Sunday, September 2, 2018

சாதுக்களின் பக்தியும் சமுதாய ஒற்றுமை உணர்வும்.

 
பதின்மூன்றாம் நூற்றாண்டில் சாதுக்கள் ,பக்தர்கள்
ஆன்மீகத்தில்  மிகப்பெரிய புரட்சியைச் செய்தனர்.
 தென்னிந்தியாவில் ராமானுஜர் என்றார் ,வட இந்தியாவில்
 ராமானந்தர்.  இவர்களைத் தொடர்ந்து  சாது கபீர்,ரைதாஸ் மலுக்தாஸ்  சதான  போன்றோர்  அதே தலைமுறையில்
பக்த வல்லபாச்சாரியார் ,பக்த விட்டல்நாத், பக்த கும்பனதாஸ்  ,பக்த சூரதாஸ் ,பாபா ஹரிதாஸ், ரஸ்கான்,
கோசுவாமி துளசிதாஸ் ஆகியோர்  .
இந்த சாதுக்களும் பக்தர்களும் ஜாதி வேறுபாட்டை ஏற்கவில்லை. மனிதர்களுக்கும் வேற்றுமை உணர்வை போக்கி ஒன்றுபட முயற்சித்தார்கள்   என்பதை  நாம் கவனித்ததில் வைத்திருக்க வேண்டும்.  சாதுக்கள்
ஜாதி வேறுபாட்டை எதிர்த்துப் போராடினர்.
இதில் சில சாதுக்கள் உயர் ஜாதியினருக்கும் தாழ்  ஜாதியினருக்கும்   ஏற்பட்ட உடலுறவால் பிறந்தவர்கள்.
மஹாபாரத விதுரன் போன்று. அவர்கள் புதிய சமுதாயம்
அமைக்க முயற்சித்தனர்.  இறை பக்தியில் சாதுக்களும்
பக்தர்களும் ஒரே நோக்கத்தில் தான் பக்தி மார்க்கத்தை
நடைமுறைப்படுத்தினார்கள் .
 12 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியர்களின் தீவீரவாதத்தால் அச்சத்தால் சமுதாயத்தில்  விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும்
முயற்சியைத் துவங்கினர். மனித சமத்துவத்திற்கு நிலையான செய்தி அனுப்பினார்கள்.அவர்கள் எல்லா ஜாதியினரையும்  சேர்த்துக்கொண்டு புனித பயணம் செய்து அன்பையும் சமத்துவக்கொள்கைகளையும் பிரச்சாரம் செய்தனர். இஸ்லாமியர்கள் அகில பாரதீய அதிகாரத்தை ஆட்சியை  ஆக்ரா ,பதேஹ் புர் சிக்கிரி போன்ற இடங்களை  உத்திரப்பிரதேசத்தில்  மையமாக வைத்து செலுத்தினர் என்றால் காசி,மதுரா,பிருந்தாவன் ,பிரயாகை ஆகிய இடங்களை மையமாக வைத்து ஹிந்துக்கள் பக்தி புரட்சியைச் செய்தனர். இதற்கு வரலாறு சான்றாகக் காணப்படுகிறது. ராமானந்தர் போன்ற வேதம்  படித்த அந்தணர்களும் கபீர்,ரைதாஸ் போன்றவர்களைத் தன்
சீடர்களாக ஏற்று முக்கியத்துவம் அளித்தனர்.
ஜாதிபேதமற்ற சம்ரசமத்துவ சமுதாயம் அமைப்பதில் இவர்களின் பங்களிப்பு பாராட்டத்திற்கு உரியதாகும்.


No comments: