அருகம்புல் போதுமே ,அரிய பக்திரசம் காட்ட,
கரி முகத் தோனே , கருணை வடிவோனே,
கலக்கம் தீர்ப்போனே ,கரைகளில் அமர்வோனே .
கணங்களின் நாயகனே,கணநாதா,காப்பாற்ற வருவாயே.
கற்பகவிநாயகா,கற்பனைவளம் தர வருவாய்;
கல்லாத கவி ஒவ்வாததை எழுதும் என் ,
கவித்தவற்றை மன்னிப்பாயாக்,
சக்திவிநாயகா!சங்கடங்கள் தீப்பாயாக.
சித்திவிநாயக சித்திதாருமையா.
வர சித்தி விநாயக வரம் தாருமைய.
ஔவையாரின் அகமகிழ்வோனே!
ஔடதமாய் வருவாய் அப்பா.
எழில் நாயகன்!எங்கும் வியாபித்து இருப்போன்!
அரமரத்தடி அமர்ந்த பெருமான்!
ஆனந்த விநாயகன் ,கலியுக தெய்வம்!
கரிமுகத் தோன் பாதம் பணிவோம்.
No comments:
Post a Comment