பாரினில் பகவான் இல்லை என்றும்
உள்ளான் என்றும்
தர்மம் அதர்மம் இதில்
தர்மம் தவித்தலும்
அதர்மத்தின் ஆராவாரமும்
அனுதினமும் பார்க்கும் காட்சிகள்.
நீதிமன்றதீர்ப்புக்குப்பின்னும்
தீர்ப்பு ஏற்கா மக்கள் கூட்டம்.
இது இன்றா ,நேற்றா
புராண காலம் முதல் இன்றுவரை,
ஹரிச்சந்திரன் காலம் ,
பிரஹலாதனின் காலம்
ஏகலவ்யனின் கதை
என்றெல்லாம் நாம் படித்து அறிந்தும்
தெளிவு பெறாதது யார் குற்றம்?
பணம் குவிக்க அதர்மம் ,
அதர்மத்தை தர்மமாகக
தான தர்மம்.
விந்தையிலும் விந்தை மனிதன்.
விதியையே மதியால் மாற்றும்
அதி புத்திசாலி.
ஆனால்
அவன்விதி ஆண்டவன் அசைவில்.
No comments:
Post a Comment