Saturday, September 1, 2018

ஹிந்து சமுதாயமும் சாதுக்களும் பக்தியும்


        பதிமூன்றாம் நூற்றாண்டில்    சாதுக்களும் பக்தர்களும்

பழைய  முறைகளை கண்டித்து எதிர்த்தனர். எண்ணங்களின் சுதந்திரங்கள்,கருத்துச்சுதந்திரம்  மனிதத்தன்மையற்ற தவறுகளை  எதிர்க்க ஆயிரக்கணக்கான சாதுக்களும் பக்தர்களும்  உருவாகினர் . இந்த எண்ணிக்கையில் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த  சாதுக்கள் அதிகம்.
    கடவுளுக்கு முன் அனைவரும் சமம்  என்றால் ,பிறப்பின் அடிப்படையில்  வேற்றுமைப்படுத்துவது அநியாயம் என்றனர்.
   சாதுக்கள்   ஆலயங்கள்,உருவங்கள்,சாஸ்திரங்கள், சம்ஸ்கிருத மொழி ,அந்தணர்கள், கர்மகாண்டங்கள் ,
ஜாதி வேறுபாடுகள், முதலிய போலிகளை  எதிர்தது
சாதுக்கள்,கவிதைகள், சங்கீதம் போன்ற அஹிம்சை ஆயுதங்களால் "சொற்போர்"செய்கின்றனர்.
இந்த  சாதுக்கள்  நாட்டின் குறுகிய எண்ணங்கள்,
போலி  பொய்யான ஆடம்பரங்கள்,பொய்யான பரம்பரை மூடப் பழக்கங்கள் ஆகியவற்றை கடுமையாக எதிர்த்து
மனிதத்தன்மையான  மனிதநேயச் செய்திகளைப்
பரப்பினர். 
அருவ  வழிபாட்டு பக்தர்களின் மொழி ,மொழி நடை,
கருத்து வெளிப்பாட்டு முறைகள், பா வகைகள்,
எல்லாமே பாரதமுறையில் பாரத ஆசாரிகளின்
பங்களிப்பு.

 வேதங்களின்  பாடல்கள் மந்திரங்கள் என்று சொல்லப்படுகிறது.மந்திரங்களை சுத்தமாக
 பிழையின்றி உச்சரிக்க வேண்டும்  என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.மந்திரங்களின்
மொழி  சம்ஸ்கிருதம் . ஆனால் சாதுக்களின் மொழி மக்கள் பேசும் மொழி. இந்த மக்கள் மிகவும் அப்பாவிகள்.
எளியவர்கள். வேதங்களின் மொழி தெரியாதவர்கள்.
அவர்கள் ஆழ்மனதில் இருந்து பேசுபவர்கள்.










No comments: