Monday, September 10, 2018

சாது ரைதாஸ் -2


   ரைதாஸ்  சொல்கிறார் --
 
    பக்தி வழி  மெல்ல மெல்ல சாதகனை கடவுளுடன் இணைக்கிறது.   தன்  கடவுளின் மேல் பக்தனின் உரிமை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
 இந்த உரிமையின் எல்லை  பக்தன்  இல்லை என்றால் இறைவன் பொருளுள்ளவன் அல்ல என்று ரைதாசை சொல்லவைக்கிறது.
  சாது ரைதாஸ்  இறைவனுடன் ஐக்கியமாகி ஒன்றிவிடுகிறார்.
இறைவனுக்கு அவருக்கும் உள்ள தொடர்பு ஒரு நொடி கூட பிரியவிடாது.
ரைதாசின்   பக்தி மார்க்கத்தால் காசி மன்னன் அவரின் சீடராகிவிட்டார்.   ரைதாசின் பக்தி மார்க்கத்தின் படி
தியாகம் ,சமர்ப்பணம் ,இறைபக்தியால் மனிதன் உயர்ந்து விடுகிறான். இந்நிலையில் அவனுடைய ஜாதி மதிப்பின்றி போய்விடுகிறது.
சித்தவுடன் ராணி ஜாலியும்  மீராபாயியும்  ராய்தாஷின் சிஷ்யை ஆகிவிட்டனர். மீரா ரைதாசை தன குருவாக ஏற்றுக்கொண்டார். மீரா கிருஷ்ணனின் பக்தை.
ரைதாஸ் உருவமற்ற இறைவனை வணங்குபவர். இப்படி அருவ- உருவ பக்தர்கள் இணைந்து இருந்தனர் ரைதாஸிடம்.
இந்த உருவ-அருவ  வழிபாடு  ஒற்றுமையும் ஜாதிக்கு முக்கியத்துவம்  தராத  பக்தியும் ஒரு பின்பற்றக்கூடிய
சிறப்பு நிலையாக அமைந்தது.
  ரைதாசின்  புகழ்  பரவியது.  சித்தவுடின்  மஹாராணா
ஆலயத்தின் பிராண பிரதிஷ்டை செய்ய  ரைதாசை அழைத்தார்.அங்குள்ள அந்தணர்கள் இதற்கு பலத்த எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் ராணா அவர்களின் எதிர்ப்பை பொருட்படுத்தவில்லை. ராணா ரைதாசை கௌரவித்து பாத பூஜை செய்தார்.
     ஹரிராம் வியாஸ் என்பவர் ரைதாஸ் பற்றி கூறும்போது
ஒரு பக்தர் ரைதாஸிடம் கோடிக்கணக்கில் அந்தணர்கள்
பக்தி செலுத்தினர் என்கிறார்.
 ரைதாஸர்  தன்னைப்பற்றி சொல்லும்போது  என் குடும்ப
உறவினர்கள்   வாரணாசியில் இறந்த மிருகங்களைத் தூக்கும் வேலையில்  ஈடுபட்டுள்ளனர். ஆனால் நான்   இறைவனின் தாசனாகி  பிரபுவின்  பக்தியில் ஈடுபட்டிருந்தேன். அந்த பக்தியின் மகத்துவத்தால்
தாசானுதாசனாகிய  ரைதாசை  ஆச்சாரியர்கள்,அந்தணர்கள்,ஆகியோர்  என்னை வணங்குகின்றனர்.   இவை எல்லாம்  கடவுளின் பக்தியால் தான் பிரசாதமாக நிகழ்ந்திருக்கிறது.
    நாடுமுழுவதிலும்   பக்த ரைதாசை  கௌரவித்தனர்.  அவருடைய 41 பாடல்கள்  ஸ்ரீ குரு கிரந்த சாஹப்பில் இடம் பெற்றிருக்கின்றன.  பக்த ரைதாசின் காரணமாக எல்லா சக்கிலிய சமுதாயத்திற்கும் மதிப்பு கிடைத்தது.  ரைதாஸ் என்ற பெயரே ஒரு பட்டம் போல் ஆகிவிட்டது. ஆயிரக்கணக்கான உயர்சாதியினர் ரைதாசின் பக்தர்கள் ஆகிவிட்டனர். ஹிந்து சமுதாயத்தில் ரைதாசீ என்று சொல்வதில் பெருமைகொள்ளும் ஒரு ஜாதி உண்டாகிவிட்டது.  சாது கபீரும் சாதுக்களின் ரவிதாஸ் சாது என்று கௌரவித்தார்.
 ஜாதியால் யாரும் பதவியை அணியவில்லை என்று  ரைதாஸ்  சொல்கிறார்.  வரலாற்றில் யாருமே ஜாதியின் காரணமாக உயரவில்லை என்பதே நிலையான சத்தியம்.

  ஜாட் இனத்தைச் சேர்ந்த தன்னா, நாவிதர் இனத்தைச் சேர்ந்த  சேனா, சக்கிலிய இனத்தைச் சேர்ந்த ரைதாஸ் ,நெசவாளி கபீர் அனைவரும் புகழும் பதவியும் கௌரவமும் பெற்றது  ஜாதியால் அல்ல. ரைதாஸிற்கு மேவாடின்  ராணா வின் குடும்பம் மீரா ,ராணீ ஜாலி ,காசி மன்னன் ஆகியோர் ரைதாசின் சீடனாகியது   ஜாதியால் அல்ல.
ஒரு மனிதன் உயர்வதும் ,கௌரவமும் புகழும் பெறுவதும்
ஜாதியால் அல்ல . அவருடைய கல்வி, செயல் படுவதும்,
சிரத்தை ,உதார குணம்,கடமை உணர்வும்  தான் மகோன்னத நிலையை அடைய  சான்றாக அமைகிறது.





No comments: