Sunday, September 2, 2018

அபகரிக்கக் கூடாது

பக்தி என்பது உலகப் பற்று கொண்டு செய்ய முடியுமா ?
ஆன்மீக வழி துறவறம் என்பது தான் என்று கூறவில்லை.
ரிஷி பத்தினிகள் ,முனி பத்தினிகள் , தெய்வ பத்தினிகள் என்று கூறப்படுகிறது.
ஆலயங்களில் இல்லறம் இனிது அமைய
சிற்பங்கள் பாலியல் கல்வி இங்கொன்றுமாக அங்கொன்று மாக செதுக்கப் பட்டுள்ளது.
சித்தார்த்தர் வழியில் செல்வோர் ,
படைப்பிலேயே உலகை அன்பு வழியில்
அழைத்துச் செல்பவர்கள். தெய்வீக புருஷர்கள்.

உலகில் அநாச்சாரங்கள் , ஹிம்சை , மனிதர்களிடம் இரக்கமற்ற மிருக குணங்கள்
அதிகாரிக்கு ம் போது சங்கராச்சாரியார்,ராமானுஜாச்சாரியார் , வள்ளலார் ,ராமானந்தர் , கபீர் தாஸ் போன்ற ஆன்மீக மகான்கள் தோன்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஜாதி மத பேதமற்ற
சமத்துவ சமரச சன்மார்க்கம் அமையும்
கோட்பாடுகளை பரப்பினர்.
ஆனால் சுயநல அரசியல் மற்றும் மதத்தலைவர்கள் மனிதர்களுக்குள் பிளவுகள் ஏற்படுத்தி தங்களை உயர்ந்தவர்களாக காட்ட
முயற்சித்தனர்.
அதன் விளைவே ஆண்டவனை கூறு போட்டு
விற்று பணம் சேர்த்து வைத்து நாட்டிற்கும்
வீட்டிற்கு ம் யாருக்கும் பயன் படாமல்

பதுக்கி வைத்தல். அதை இன்று அரசியல் வாதிகள் அதிகாரி கள் கொள்ளை என்று

கூறுவதும் மசூதி, சர்ச் , ஆலய சொத்துக்கள் அரசு

அபகரிக்கக் கூடாது என்பது.

No comments: