ஆண்டவனைத் தேடிச்செல்வோர் ,
அறிவிலிகள் ;
ஆண்டவனைத் தன்னிடத்தே வரவழைப்போர்
ஞானிகள்.
ஆஷ்ரமங்களில் கூட்டம் கூட்டுவோர்
ஆனந்தம் உணர்வோர் --ஆனால்
அங்கும் உண்டு எத்தர்கள் .
ஞானம் தரும் இடங்கள் ஆஷ்ரமங்கள்,
அக்ஞானம் ஒழிக்கும் இடம் ஆஷ்ரமங்கள்.
அன்னதானம் வழங்கும் இடம் ஆஷ்ரமங்கள் .
அங்கு சேரும் பணங்கள் ,
சிலருக்கு பாதை மாற்றும்
பலருக்கு போதை தரும்.
அதில் சேரும் சொத்துக்கள்
உடனடி தானதர்மங்கள் ஆனால்
உள்ளத்தில் இருப்பான் ஆண்டவன்.
உண்மை தோற்றங்கள் ஜீவசமாதி ஆனபின்
வழித்தோன்றல்கள் வழிமாறி திசைமாறி
வசை மாரி யில் குளித்தே
வஞ்சகம் பல புரிவார்.--எனவே
நெஞ்சகத்தில் அவனை வைத்து
நேர்மையுடன் பூஜித்தால் .இச்
ஜகத்தில் இன்னலின்றி
ஜகந்நாதனை அகத்தில்
அமர்த்தலாம் குடி.
அறிவிலிகள் ;
ஆண்டவனைத் தன்னிடத்தே வரவழைப்போர்
ஞானிகள்.
ஆஷ்ரமங்களில் கூட்டம் கூட்டுவோர்
ஆனந்தம் உணர்வோர் --ஆனால்
அங்கும் உண்டு எத்தர்கள் .
ஞானம் தரும் இடங்கள் ஆஷ்ரமங்கள்,
அக்ஞானம் ஒழிக்கும் இடம் ஆஷ்ரமங்கள்.
அன்னதானம் வழங்கும் இடம் ஆஷ்ரமங்கள் .
அங்கு சேரும் பணங்கள் ,
சிலருக்கு பாதை மாற்றும்
பலருக்கு போதை தரும்.
அதில் சேரும் சொத்துக்கள்
உடனடி தானதர்மங்கள் ஆனால்
உள்ளத்தில் இருப்பான் ஆண்டவன்.
உண்மை தோற்றங்கள் ஜீவசமாதி ஆனபின்
வழித்தோன்றல்கள் வழிமாறி திசைமாறி
வசை மாரி யில் குளித்தே
வஞ்சகம் பல புரிவார்.--எனவே
நெஞ்சகத்தில் அவனை வைத்து
நேர்மையுடன் பூஜித்தால் .இச்
ஜகத்தில் இன்னலின்றி
ஜகந்நாதனை அகத்தில்
அமர்த்தலாம் குடி.
No comments:
Post a Comment