இதில்  இல்லை ஏற்றத்தாழ்வு.

இயற்கை  செயrகையானால்  அதில்
அழகு  புட்டியில் அடித்தல்
ஏற்றத்தாழ்வுகள்.

இயற்கை ஆண்டவனின் இயல்பு

இதிலே சமத்துவம்.

இறைவனை  உணரும் ஆனந்தம்.

ஆலயங்களில் அடைத்து வைத்தால்

அங்கே ஏற்றதாழ்வுகள் ,

அன்புள்ள இறைவனை
இயற்கையாக வழிபட்டால்

இன்பமே !சமரசமே!சமத்துவமே !!சாந்தியே!!








Saturday, December 6, 2014

vruddhaavastha
वृद्धावस्था 
अवस्थाएँ   चार  तो 
बालावस्था  में अवलंबित ,
जवानी में वीर धीर  गंभीर 
जवानी का जोश.
प्रौढावस्था   एक तरह का ढीलापन 
वृद्धावस्था तो बैठकर सोचना 
कैसा था गुजारा हुआ ज़माना?
हम ने क्या सोचा ?
हमने क्या किया?
हमने कितना कमाया ?
कितना भोगा ?कितना त्यागा?
अच्छे  कितने ?बुरे कितने ?
कितने  को लाभ पहुँचा?
कितने को बुरा/
कितना प्यार मिला? कितना नफरत ?
कितना खोया?कितना पाया?
कितनी सम्पत्ती जोड़ी ?
कितनी  छोडी?
कितनों को छेड़ा?
कितनों  को छोड़ा?
इतने हिसाब -किताब ?
उठने का बल नहीं ?
घुटने के बल सरकना भी दुर्बल.
विचारों की तरंगें तो उठती रहती है.
जब तक साँस,तब तक आशा..
झुर्रियों का चेहरा ,
हाथों का कम्पन 
पर  विचारोंके ज्वार -भाटा
यही है विरुद्धावस्था   वृद्धावस्था  में.

Friday, December 5, 2014

அருள் தருவாய் ஆண்டவரே.

அவனியில் அவனை உணர்ந்தார் ,
 அகமகிழ்ந்தார் ,அவனைப் புகழ்ந்தார் .
அகாராதியில் சொல் இல்லை,
 அகிலத்தில் நாட்டம் இல்லை,
அகிலம் நிலையில்லை.
அகில சுகம் நிரந்தரமில்லை.
ஆண்டவனே  எனக்கெல்லாம் .
வேண்டியது நான் பெறவே 
வேண்டாத தெய்வமில்லை.
அதிகம் எனக்கு ஆசையில்லை.

பத்து ஏக்கரில் ஒரு ஆஷ்ரம்,
அவனே நான் என்று அமர 
ஒரு பொன்னால் வேய்ந்த அரியாசனம்,
என் புகழ்பாட ஒரு கூட்டம்.
சீடர்கள் கூட்டம் வரவேற்க ,
சிஷ்யாக்கள் கூட்டம் சேர,
உன்புகழ் பாட ,என் தனம் சேர,
தானம் செய்ய ;தர்மம் செய்ய;
உன்னை  மறந்து நானே நீயாக 
அகிலத்தில் பவனி வர 
அருள் தருவாய் ஆண்டவரே,




Wednesday, December 3, 2014

PRACTICAL WORLD



EVERY ONE KNOWS
 THE MERITS AND DEMERITS OF   
DISHONESTY.
BUT 
IN THIS PRACTICAL WORLD SOME
MATERIAL  BENIFITS  
MAINLY MONEY  DIVERTS   HIM

 TO DO    ANY THING  AGAINST  HONESTY.


ONE MORE THING BLOOD RELATIONS AND FRIENDS

HOW  CAN HE    ESCAPE?
ONLY ONE SOURCE  AND PUNISHMENT 

CREATED BY THE  CREATER.
AGE     AND DEATH.
THIS IS PRACTICAL   AND ALSO THEORITICAL.
NO ONE CAN  SAVED HIMSELF   WITH HIS MONEY 
OR   HIGHER POSTS.
SO   SINS SALARY IS  DEATH.

His quick treatment.

                                                           in this modern world
 many   want  a honest life .
but 
money ,need of money ,
keeps  silent  on few dishonest.
why?
fear?
no.
they can't do against any thing  ,because 
those  merciless  characters are created by almighty.
He will do correct thing in correct time.
we should pray for His quick treatment.

ஞாலத்தில் ஆண்டவன் அருள் கிட்டும்.

அன்பே  ஆண்டவன்  என்றார்  ,
 அறிவும் ஞானமும் ஆண்டவன் என்றார் ,
 ஞானம் பெற்றோர்
உலகியலுக்கு உள்ளத்தில் இடம் அளித்தால்
உள்ளத்தில் ஊறு என்றார்.
எண்ணத்தில் ஏற்றமும் ,
உதவும் போக்கும் ,
ஞானத்திலே கண்டார்.,
ஞாலத்தில் இன்பமே இல்லை என்றார்.
நான்குவகை உணர்வுகளற்ற நிலை
அன்பே  என்றால் ஆண்டாள் ,
அனுதினமும் மூவெட்டு மணியும்
அவனையே நினைப்பதை
அவனியில் கூறியோர் ,
உலகியலில் சுழன்று  வந்தோர்.
அருணகிரி  ,பர்த்ரு ஹரி ,பட்டினத்தார்
பட்டறிவு  நமக்கும் பட்ட பின்பே,
கண்ணதாசன் பட்டறிவு அர்த்தமுள்ள  ஹிந்துமதம்.

இது ஆரம்பத்தில் இளமையில்  சொன்னால்

ஒத்தவயதில் ஒப்பாது.

முதுமையில்  சொன்னால் ,
பெருசுசொல்லுது என்பர்.
அதற்கென்று ஞானம் பெற்றோர்  சொல்லால்
அவனி பெரும் சாந்தி.
அவனிடம் பெருகும் பற்று.
பகலவன் கண்ட பணிபோன்று
துன்பங்கள்  அகன்று
இன்பங்கள்  தெய்வீக பற்று பெருகும்.

ஞானமும் அன்பும் வந்தால்
ஞாலத்தில் ஆண்டவன் அருள் கிட்டும்.

s



Monday, December 1, 2014

prayer

what  a wonderful and  strange world ,

where we are living .
we are believing  two authorities.

one is govt. and other is spiritual.
modern age when we  open
the page of news paper,

we  can read the news   which says 

both are corrupted.
both  are willig money ,
they  never think black or white.
now those are totally surrender towards the God
our prayer should   be 
as follows:
oh  Almighty ! protect the world 
from these corrupted fellows  
who are supporting  bribery , corruption ,and black money  and fifth colmnist.

Sunday, November 30, 2014

ஆனந்தம் ;பரமானந்தம் ; அவனியில்.

 
        ஆனந்த உலகியல்  வழியில்

        ஆண்டவன் புகழ் பாடி ,

          அவனியில் தர்ம நெறி .

         அவனின்றி ஒரு அணுவும் அசையாதென்று.-- இருப்பினும்

          அவன் ஆண்டவன் ,இறைவன்  என்று

           அவன் நாமம் சொல்லி  வாழ்க்கையில்

             அஞ்சாமல் ஏமாற்றும் எத்தர்கள்.-அவன் பின்

            அனுவிரதம் இருக்கும் பக்தர்கள் .-அறிவு


          அளித்தும் ஆண்டவனையே சரணடையும்

           அவனியின் போக்கு வரும் எப்போது ?-அன்றே

           ஆனந்தம் ;பரமானந்தம் ; அவனியில்.

     


         





          

Sunday, November 23, 2014

இன்னல் இல்லை என்றே தோன்றும்.

இறைவன்  எங்கே?

இருந்தும் பயன் என்ன?

இன்னல் அதிகமே ,

தினமும் வேண்டுதல் ,

தினமும் ஜபம் தவம் 

ஏன் ?என்றால்

  பரிகாரம் என்கின்றனர்.

பார்த்துவிட்டேன் .

செய்துவிட்டேன் 

அவனியில் அல்லல் ஓயவில்லை.

அனுதினமும்  அவனைத் துதித்தாலும் 

அவன்  அளித்த கடமைகள் 

மகிழ்ச்சியுடன்  செய்யவில்லை.

போதுமில்லா மனமில்லை 
போதும் என்ற வார்த்தை இல்லை.
தேவைகள் குறைக்கவில்லை 
ஒழுங்கற்ற தன்மை போகவில்லை 
ஆசைகள் அடங்கவில்லை.
ஆலயம் சென்றாலும் அலைபாயும் 
அகமனம்  அடங்கவில்லை.

அவனை அவனி படைத்தோனை 
குறை சொல்லி பயனில்லை.
தேனீ  தன் கடமை மட்டும் செய்கிறது 
மகிழ்ச்சியாக ,பலன் அதற்கா?
நாமல்லவா ? ஆனால் 

அறிவு கொடுத்த ஆண்டவனை 
அவன் கொடுத்த திறன் அறிந்து  செய்யாமல் 
அவனையே குறை கூறும் 
மானிடக்கு மண்ணில் ஏது அமைதி.
மன்னவனுக்கும் அமைதி இல்லை. அவனை 
கொண்டவளுக்கும்  அமைதி இல்லை.
மானிடப் பிறவிக்கு  அவன் தரும் ஆற்றல் 
திருப்தியடைந்தால் ,

இறைவன் இருக்கின்றான் ,
இன்னல் இல்லை என்றே தோன்றும்.




Thursday, November 20, 2014

அலைகளுக்கு நடுவில் அன்பு.

   மந்திரமும் தெரியவில்லை ,

 எந்திரமும் பதிக்கவில்லை

கண் மூடி தியானமும் செய்யவில்லை

அலைபாயும் மனம் நிலையாகவில்லை.

அலை என்று ஓயும் ,மனம் என்று நிலையாகும்

அலைகளுக்கு நடுவில் குளியல் போல்

அலைபாயும் மனத்தின் நடுவில்,
அன்பே  ஆண்டவரே!
உன் மீது நினைவலைகளும்  சேர்ந்தே பாயும்.
அடியேனின் பிழை அலைகள் பொறுத்து
நினைவலைகள் கண்டு  உன் அருள் அலைகள்

வீச வந்த அலை அன்பே  ஆண்டவன்.

அலைகளுக்கு இடையில் அன்பலையா?
அலைகளிலும் உண்டாம் ஆண் அலை ,பெண்  அலை.
அதனால் அன்பலைக்கும் அங்கே இடம் உண்டு.
பன்பலை யும் உண்டு. என்பிழையும் உண்டு.
அறியாப் பிழையும் உண்டு ,அறிந்த பிழையும் உண்டு.

சிறு பிழையும் உண்டு ,பெரும் பிழையும் உண்டு.
மன்னிக்கும் பிழையுண்டு ,மன்னியா பிழையும் உண்டு.
நீ படைத்த பிள்ளை  நான். பிழை பொறுத்துக் காத்தல் உன் குணம்.

அன்பலை  அறிந்து , அருள் அலை அளிக்க  உன் நாமம் ஒலிக்க

உன் அன்புப் பார்வைஎன்மேல் செலுத்துக
அன்பரின் ஆண்டவரே! அருட் கடலே.!




Wednesday, November 19, 2014

பிரார்த்தனை.

மனிதன்  ஆண்டவன் மேல் பற்று ,
தன்னலத்திற்காக
பொதுநலமல்ல.
அஷ்வமேத யாகம் தன் பலம் அரிய.
புத்திர காமேஷ்டியாகம்
தனக்கு புத்திரன் பிறக்க.
ஆயிரம் பேர் மொட்டைகள்
தன் தலைவியைக் காக்க.

நாடு நலமடைய ,
ஊழல் ஒழிய
தீவீரவாதம் ஒழிய
அன்பும் ,மனிதநேயமும் ஒழுக்கமும்
தானமும் தர்மமும் கடமை உணர்வும்,

ஆன்மீகத்தின் பெயரில் அதர்மம் ஒழிந்திட

நேர்மையாளர் நிமிர்ந்துவாழ
சத்தியவான்கள் சக்தி பெற்றிட
பிரார்த்திப்போம்.

Tuesday, November 18, 2014

இறவன் அருள் கிட்டும்.

                                                               இறைவன்   அருள் கிடைக்க                                                                   
                         பலர் கூறும் வழி தியானம்r.

இந்த கண்மூடித்தன தியானத்திற்கா ஆண்டவன்  படைத்தான் .


சற்றே சிந்தித்துப்பாருங்கள்.


நம் பாரத நாடு  ஞானபூமி. 

பக்தி நிறைந்த ஆன்மீக பூமி.

இதற்கும் மேலாக கர்மபூமி.

நமக்கு இறைவன் அழித்த  திறன் 

சும்மா இருக்க அல்ல.

அருணகிரியை சும்மா இரு என்று சொன்னது 

செயலற்று இருக்க அல்ல.

தீய இன்பம் பெறுவதில் இருந்து சும்மா இரு.

இறைவன் அருளால் அவர்க்குத் தந்த ஆற்றல் 

திருப்புகழ்  அமிர்தம்.

இவ்வாறு செயலாற்ற சிலருக்குத்திறன்.

அதைத்தான் நாம் செய்யவேண்டும் .

அதுதான் ஆண்டவன் அருள் கிட்டைக்க பெரும் வழி .

அதை விடுத்து  ராமா,கிருஷ்ணா .முருகா என்று 

மணிக்கணக்கில் அமர்வது  என்ற ஆன்மிகம் 

ஆண்டவன் விரும்புவதில்லை .

உழவன் உழுது பயிரிடவேண்டும்.

ஆசிரியர் பாடம் ஈடுபாடுடன் நடத்தவேண்டும்.

காவலர் கடமையை செய்யவேண்டும்.

இதைத் தான்   பகவத் கீதையில் 

கடமையைச் செய்,வரும் பலனில் நிம்மதியாய் இரு.

ஆண்டவன் அருள்  கிட்டும்.





 

Friday, November 7, 2014

அவன் அனந்தன். ஏகன்.

கடவுள் ஒருவரே ,
கண்டபடி கடவுளின்

நாமங்கள் ஏன்?

சனாதனதர்மம் முப்பத்தேழு  முக்கோடி தேவர்கள்,
மும்மூர்த்திகள்
ஆயிரம்   நாமங்கள்.

இதை பரிகசிக்கும் சுயதர்மம் சார்ந்தோர் ,

அயல் தர்மத்தார் , நாமே நமக்கு எதிரி .

நமக்கு எத்தனை நண்பர்கள்.

