Friday, December 5, 2014

அருள் தருவாய் ஆண்டவரே.

அவனியில் அவனை உணர்ந்தார் ,
 அகமகிழ்ந்தார் ,அவனைப் புகழ்ந்தார் .
அகாராதியில் சொல் இல்லை,
 அகிலத்தில் நாட்டம் இல்லை,
அகிலம் நிலையில்லை.
அகில சுகம் நிரந்தரமில்லை.
ஆண்டவனே  எனக்கெல்லாம் .
வேண்டியது நான் பெறவே 
வேண்டாத தெய்வமில்லை.
அதிகம் எனக்கு ஆசையில்லை.

பத்து ஏக்கரில் ஒரு ஆஷ்ரம்,
அவனே நான் என்று அமர 
ஒரு பொன்னால் வேய்ந்த அரியாசனம்,
என் புகழ்பாட ஒரு கூட்டம்.
சீடர்கள் கூட்டம் வரவேற்க ,
சிஷ்யாக்கள் கூட்டம் சேர,
உன்புகழ் பாட ,என் தனம் சேர,
தானம் செய்ய ;தர்மம் செய்ய;
உன்னை  மறந்து நானே நீயாக 
அகிலத்தில் பவனி வர 
அருள் தருவாய் ஆண்டவரே,




No comments: