ஆருத்ரா தர்சனம்
ஆடலரசனின்
ஆக்ரோஷ நடனம் ,
ஆனந்த நடனம்
அவனை மறந்தோருக்கு
அஹம்பாவம் கொண்டோருக்கு
ஆணவம் அழிய படைத்ததே
காமதகனனின் காமம் .
தாருகாவன ரிஷிகளின் செருக்கு அளித்து
தருவாசனின் தந்தையை வழிபட
சிவனின் அழகிய பிக்ஷாடர் வேடம்.
விஷ்ணுவின் அழகிய மோகினி ரூபம்.
காமம் என்பதே கொடிய ஆசை அதை
அடக்கினால் நாமும் பிரம்மாஸ்மி .
செருக்கு இன்றி காமமின்றி வாழ்ந்தால்
காம தகனனின் கருணை கிட்டும்.
கலியுக கார்த்திகேயனின் அருளும் கிட்டும்.
ஆண்-பெண் கவர்ச்சியே அறிவுக்குத் திரை
அஹம்பாவத்தின் எல்லையே இறைவனின் மறதி.
அஹம்பாவம் காமம் ஒழிந்தால்
உலகநாதனும் நம் வசமே.
ஆருத்ரா நன்னாளில் நாமும்
ஆணவம் அழித்து யானை முகமுகண்
ஆறுமுகன் தந்தையை நாளும் வழங்கினால்
அவனியில் அல்லல் இன்றி அவன் அருள் பெற்று
காமத்தை அடக்கி செருக்கு ஒழித்து
கலியுகத்தில் களிப்புடன் வாழலாம்.
No comments:
Post a Comment