இறைவன் எங்கே ?
ஆஷ்ரமத்திலா?
ஆலயத்திலா?
சாமியார் மடத்திலா?
ஜோதிடர்கள் சாஷ்திரத்திலா?
நேர்மையான உண்மையான
தியானத்திலா?
மந்திரங்களிலா ?
ஹோம யாகங்களிலா ?
இவைகளை ஆராய்ந்து பார்த்தால்
தங்கக் குடம் கொடுத்த தங்க காரிகையும் ,
சாய் பாபா காலில் விழுந்த தயா வும் கனியும்
இடியாப்பச் சிக்கலிலே.
யாகம் நடத்திய அசுரர்களும் வதைக்கப்பட்டனர்.
ராமர் போன்ற கடவுளையும் விதி விடவில்லை.
ஆகையால்
நேரடியாக இறைவனை வழிபட்டு உயர்ந்தவர்கள்
பட்டியலைப் பார்த்தால் அவர்கள்
இன்றும் உலகில் வாழ்ந்து ஆன்மீகத்தில்
மனித தெய்வமாகப் போற்றப்படுகிறார்கள்.
௧. ஆதி கவி வால்மீகி, காளிதாசர்,ஆய்சி புத்தர்,மகாவீரர்,சங்கரர்,ரமண மகரிஷி,அரவிந்தர்,
பைகம்பர் முஹம்மது நபி, ஏசுநாதர் ,
சீரடி சாய் பாபா .
இறைவனை உண்மையில் ,உள்ளத்தில் ,
கடமையில் நேர்மையில் ,பரோபகாரத்தில் ,
மனித நேயத்தில்
ஒருமனதுடன் தியானத்தில் தேடவேண்டும்.
இராமலிங்க அடிகளார்,பட்டினத்தார் பாம்பன் ஸ்வாமிகள் என்று பட்டியல் நீளும்.
இறைவனைப் போற்றுவோம்.
ஆன்மீக நெறியில் செல்வோம்.
அது சத்தியம் ,அன்பு,நேர்மை,பொறுமை ,கடமை.மனிதநேயமும் மனிதர்களுக்கான சேவையும் .
No comments:
Post a Comment