ஆறுமுகம் நாம் காணும் ஆசைமுகம்
அன்புமுகம் ;அருள்முகம்;
அறுபடை வீட்டினில் ஆறுமுகம்
அன்பருக்கு அருளும் நன் நெஞ்சம்.
வடக்கே இருந்து வந்து ,
தென்னகம் காக்கும் கலியுக தெய்வம்.
தேனும் தினைமாவும் விரும்பும் பிரசாதம் ,
பஞ்சாமிர்தம் அவனுக்கு பிடிக்கும் .
பாலாபீஷேகப் பிரியனவன் ,
பாலமுருகனவன் பழனியிலே.
தகப்பன் ஸ்வாமியவன் சுவாமி மலையினிலே.
அருணகிரி பிழைபொறுத்து
திருப்புகழ் படவைத்த தமிழன்பன்.
தாயைப்பாட மறுத்த பொய்யாமொழியை
முட்டையைப் பாடவைத்த முருகனவன்.
கிருபானந்தவாரியாரின் அருட் கடவுள்,
பாம்பன் சுவாமிகளுக்கு காட்சி
அளித்த மயூரநாதன் .
அவனியில் அவன் லீலை சூர சம்ஹாரம்.
அவன் மெய்ப்பதம் போற்றுவோம் ,
அக அமைதி அக மகிழ்ச்சி பெறுவோம்.
No comments:
Post a Comment