முருகா , முருகா ,முருகா -என்றே
நெஞ்சுருக நேசமிக்க நாம ஜபம்
நாளும் ஆழ்மனம் வைத்து செப்பினால்- நாம்
விரும்பும் பலன்கள் பெற வித்தாகும்.
வித்தாகி விருக்ஷமுமாகி பூவாகி
காயாகி ,கனியாகி ,சுவையாகி
தித்திக்கும் வாழ்க்கையது.
ஜன்மப் பகை நீங்கும் ,
ஜனன தோஷம் நீங்கும்
ஜகத்தினில் பாவம் போகும் ,
ஜாமம் எட்டிலும் பயம் போகும்.
ஜாக்கிரதை என்றசொல்லுக்கு இடமில்லை,
சரவணன் சடுதில் வந்து காப்பான்.
சத்தியம் வேண்டும் ,
ஒருமை மனம் வேண்டும் ,
மனதினில் நேர்மை வேண்டும் ,
மனம் முழுதும் முருகனின்
மூலம் வேண்டும்;
வேல் வேண்டும் ;அவன்
கொடி சேவல் வேண்டும்.
மயில் வாஹனம் வேண்டும் .
அகம் முழுதும் ஆறுமுகன்
எண்ணம் வேண்டும்.
சித்தம் முழுதும் சிங்கார வேலன்
சிந்தனை வேண்டும்.
அலைபாயும் ஆசைகளை
அடக்கவே வேண்டும் .
ஆறுமுகம் கருணை பெற
யானைமுகன் அருளவேண்டும்.
No comments:
Post a Comment