சனாதன தர்மம் ,
அதில் சகலமும் சங்கமம்.
ஞானமும் உண்டு ,
பிரேமையும் உண்டு ,
அருவமும் உண்டு .
உருவமும் உண்டு .
உள்ளத்தில் உறவும் உண்டு ,
எண்ணத்தில் ஏற்றம் உண்டு -
அன்பிற்கும் அஹிம்சைக்கும்
மார்க்கம் உண்டு.
வையகம் வாழ ,
வையகம் ஒரு குடும்பம் என்ற
அவனியின் ஒற்றுமைக்கும்
வாசகங்கள் பல உண்டு.
வள்ளலாரின் வாக்கியம்
அருட்பெருஞ்சோதி ,
அருட்பெருஞ்சோதி
தனிப்பெரும் கருணை என்ற
வாசம் உண்டு.
சிந்துவை ஹிந்து என்று
அயல் நாட்டினர் கொடுத்த சொல்லே
மதமானது என்றால்
அதன் சாகர சங்கமத்தில்
சைவமும் உண்டு .
வைணமும் உண்டு.
அறிஞர் பலர் ,ஞானிகள் பலர் . அதனால்
சைவத்திலும் வைணவத்திலும்
பல பேதங்கள் உண்டு.
கிரமதேவதைகள் உண்டு.
ராமாயணம் ,மகாபாரதமும்
நாடோடிப்பாடலிலும் உண்டு.
நாட்டு நலம் மட்டுமல்ல
சர்வஜனோ சுகிநோபவந்து என்ற
உலக மக்கள் நலமாக வாழும்
பிரார்த்தனைகளும் உண்டு.
கன்னப்பருக்கும் பெருமை உண்டு .
நந்தனாருக்கும் நற்புகழும் உண்டு.
சனாதன தர்மத்தில் சாகர சங்கமும்
அவனியின் அமைதியும் உண்டு /.
,
No comments:
Post a Comment