காலையில் ஐந்து மணிக்கு
பால்வாங்கச்சென்றால்
பால்கடையில் புதிய நண்பர்,

பள்ளியில் படிக்கும் போது நண்பர்கள்,
கல்லூரி நண்பர்கள்,
கான்பெரன்ஸ் நண்பர்கள்,
நேர்காணல் நண்பர்கள்,
வாகனசிக்னல் நண்பர்கள்,
முகநூல் நண்பர்கள்,
பணியாற்றும் இடத்தில் நண்பர்கள்,
நண்பர்களின் உறவின நண்பர்கள்.
ஆயுள் காப்பீட்டு முகவர் நண்பர்கள்,
உதவிகேட்டு வரும் நண்பர்கள்.
அனைவருக்கும் அறிமுகமான பின்
ஒருவருக்கு ஒருவர் செய்யும் உதவிகள்.
அப்பாவின் நண்பர்கள் மூலம் நண்பர்கள்
துறைகள் பலவற்றிற்கும் நண்பர்கள்
அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் புரிந்தவர்கள்

உதவி பெறும்போது  நாம் கூறும் வார்த்தைகள்.

உதவி செய்யும்போது அவர்கள் கூறும் வார்த்தைகள்

தெய்வம் போல் உதவினீர்கள்.
தெய்வமே உங்களை அனுப்பியுள்ளது.

நீங்கள் எங்கள் தெய்வம்.

எத்தனை  பேர் தங்களுக்கு  உதவிகள்
செய்தோரை தெய்வமாக போற்றுகின்றனர்.
எத்தனைதொண்டர்கள் தங்கள் கட்சித்  தலைவர்களை
அவர்களின்படங்களை ,சமாதிகளை ஆராதிக்கின்றனர்.
பெற்றோரை கடவுளாக வழிபடும்  தன்மை.

இயற்கை வழிபாடு,சூரிய  சந்திர நதி வழிபாடு

ஆகவே  பல தெய்வங்கள் வழிபடும்

சனாதன தர்மம் வாழையடி வாழையாக .
ஆலமர விழுதாக
அவனியில்  கோலோச்சும்.
அன்பே ஆண்டவன் ,
ஆண்டவன்  மானிட உருவத்தில்
அவதாரபுருஷன்.
அவன் அனந்தன். ஏகன்.







Thursday, November 6, 2014

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு .

ஆனந்தம் எங்கே ?

அது அன்புள்ள இடத்திலே.

பரமானந்தம் .பேரானந்தம் ,

ப்ரஹ்மானந்தம்--

இந்த நிலை அடைந்தவர்கள்


பொருளுள்ள பக்தியில்

பொருளாதாரத்தை  வெறுத்தவர்கள் .

உலகியலில்  உள்ளவர்கள்

மெய்ஞானம்  கண்டதுண்டா?

உலகியல் உள்ளத்து மாயையா?

தாரத்தை  விடுத்தது

சாம்ராஜ்யம் விடுத்து

ஞானம் பெற்று வந்ததே

உலகில்  உண்மை சொல்லவே.

உணவு வேண்டும் என்றால்

உலகத்துடன்  ஒட்டிவாழ வேண்டும்.

ஆசை ஒழி என்றாலும்

இச்சையுடன்  அஹிம்சை வழிநடக்க

ஒரு ஆசை .

அன்பு வழி பரப்பும் ஆசை.

உலகில்  உள்ள  துன்பங்கள்

தீர்க்க ஆசை.

உறவைத் துறந்தாலும் ,

உலகம் மாயை என்றாலும்

உலக நன்மைக்கே  என

உலகோடு ஒட்டிவாழ

உத்தமர்கள்  உபதேசம்.

வனத்தில் ஞானம் -அதன்
பயன் ஜகத்தினில் பரப்ப
ஊரோடு சேர்ந்து வாழ

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு .









Wednesday, November 5, 2014

அவனருள் பலரை வாழ வைக்கும் அதிசயம்.

 உலகியல்  உண்மைகள் நேரடி சாட்சிகள்.

உளவியல்  உண்மைகள்  அரிய  காட்சிகள்.

ஊர் -உலகில்  பித்தன் ,

உளம் உள்ளதை அறியும் சித்தன்.

அருள்வாக்கு அவனருளால்

ஆஸ்திபார்த்து வருவதில்லை.

ஆளின் வெளிஆடம்பரம் பார்த்து வருவதில்லை,

ஆனால் அந்த கிறுக்கன் ,அழுக்காடை அணிந்து

பைத்தியம் போல் சுற்றுகிறான்.

அவன் கடைக்கண் பார்வை க்கு

அன்றாடம் மெத்தப் படித்தோர்

உயர்பவியில் உள்ளோர்,

ஆடம்பரக்காரில்  வளம் வருவோர்

என ஒரு கூட்டம்.

அவன் இறுதிவரை  தெரு ஓரத்தில்

அழுக்காடை  ,சாக்கடை ஓரத்தில்

துர்நாற்ற உணவு,அருள்வாக்கு

என்றே  அமரனானான். ஆனால்

அவன் அமரனானதும்  அவனை அடக்கம் செய்ய

ஒரு கூட்டம்.

அவன் பெயரில் ஆஷ்ரமம் அமைக்கும் ஒருகூட்டம்.

பொருள் சேர்க்க ஒருகூட்டம் .

அவன் அருள் பெற ஒரு கூட்டம்.

அவன் சமாதி அருகில் நிற்க

ஆயுள் சந்தா ஐம்பதாயிரம்

அவன் பெயரில் அறங்காவலர் குழு,

அகிலம் முழுவதும் ஆஷ்ரமங்கள்,

அழகு சிலைகள் ,மாயாலங்காரங்கள்.

பொன் ஆபரணங்கள் ,பொக்கிஷங்கள்

உளவியலுக்கு  அப்பால் ஒரு

ஆன்மீக சக்தி  பலரை பணக்காரர்கள் ஆக்குகிறது.

பட வியாபாரி ,டாலர் வியாபரி,பலவித

கவர்ச்சி  பதுமைகள்,சாவிகொத்துகள்,

எழுதுபொருள்கள்,நாட்காட்டிகள்,ஸ்டிக்கர்கள்

அவனருள்  பலரை வாழ வைக்கும் அதிசயம்.

ஆனால் அவன் இறுதிவரை இவ்வுலக வசதிகள் காணாதவன் .

சித்தம் போக்கு சிவன் போக்குன்றே வாழ்ந்தவன்.

இந்த உளவியல் அதிசயம் தான்

அந்த ஆன்மீக ரஹசியம்.

தியாகி  உளவியல்  வணிகத்தன்மை அற்றது

போகி உளவியல் லாப நோக்கே கொண்டது.

அன்பே  ஆண்டவன் என்று   இருப்போர்

ஆலௌகீகம் . ஆண்டிகோலம்.

பழனி ஆண்டி. அவனை அலங்கரித்து வாழ்வோர்

அவன் பக்தர்கள். உலகவியல்.

இந்த உளவியல் தான்  ஆன்மீக வளர்ச்சி.









Tuesday, November 4, 2014

ஆஸ்திகம்

     இயற்கையின் விந்தையால்
                இறைவனை உணர்கிறோம்.


 அறிவியல்  முன்னேற்றம் ,
அகில உலகத்தின் இணைப்பு.

ஆஸ்தி உள்ளோருக்கு

அறிவியல் ஆனந்தம்.--ஆனால்

அறிவியலால்  அனைத்து ஆசையும்

ஆக்கம் ஆவதில்லை.

அறவியல் ஆன்மிகம் இல்லையேல்

அமைதி க்கு  அலையும்

ஆஸ்திகள் கொண்டோருக்கு
ஆஸ்திகம் ஒரு புகலிடம்.





Monday, November 3, 2014

அவனடிபோற்றுவோம்

ஆறுமுகம் யானைமுகன் தம்பி

முக்கண்ணனின்  மகன் ,

ஆற்றலின் அழகின் அருளின்  மேலோன்.

அறுபடைவீட்டில்  அமர்ந்து அருள்பாளிப்பவன்.


வடக்கில் இருந்து  தென் பழனி வந்தவன்.

தமிழ் கடவுள் என்றே ஆனவன்.

குன்றுதோறாடும் குணக்குன்று.

அபிஷேகப்பிரியன். அலங்காரப் பிரியன்.

அருணகிரியைத் தடுத்தாட்கொண்டு,

அழகு திருப்புகழ்  ஆக்குவித்தவன்.

அன்பே வடிவானவன் அருளே  பொருளானவன்

அவனடிபோற்றுவோம். அவனருள் பெறுவோம்.


Wednesday, October 29, 2014



god
பகவான்  

கடவுள்

இறைவன்

தெய்வம்

குதா

பரமாத்மா

தேவுடு

எனக்குத்தெரிந்து  கடவுள் என்பதற்கான பொதுப்பெயர்கள்.


முருகா!சரணம்.

இன்று   முருகப்பெருமான்   கந்தசஷ்டி  திருவிழா .

கந்தனின்அருள்வேண்டி  கடும் விரதமிருப்போர்.பலர் .

உள்ளம் உருக உமையவன் உமையவள் புத்திரனைப் 

பாடி ஜபித்து அருள் பெறுவோர் 

ஆண்டுதோறும் பெருகும் பக்தர்கள்.

அறுபடை வீடுகளில் விழாக்கோலம் .

ஆறுதலளிக்கும் ஆறுமுகக் கடவுள் 

இன்னல் தீர்க்கும் இடும்பன் கடம்பன்.

ராமலிங்க அடிகளார்  பாடல் 

மனிதவாழ்க்கைக்கு  ஏற்ற பிரார்த்தனைப் பாடல் ---

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற 

உத்தமர்தம் உறவு வேண்டும்.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று  பேசுவோர் 

உறவு கலவாமை வேண்டும்.

பெருமை பெரும் நினது புகழ் பேசவேண்டும்.
பொய்மை பெசாதிருக்கவேண்டும்.
மருவு பெண்ணாசையை மறக்கவேண்டும் 
உன்னை மறவாதிருக்கவேண்டும்.
தர்மமிகுசென்னையில் 
கந்தர் கோட்டத்தில் வளர்  தளமோங்கும் 
கந்தவேலே.

Friday, October 24, 2014

ஓம் சாந்தி !



 அவனியில் ஆனந்தமாக , மன நிறைவுடன், மன சாந்தியுடன்  வாழ


இறைவன் அன்பிற்கும் பக்திக்கும் பிரார்த்தனைக்கும்


 ஒப்பில்லா   மதிப்பு உண்டு.     இந்த ஆனந்தமே பிரம்மானந்தம்.


இதை உணர்ந்து  மகிழ்ந்தால்  இவ்வுலகில் வேறு ஆனந்தமும் ஈடாகாது.


ஜனனம் ----மரணம் இரண்டும்  மனிதன் அனுமானிக்க முடியா ஒன்று.


இதிலுள்ள இடப்பட்ட வாழ்க்கை வாழ இறைவன் அனைவருக்கும் ஒரு


திறமை கொடுத்துள்ளான்.  அதை அறிந்தும் மனிதன் தன் திறமையை


மற்றவர்களுடன்  ஒப்பிட்டுத் தான்  உயர்ந்தவன்   என்ற ஆணவத்தாலும்


தான்  தாழ்ந்தவன்  என்ற  தாழ்வு மனப்பான்மையாலும் ,


போதும் என்ற  திருப்தியாலும்,கிடைத்தது பத்தாது   என்ற அதிருப்தியாலும்

இன்னும் வேண்டும் என்ற பேராசையாலும்  அமைதி இழந்துவிடுகிறான்.

 இதெல்லாம் இன்றி  பேரானந்தத்துடன்  வாழ தியானம் ,

நாம ஜபம் ,தர்மம் , இறைப்பற்றுடன் பற்றற்ற  வாழ்க்கை வாழலாம்.

  ஓம் சாந்தி!சாந்தி !ஷாந்திஹி !


Tuesday, October 21, 2014

தீபாவளிவாழ்த்துக்கள்

                                            தீபாவளி 
இமயம் முதல் குமரிவரை  கொண்டாடும் ஹிந்துக்களின் 
இனிய பண்டிகை.

தீயன  ஒழித்து  நல்லவை ஒளிர 

தீபத் திருநாள் இது.

வணிகர்களுக்கோ இது வசந்தகாலம்.
இனிப்பு காரா வணிகம் 
எண்ணெய் ,பல சரக்கு வணிகம்,
ஆடை ஆபரணங்கள் ,
திரைப்பட அரங்குகள் 
பேருந்து சிற்றுந்து தொடருந்துப் 
பயணங்கள்.
இதிலே மழலைகளுக்கோர் மகிழ்ச்சி ,
உற்றார் உறவினர் நண்பர்கள் 
சந்திப்பு நிகழ்ச்சி ,
ஆலயங்களில் ஆனந்தம் ,
எங்கும் ஒளிமயம் ,வெடிச்சத்தம்.
இந்த மகிழ்ச்சியான நாளில் 
பாரதமற்றும் வெளிநாட்டில் வாழும் 
அனைவருக்கும் 
நல்லதே நடந்து ,மன ஆசைகள் நிறைவேற 
 இறைவனைப் பிரார்த்தித்து  -எனது 
இனிய தீபாவளி  வாழ்த்துக்கள் . 






Thursday, October 16, 2014

ஆண்டவனும் ஆண்டவர்களும் --அன்பு தான்.

ராமர் ஆண்ட நாடு ,
அவர் ஆண்டவனின் அவதாரம்.

கிருஷ்ணன் ஆண்ட நாடு ,
அதுவும் ஆண்டவன் அவதாரம்.

புண்ணிய பூமி பாரதம் ,
 வேதமும் பண்பும் ஒழுக்கமும் 

அமைதியும் ,சத்தியமும் கடமையும்
 தியாகமும் அஹிம்சையும் 

வையகம் வாழவும் ,
வையகம் ஒரு குடும்பம் 
,வந்தவர்கள் 

தெய்வம்  என்ற தத்துவம் 
அவனிக்கு அறிவித்த நாடு.

அகில உலகமும் அறிவைத்தேடி ,
ஆன்மிகம் தேடி ,
அமைதி தேடி வந்தநாடு.

ஆஸ்தி  அறிந்து ஆக்கிரமிக்க வந்தவர்கள்
 அகிலத்தில்.

ஆன்மிகம் தெய்வீகம்
 அந்த அரக்க இரக்கமற்றவர்களைப்

பொறுத்து மன்னித்து அழகு  சிலைகளை

அலங்கோலப் படுத்தியவர்களையும் 
ஆண்ட அனுமதித்த ஆண்டவன் நாடு.

கைலாயத்தில் சிவனும் ,

தென்னாட்டில் அவன் அருந்தவப் புதல்வனும் 

ஆட்சி செய்யும்  நாடு.

ஆன்மீகத்தில்  இணைந்த 
இணைக்கின்ற 
இணைக்கும் நாடு.

ஆண்டவன் இல்லை என்ற  அரசர்கள் ,

ஆண்டவனின் வரம் பெற்று ஆண்டவர்கள்,


ஆண்டவனையே அழிக்க  ,அதன் 

விளைவாக அழிந்த அசுரர்கள்,

ஆண்ட நாடு.

ஆண்டவன்  ஆண்டவர்களின் 

பெருமைகளுக்காக  
வியத்தகு ஆலயங்கள் ,

சீரிய சிற்பக்கலைகள்,

கலியுகத்திலும்  கோடிரூபாய்களும் 

தங்க வெள்ளி  கட்டிகளும் 
தான தர்மங்களும் 

மன முவந்து   காணிக்கையாக  கொட்டும் 

பக்தியில் சிறந்த நாடு.

முற்றிலும் துறந்த துறவிகளை 

ஆடை இன்றியும் ,அரைகுறை ஆடைகளுடனும் 

பைத்தியக்காரன் போன்று சுற்றும் 

ஆன்மீகவாதிகளை  சரணடையும் நாடு.

ஊழலால் ஆட்சி செய்தாலும் 

ஆண்டவனிடம்  அவர்களைக்காப்பாற்ற 

மொட்டை ,காணிக்கை,யாகம் செய்யும் நாடு.
ஆண்டவனிடம் நீதி கேட்கும் ஒரு சிறு கூட்டம் ,
ஆண்டவர்களின்,  ஆளுபவர்களின்   தவறுகளை

தண்டனையிலிருந்து காப்பாற்ற   தண்டமிடும் கூட்டம்.

மகாபாரதம் தான் ,
கௌரவர்கள் அணியிலிருந்தே 

பாண்டவர்கள் நலம் விரும்பும்  கூட்டம்,

ஆண்டவன் எவர் பக்கம் ,

மன நிம்மதி மன சாந்தி மன மகிழ்ச்சி 

இதுவே வேண்டும் .

ஆண்டவன் ஆண்ட நாடு ,
ஆன்மீக சக்தி  ஆளும் நாடு.




.

Wednesday, October 15, 2014

இறைவனைத்தேடி

இறைவன்  எங்கே ?

ஆஷ்ரமத்திலா?

ஆலயத்திலா?

சாமியார் மடத்திலா?

ஜோதிடர்கள்  சாஷ்திரத்திலா?

நேர்மையான  உண்மையான  

தியானத்திலா?

மந்திரங்களிலா ?

ஹோம  யாகங்களிலா ?

இவைகளை ஆராய்ந்து பார்த்தால் 

தங்கக் குடம் கொடுத்த தங்க காரிகையும் ,

சாய் பாபா காலில் விழுந்த  தயா வும்  கனியும் 

இடியாப்பச்  சிக்கலிலே.

யாகம் நடத்திய அசுரர்களும் வதைக்கப்பட்டனர்.

ராமர் போன்ற கடவுளையும் விதி விடவில்லை.

ஆகையால்  
நேரடியாக இறைவனை வழிபட்டு உயர்ந்தவர்கள் 
பட்டியலைப் பார்த்தால் அவர்கள் 
இன்றும் உலகில்  வாழ்ந்து ஆன்மீகத்தில் 
மனித தெய்வமாகப் போற்றப்படுகிறார்கள்.

௧. ஆதி கவி வால்மீகி, காளிதாசர்,ஆய்சி புத்தர்,மகாவீரர்,சங்கரர்,ரமண மகரிஷி,அரவிந்தர், 
பைகம்பர் முஹம்மது நபி, ஏசுநாதர் ,
சீரடி சாய் பாபா .
இறைவனை உண்மையில் ,உள்ளத்தில் ,
கடமையில் நேர்மையில் ,பரோபகாரத்தில் ,
மனித நேயத்தில் 
ஒருமனதுடன் தியானத்தில் தேடவேண்டும்.
இராமலிங்க அடிகளார்,பட்டினத்தார் பாம்பன் ஸ்வாமிகள் என்று பட்டியல் நீளும்.

இறைவனைப் போற்றுவோம்.

ஆன்மீக நெறியில் செல்வோம்.


அது சத்தியம் ,அன்பு,நேர்மை,பொறுமை ,கடமை.மனிதநேயமும் மனிதர்களுக்கான சேவையும் .

Monday, October 6, 2014

iraiyanbu. காதலாகிக் கசிந்து உருகி என்று இருப்பதே இறையன்பு.

அன்பு   ஹிந்தியில்  ப்ரேம் ,ப்யார்  இதை கபீர் இரண்டரை எழுத்து என்கிறார் .

இஷ்க்  என்ற சொல்லும்  இரண்டரை எழுத்து .

        இந்த இரண்டரை எழுத்துஅன்பு  பற்றித்   தெரியாதவர்கள்  பண்டிதர் ஆக முடியாது என்பது அவர் கருத்து.
 

 காதல்  என்பதில் மூன்றாவது நபருக்கு இடமில்லை

.இருவருக்கு இடையில் உள்ளது  மட்டுமே அன்பு.


ஒரு ஆண்டவனுக்கும்  பக்தனுக்கும் இடையில்  காதல் இருக்கவேண்டும்.

காதலாகிக்  கசிந்து உருகி  என்று   இருப்பதே  இறையன்பு.

 இதில்   ஆசை,பேராசை ,பொறாமை, இருக்கக் கூடாது.

எதையும் கேட்கக்  கூடாது.

 இதில் அபிராமபட்டர் ,ஆண்டாள் ,மீரா ,நந்தனார்,கண்ணப்பநாயனார் ,மற்றும் பல  நாயன்மார்கள் ஆழ்வார்கள் வரலாறு உண்டு.

 இப்படிப்பட்ட  தெய்வீக அன்பு புறப்பற்று இல்லா அகப்பற்று கொண்ட அன்பு

அது ஏற்படவே ஆண்டவன் அருள் வேண்டும்.

அப்படிப்பட்ட  எதையும் எதிர்பார்க்கா அன்புகொண்ட அடியார்கள் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற மதம் ஹிந்துமதம்.

 




Sunday, October 5, 2014

அன்புக்கு இறைவன் அருள் கிடைக்கும் , அன்புஎப்படி ?


அன்புக்கு  இறைவன்  அருள் கிடைக்கும் ,
அன்புஎப்படி ?
ஒழுக்கத்துடன் கூடிய அன்பு.

பரோபகாரத்துடன் கூடிய அன்பு,
தனக்கென எதுவும் விரும்பா அன்பு,

பொருளறிந்து  புகழ் பாடும் மொழியறிவு,

ஒருமையுடன் இறைவன் புகழ் பாடும் அறிவு.

பெண்ணாசை பொன்னாசை இல்லா  அன்பு.
 இராமலிங்க அடிகளார் வேண்டிய அன்பு.

தானங்கள்   தரும் அன்பு.
அன்னதானத்தில் அன்பு ,
இந்த அன்பினால் அவன் காட்டும் கருணை 
நிலையான அருள் கடாக்ஷம்  பெறும் 
பக்தர் ,
அவனியில் இன்னலின்றி  வீணாசை இன்றி 
அமைதிப் பெரு ம்  மனம்  அலைபாயா அன்பு.

Friday, October 3, 2014

GREAT OLDEST SANATANA DHARMA

னி, அக்டோபர் 04, 2014

GREAT OLDEST SANATANA DHARMA

GREAT OLDEST SANATANA DHARMA ,

TILL TODAY FOLLOWED BY HINDUS 

WITHOUT KNOWING AND UNDERSTANDING.


IT GIVES FAITH TO ALL.

IT GIUIDES TO DONATE 

FOOD,MONEY,LAND,GOLD  AND EVERYTHING.
ONLY   ANCIENT RELIGION IN THE WORLD 

WHICH GIVES RESPECT TO  A SAINT WHO  LIVES IN A HUT   THEY NEED  ONLY FOOD  WEARS SIMPLY DRESS .
AND THEY HAVE   DIVINE   POWER.
THE SANATAN DHARMA   TEACHES  DON'T DO A SIN.
FOR    EVERY SIN  THERE IS A PUNISHMENT 

YOU CAN'T ESCAPE  .

THINKING EVIL THOUGHT IS ALSO A SIN.

YOU CAN ESCAPE FROM WORLDLY PUNISHMENT 

BUT 

DIVINE PUNISHMENT NEVER LEAVE A   CRIMINAL   OR SINNER.  DIVINE PUNISHMENT IS SURE.

Wednesday, October 1, 2014

PRAYER. TO SAVE THE COUNTRY FROM CRIMINAL POLITICIANS.


I WROTE AN ARTICLE  IN HINDI IN NBT 

THAT IT IS NOT GOOD TO CLEAN A TEMPLE

AFTER VISITING A CHIEFMINISTER.
RESPONS TO  THIS ARTICLE 

THE TEMPLE FOUNDER'S GRANDSON REPLIED THAT ACCORDING TO OUR TEMPLE RULES 

EVEN I VISTED IN GARBH GRUH 

THEY CLEAN THE TEMPLE.

OFTEN CLEANING  THE TEMPLE IS OUR NIYAM I.E .,OUR RULE.

THE POLITICIANS ARE GIVING COLOUR TO EVERY THING.
***************
WHY THE DALITH CHIEF MINISTER GAVE THIS STATEMENT 
AFTER VISITING A LONGTIME.IN TAMILNADU 

ALWAYS POLITICIANS ARE CREATING THIS CASTE PROBLEMS  TO SPILIT THE VOTES. NOT ONLY IN TAMILNADU

WHOLE INDIA IS IN THE SAME STREAM.
I PRAY ALMIGHTY SAVE OUR  COUNTRY FROM THIS CASTE POLITICS  AND CRIMINALS SUPPORTING POLITICS.


IN TAMILNDU THERE IS A GREAT SUPPORT FOR PUNISHED CHIEFMINISTER AND ARE THE ADMK VOLUNTEERS ARE 

BURNING PRIVATE VEHICLES AND FORCING TO CLOSE SHOPS.I PRAY ALMIGHTY RANGANATH TO SAVE THE COUNTRY FORM SUCH POLITICIANS.
IS THE JUGEDGE  WRONG?

THE TAMILNDU BANDH IS WRONG?
LAWERS LIKE JET MAL AND  CHO WHY SUPPORTING?
GOD !SAVE OUR COUNTRY.
JAY BHARAT.