அவனியில் ஆனந்தமாக , மன நிறைவுடன், மன சாந்தியுடன் வாழ
இறைவன் அன்பிற்கும் பக்திக்கும் பிரார்த்தனைக்கும்
ஒப்பில்லா மதிப்பு உண்டு. இந்த ஆனந்தமே பிரம்மானந்தம்.
இதை உணர்ந்து மகிழ்ந்தால் இவ்வுலகில் வேறு ஆனந்தமும் ஈடாகாது.
ஜனனம் ----மரணம் இரண்டும் மனிதன் அனுமானிக்க முடியா ஒன்று.
இதிலுள்ள இடப்பட்ட வாழ்க்கை வாழ இறைவன் அனைவருக்கும் ஒரு
திறமை கொடுத்துள்ளான். அதை அறிந்தும் மனிதன் தன் திறமையை
மற்றவர்களுடன் ஒப்பிட்டுத் தான் உயர்ந்தவன் என்ற ஆணவத்தாலும்
தான் தாழ்ந்தவன் என்ற தாழ்வு மனப்பான்மையாலும் ,
போதும் என்ற திருப்தியாலும்,கிடைத்தது பத்தாது என்ற அதிருப்தியாலும்
இன்னும் வேண்டும் என்ற பேராசையாலும் அமைதி இழந்துவிடுகிறான்.
இதெல்லாம் இன்றி பேரானந்தத்துடன் வாழ தியானம் ,
நாம ஜபம் ,தர்மம் , இறைப்பற்றுடன் பற்றற்ற வாழ்க்கை வாழலாம்.
ஓம் சாந்தி!சாந்தி !ஷாந்திஹி !
No comments:
Post a Comment