Saturday, December 27, 2014

இறை அருளார் கூறும் அறவுரை.

உள்ளம்  உலகியலுக்கே தரும் முதலிடம்.-அவனியில் 

உள்ள தெல்லாம் உண்மையல்ல---அதில் 

உள்ளப்போராட்டம் ,உள்சுழல் ,வெளிசுழல் 

சுழலில் சுழன்று சூக்ஷமம்  மறந்து --சுகம் 

சுற்றமும் நட்பும் என்றே  உழன்று மெய் 

மறந்து முறை மறந்து  காலம் மறந்து 

காலன் வரும் நேரத்தில் கண் கலங்கி என்ன பயன் ?

அசாஸ்வத உலகை சாஸ்வதம் என நினைத்து 

அசாத்ய சாதனைகள்  பல புரிய 

அன்றாடம் உழைத்து அலுத்து அலைந்து 

அவனை சிவனை உலகநாதனை மறந்து ,
ஆஸ்திகள் சேர்த்து ஓய்ந்த காலம் ,
உற்றார் -சுற்றத்தார் வெறுக்கும் நேரம் 
உலகநாதனை உள்ளத்தில் அமர்த்தி என்ன பயன்?

ஊரார் போற்றும்  வினைகள் பல செய்தாலும் 

உலகம் போற்றும் உத்தமர் ஆனாலும் ,

உலகை விட்டு உயிர் பிரியும் காலம் வரும்,-அதனால் 

வேதங்களும் ஆன்மீகப் பெரியோரும் 

மதங்களும் இறையாளர்களும் கூறும் அறிவுரை:-

மன்னில் இருக்கும் மனிதர்கள் மற்றவை படைக்கும் 

பகவானை அறியுங்கள் ;

பகவானை பிரார்த்தனைசெய்யுங்கள்,

பாரினில்  அமைதி ,மனநிறைவு ,இன்னலின்றி 

மன உறுதி வாழ்க்கை -இதெல்லாம் 

இறைப்பற்று ,தியானம்  ஒன்றே.

இதை மீண்டும் மீண்டும் சொல்வதே 

இன்றைய இளம் தலைமுறைக்கு உகந்ததென்றே 

இறை அருளார் கூறும் அறவுரை.








           







No comments: