இறைவனின் தத்துவம் ,
இப்புவி தத்துவம்
இணைத்துப் பார்த்தால்
இணைவது கடினம்.
ஆதிவாசிகளில் சிலர்
அன்றும் இன்றும் மாக்களாகவே
இப்புவியில் வாழும் அதிசயம்.
மனிதர்களாக வாழ்ந்தும்
\மானிட குணமின்றி
ஈவு இரக்கமின்றி
தனக்கென வாழும்
பிறரை அளிக்கும் ஒரு
தீவிரவாதக் கூட்டம்.
தான் வாழும் தாய்நாடே என்று
அனைத்தையும் அர்ப்பணிக்கும் கூட்டம்.
அன்னைக்கு ,தந்தைக்கு ,தங்கைக்கு ,தம்பிக்கு
உற்றார் உறவுக்கு என வாழும் கூட்டம்.
தானம் ,தர்மம் ,ஆன்மிகம் என அமைதிக்கு
ஆண்டவனே என்ற துறவறக் கூட்டம்.
நட்புக்கு இலக்கணம் வகுத்து வாழும் கூட்டம்.
மங்கைக்கும் மதுவுக்கும் அடிமையாகி அழியும் கூட்டம்.
ஆடம்பரமே வாழ்வு என வாழும் கூட்டம்.
தன்மான உணர்வுள்ள கூட்டம்.
நாணல் போல் வளைந்து வாழும் கூட்டம்.
வையகமே ஒரு குடும்பம் எனக் கூறும் கூட்டம்.
ஹிம்சையில் இன்பம் காணும் கூட்டம்.
அஹிம்சையில் அனைத்தும் சகிக்கும் கூட்டம்.
சமுதாய நலப் பணிக் கூட்டம்,
சமுதாயத்திற்கு சங்கடம் தரும் கூட்டம்.
அனைத்தையும் ஒப்பிட்டால் அங்கே
ஒரு இயலாமை ,வெற்றிடம்,மகிழ்ச்சி ,துன்பம்
ஆக்கம் ,அழிவு ஏற்படும் மந்தணம் .-விளைவு
வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் இயலாமையும்
தன்னை மீறிய சக்திசெயல்படும் விதம் புரியா மனிதன்,
தன்னை மீறிய சக்தி யாக கருதும் இடம் ஆலயம் .
இறைவன் இருக்கும் உணர்வு.
இறைவனையும் சுயநலத்தால் ,ஆணவத்தால் ,
தனக்கென கூட்டம் தான் தான் தலைவன் என்று
பிரித்து சுகபோகம் காணும் மதங்கள்,
தர்மம் மறந்து தரங்கெட்டு ,மனிதர்களை
மனித நேயத்தைப் பிரித்து கொன்று வாழும் கூட்டம்,
வையாக ஒற்றுமைக்கு இறைவன் -ஆனால்
இந்துக்களுக்கு ஓர் இறைவன் அல்ல என்றும்
இஸ்லாமிற்கு ஒரு இறைவன் என்றும்
கிறிஸ்தவர்களுக்கு ஒரு இறைவன் என்றும்
தமிழனுக்கு ஒரு இறைவன் என்றும்
பல மதம் பிரித்து மத யானை போல் வாழும் மனிதன்
அமைதி காணும் காலம் எப்போது?
ஆவி பிரியும் போது.

No comments:
Post a Comment