Tuesday, January 6, 2015

அனைத்தையும் பார்த்தால் ஆண்டவனை அதிசயம் புரியும்.

இயற்கையின் படைப்பில் இறைவனின் விந்தை ,

அறிவியல் படைப்பில் அவனளித்த அறிவின் விந்தை,

ஆணவத்தால் அவனை மறக்கும் கணத்தில்

ஆக்ரோஷ இயற்கைச் சீற்றம்,

ஆரோக்ய மருந்து அழகுசாதனங்கள்

அதையும் மீறி  நோய்நொடி அழகு அழகற்றகாட்சிகள்,
பிறப்பின் மகிழ்ச்சி ,இறப்பின் அதிர்ச்சி

அனைத்தும் கண்டே அவன் பாதம் பணியும்

அதிசய ஆன்மிகம்.
இதிலும் எத்தனை விதம்

அறிவே ஆண்டவன் என்றே ஒரு அடியவர் கூட்டம் .
அன்பே  ஆண்டவன்  என்றே ஓர்  அடியவர் கூட்டம்.
உண்மையே ஆண்டவன் என்றே ஓர் அடியவர் கூட்டம்.
செயலாற்று பயனை அவனிடம் விட்டு விடு
பயன் பெற்று பலனை மற்றவர்களுக்கு பயன் படுத்து.
எதையும் கொண்டுவரவில்லை வருத்தப்படாதே.
வறுத்து உடலை ஞானத்தால் ஞாலத்தை மேம்படுத்து.
ஞாலம் வெறும் ஜாலம்;அவனையே சரணடை.
அவன் படைத்த படைப்பு ,அழியும்; அதற்குள் அமரத்துவ கர்மவீரனாகு.
எண்ணங்கள் சிந்தனைகள் ஏற்றங்கள் தாழ்வுகள் அனைத்தும் மாறும்.
அனைத்திற்கும் ஆசைப்படு ;ஆண்டவனை மறக்காதே.

அனைத்தையும் பார்த்தால் ஆண்டவனை அதிசயம் புரியும்.


No comments: