ஸ்ரீ வல்லபாச்சாரியார் அவர்கள் வாழ்ந்த காலம் கி.பி.1478 முதல் 1585 வரை . விக்கிரமி வருடம் 1 535 இல் இருந்து 1642 வரை. அவர் பிறந்த இடம் பற்றி அதிக கருத்து வேறுபாடுகள் உண்டு. சிலர் வாரணாசி அருகில் என்றும் சிலர் பீஹார் மாநிலத்தின் சம்பாரன் ஜில்லா என்றும் கருதுகிறார்கள் .
அவர் காலத்தில் இஸ்லாமியரின் படையெடுப்பும் ஹிந்து ஆலயங்கள் அனைத்தையும் அழித்த நிகழ்ச்சியும் ,அவர்களுடைய காட்டுமிராண்டித்தனமும் அதிகமாக இருந்தன. ஹிந்துக்களை முஸ்லிமாக மாற்றும் தீவீர
முயற்சிகள் நடந்துவந்தன .
இந்த கடின சோதனை காலத்தில் வல்லபாச்சாரியார் நாடு முழுவதும் பயணத்தைத் தொடங்கி ஸ்ரீ கிருஷ்ண பக்தி பற்றி பிரச்சாரம் செய்தார். அவர் விரஜ் தன் பணியிடத்திற்கு மையமாக்கினார். கோவர்த்தன க்ஷேத்திரத்தில் ஸ்ரீ நாதருடைய ஆலயம் கட்டினார் .
அவர் "புஷ்டி மார்கத்தை பிரச்சாரம் செய்தார். புஷ்டி என்பதன் பொருள் இறைவனின் மேல் பக்தி செலுத்தி
அவரின் கிருபையை பெறுதல்.
No comments:
Post a Comment