இன்று முருகப்பெருமான் கந்தசஷ்டி திருவிழா .
கந்தனின்அருள்வேண்டி கடும் விரதமிருப்போர்.பலர் .
உள்ளம் உருக உமையவன் உமையவள் புத்திரனைப்
பாடி ஜபித்து அருள் பெறுவோர்
ஆண்டுதோறும் பெருகும் பக்தர்கள்.
அறுபடை வீடுகளில் விழாக்கோலம் .
ஆறுதலளிக்கும் ஆறுமுகக் கடவுள்
இன்னல் தீர்க்கும் இடும்பன் கடம்பன்.
ராமலிங்க அடிகளார் பாடல்
மனிதவாழ்க்கைக்கு ஏற்ற பிரார்த்தனைப் பாடல் ---
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர்
உறவு கலவாமை வேண்டும்.
பெருமை பெரும் நினது புகழ் பேசவேண்டும்.
பொய்மை பெசாதிருக்கவேண்டும்.
மருவு பெண்ணாசையை மறக்கவேண்டும்
உன்னை மறவாதிருக்கவேண்டும்.
தர்மமிகுசென்னையில்
கந்தர் கோட்டத்தில் வளர் தளமோங்கும்
கந்தவேலே.
No comments:
Post a Comment