இறைவன் எங்கே?
இருந்தும் பயன் என்ன?
இன்னல் அதிகமே ,
தினமும் வேண்டுதல் ,
தினமும் ஜபம் தவம்
ஏன் ?என்றால்
பரிகாரம் என்கின்றனர்.
பார்த்துவிட்டேன் .
செய்துவிட்டேன்
அவனியில் அல்லல் ஓயவில்லை.
அனுதினமும் அவனைத் துதித்தாலும்
அவன் அளித்த கடமைகள்
மகிழ்ச்சியுடன் செய்யவில்லை.
போதுமில்லா மனமில்லை
போதும் என்ற வார்த்தை இல்லை.
தேவைகள் குறைக்கவில்லை
ஒழுங்கற்ற தன்மை போகவில்லை
ஆசைகள் அடங்கவில்லை.
ஆலயம் சென்றாலும் அலைபாயும்
அகமனம் அடங்கவில்லை.
அவனை அவனி படைத்தோனை
குறை சொல்லி பயனில்லை.
தேனீ தன் கடமை மட்டும் செய்கிறது
மகிழ்ச்சியாக ,பலன் அதற்கா?
நாமல்லவா ? ஆனால்
அறிவு கொடுத்த ஆண்டவனை
அவன் கொடுத்த திறன் அறிந்து செய்யாமல்
அவனையே குறை கூறும்
மானிடக்கு மண்ணில் ஏது அமைதி.
மன்னவனுக்கும் அமைதி இல்லை. அவனை
கொண்டவளுக்கும் அமைதி இல்லை.
மானிடப் பிறவிக்கு அவன் தரும் ஆற்றல்
திருப்தியடைந்தால் ,
இறைவன் இருக்கின்றான் ,
இன்னல் இல்லை என்றே தோன்றும்.
No comments:
Post a Comment