Sunday, January 4, 2015

வேதனையே மிஞ்சும்,

இறைவனின் படைப்பே இயற்கை.

இயற்கையில்  நாம் படைத்தசெயற்கை


இறைவனை தனிமைப் படுத்தி ,

வேறுபடுத்தி ,வேற்றுமைப் படுத்தி,

மனிதநேயம்  மறக்கச்செய்து ,

மதம் என்று மது  அருந்தி ,

மனிதரை  வேறுபடுத்தி ,

சிலர் வாழ  பலரை பலியாக்கும் உணர்வு.

இறைவுணர்வு  உண்மையானால்

இணைந்து வாழும் எண்ணம் தோன்றும்.

இணைந்து வாழ்வில் இன்பம் காண

இறைவனைத் துதுதிப்போம்.

அல்லா என்ற  நாமம்  பிடித்தோர்
அல்லா எங்களுக்கு எல்லாம் என்றே ஏற்க.

இயேசு  என்ற நாமம் பிடித்தால்

ஏசு  என்றே ஜெபியுங்கள்.

ராம் நாமம் பிடித்தால் ராமா என்றே
தியானம் செய்யுங்கள்.

கிருஷ்ணா ,சிவன் ,ஹனுமான் ,
துர்கா,லக்ஷ்மி,சரஸ்வதி

எது பிடிக்குமோ அதையே  ஏற்று

நடந்தால், தேவ அருள் கிட்டும்;

அதை மறந்து போரிட்டால் இறைவன் பெயரில்

வேதனையே மிஞ்சும்,



 reuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu






No comments: