Thursday, September 13, 2018

வல்லபாச்சாரியார் --2.

  வல்லபாச்சாரியார்  காலத்தில் நாட்டில் முகலாயரின்

ஆட்சி வந்துவிட்டது. முகலாயர் படை எடுப்பு ,முகலாயர்  ஆட்சி ஆகியவற்றின் காரணமாக   நாட்டில் தீய   முறைகள்
வந்துவிட்டன. மதத்தில்  வெளி ஆடம்பரங்களும் ,கர்மகாண்டங்களும்  தோன்றிக்கொண்டிருந்தன.
இந்த சூழ்நிலையைப் பற்றி  வல்லபாச்சாரியார்  தன நூலான ஸ்தோத்திர ஸ்ரீ கிருஷ்ணாலயத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
கலிகாலத்தில் துஷ்ட குணமுள்ளவர்கள் தோன்றுவார்கள்.
போலித்தனமான பொய்யான வழக்கங்கள் மாயைகள் வரும்போது  ஸ்ரீ கிருஷ்ணர் தான் அடைக்கலம்  அளிப்பவர் .

அந்தக்காலத்தில் ஹிந்துக்கள் மிகவும் துன்பப்பட்டவர்களாவும் ,அடைக்கலமளிப்பவர்  இன்றி
 தவித்தனர்.   வல்லபாச்சாரியாரின்  இந்த பகுதி புரட்சியால்  வாடா இந்தியா முழுவதும்  புரட்சி அலை உருவானது.
இந்தப் புரட்சியில் ஜாதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.
ஸ்ரீ வல்லபாச்சாரியார் ஸ்ரீ கிருஷ்ணரைத்துதித்துப்   பாடும்
ஒரு பஜனைக்குழுவை  உருவாக்கினார். இந்தக்குழுவில் வல்லபாச்சாரியாரின்  நான்கு சீடர்கள் இருந்தனர்.
அவர்கள் பக்த சூர் தாஸ் , பக்த பரமானந்த தாஸ், பக்த கும்பனதாஸ் , பக்த கும்பனதாஸ் ,பக்த   கிருஷ்ணதாஸ்  .
 வல்லபாச்சாரியாரின் மகன் விட்டல்  நாத்திற்கு நான்கு  சீடர்கள்  பக்த கோவிந்தஸ்வாமி ,பக்த சீதாஸ்வாமி ,
பக்த சதுர்புஜ தாஸ் , பக்த நந்ததாஸ் ஆகியோர். இந்த எட்டு சீடர்கள் "அஷ்டசாப்" என்று புகழ்பெற்றனர்.
  இந்த பக்தர்கள் தினந்தோறும் புதிய புதிய பாடல்கள் இயற்றி பாடிவந்தனர்.  கேட்ட பக்தர்கள் அனைவரும் நன்கு
பாடத்  தொடங்கினர். அநேக இஸ்லாமியர்களும்  புஷ்டி மார்க்க பக்தர்கள் ஆனார்கள். புஷ்டி மார்கத்தில் அயல்நாட்டினர், படிக்காதவர்கள், அப்பொழுது சொல்லப்பட்ட சூத்திரர்கள், பெண்கள் என  புஷ்டி மார்க்கத்தின் எண்ணிக்கை அடைந்தது.  நூற்றுக்கணக்கான பக்தர்கள், சாதுக்கள், மஹாத்மாக்கள்   பக்தி உணர்வுள்ள சங்கீதத்தின் மூலம்  ஸ்ரீ கிருஷ்ண பக்தி மார்க்கத்தை பிரச்சாரம் செய்தனர். வாடா இந்தியாவில் ஆலயங்கள் அழிக்கப்பட்டாலும்   ஒவ்வொரு வீடும் ஆலயங்களாகின.
நம்பிக்கை இழந்த ஹிந்து சமுதாயத்தில் சமரசம் ,உற்சாகம் , நம்பிக்கை ஒளி வீசத்தொடங்கியது.
   தோற்ற ஹிந்துக்களுக்கு புஷ்டி மார்க்க அமிர்த மழை
புதிய வாழ்க்கை ஒளியைக் காட்டியது. 

No comments: