Tuesday, January 6, 2015

ஆண்டவன் அருள் தானே கிட்டும்.

பக்தி என்பது பதட்டத்தில் வருவதல்ல.


பாரினில் பக்தி,படாடோபத்தில் அல்ல.

ஆலயம் செல்வோரெல்லாம் ஆஸ்தி  பெறுவதில்லை.

ஆஸ்தி உடையோர் எல்லாம் ஆலயம் செல்வதில்லை.

 உலகில் இறைவன் படைத்த உயிர்கள் எல்லாம் ,தனக்கு

உரிய கடமை இயற்கையாகச் செய்யும்.-ஆனால்

உயர் பிறவி மனிதனுக்கு அப்படி அல்ல.

சேவல் கூவும் காலநேரம் அறிந்து.

வாலாட்டும் நாய் ,குறைக்கும் நாய்

சூழல் அறிந்து.

அறிவுள்ள மனிதன் ஒரே சமயத்தில்

உள் கோபம் வெளி அன்பு,

வெளி கோபம் உள்ளன்பு

தியாகம் போகம்

இரவு வேலை பகல் தூக்கம்

என்று இயற்கையை  தன்

வசதிக்கு மாற்றும் அறிவு ஜீவி.

இறைவன் அவனுக்கு அளித்த கடமை

இயல்பாக செய்யாமல் ,

ஆசையால் இஷ்டம் போல் செய்து

ஆஸ்தி சேர்க்கும் அதிசயப் பிறவி.

ஆஸ்தி சேர்த்து ஆய்ந்து ஓய்ந்து

அகவை கூடிய பின் ,ஆஸ்திகனாகி
அதுவும் இன்றி அல்லல் பெறும் மனிதன்
இயல்பில் இறைவன் அளித்த ஆற்றல்
இயல்பில் இறைவன் அளித்த கடமை
ஆழ்மனதுடன் சத்தியத்துடனே
தான தர்மத்துடன் ஆற்றினாலே
ஆண்டவன் அருள் தானே கிட்டும்.






No comments: