Wednesday, November 5, 2014

அவனருள் பலரை வாழ வைக்கும் அதிசயம்.

 உலகியல்  உண்மைகள் நேரடி சாட்சிகள்.

உளவியல்  உண்மைகள்  அரிய  காட்சிகள்.

ஊர் -உலகில்  பித்தன் ,

உளம் உள்ளதை அறியும் சித்தன்.

அருள்வாக்கு அவனருளால்

ஆஸ்திபார்த்து வருவதில்லை.

ஆளின் வெளிஆடம்பரம் பார்த்து வருவதில்லை,

ஆனால் அந்த கிறுக்கன் ,அழுக்காடை அணிந்து

பைத்தியம் போல் சுற்றுகிறான்.

அவன் கடைக்கண் பார்வை க்கு

அன்றாடம் மெத்தப் படித்தோர்

உயர்பவியில் உள்ளோர்,

ஆடம்பரக்காரில்  வளம் வருவோர்

என ஒரு கூட்டம்.

அவன் இறுதிவரை  தெரு ஓரத்தில்

அழுக்காடை  ,சாக்கடை ஓரத்தில்

துர்நாற்ற உணவு,அருள்வாக்கு

என்றே  அமரனானான். ஆனால்

அவன் அமரனானதும்  அவனை அடக்கம் செய்ய

ஒரு கூட்டம்.

அவன் பெயரில் ஆஷ்ரமம் அமைக்கும் ஒருகூட்டம்.

பொருள் சேர்க்க ஒருகூட்டம் .

அவன் அருள் பெற ஒரு கூட்டம்.

அவன் சமாதி அருகில் நிற்க

ஆயுள் சந்தா ஐம்பதாயிரம்

அவன் பெயரில் அறங்காவலர் குழு,

அகிலம் முழுவதும் ஆஷ்ரமங்கள்,

அழகு சிலைகள் ,மாயாலங்காரங்கள்.

பொன் ஆபரணங்கள் ,பொக்கிஷங்கள்

உளவியலுக்கு  அப்பால் ஒரு

ஆன்மீக சக்தி  பலரை பணக்காரர்கள் ஆக்குகிறது.

பட வியாபாரி ,டாலர் வியாபரி,பலவித

கவர்ச்சி  பதுமைகள்,சாவிகொத்துகள்,

எழுதுபொருள்கள்,நாட்காட்டிகள்,ஸ்டிக்கர்கள்

அவனருள்  பலரை வாழ வைக்கும் அதிசயம்.

ஆனால் அவன் இறுதிவரை இவ்வுலக வசதிகள் காணாதவன் .

சித்தம் போக்கு சிவன் போக்குன்றே வாழ்ந்தவன்.

இந்த உளவியல் அதிசயம் தான்

அந்த ஆன்மீக ரஹசியம்.

தியாகி  உளவியல்  வணிகத்தன்மை அற்றது

போகி உளவியல் லாப நோக்கே கொண்டது.

அன்பே  ஆண்டவன் என்று   இருப்போர்

ஆலௌகீகம் . ஆண்டிகோலம்.

பழனி ஆண்டி. அவனை அலங்கரித்து வாழ்வோர்

அவன் பக்தர்கள். உலகவியல்.

இந்த உளவியல் தான்  ஆன்மீக வளர்ச்சி.









No comments: