சாது ரைதாஸ்
சாது ரைதாஸ் காசியில் பிறந்தார்.
அவர் வாழ்ந்த காலம் விக்கிரமி வருடம் 1433 முதல் 1584 வரை.
(கி. பி. 1376 முதல் 1527 வரை ). அவர் சக்கிலிய குளத்தில் பிறந்தார்.
தன்னுடைய ஆன்மீக சாதனை ,நன்னடத்தை , பணிவான குணம் ,பக்தியின் காரணமாக அவருக்கு லக்ஷ மக்கள் அவருக்கு சீடர்கள் ஆனார்கள். அவர் சக்கிலியர் என்பதில் பெருமை கொண்டவர்.
ரைதாஸ் மனதில் ராமனந்தர் சீடர் ஆகவேண்டும் என்ற
விருப்பம் உண்டாகியது. ரைதாஸ் பஞ்ச கங்காக் கரையில்
ராமானதரிடம் தன் விருப்பத்தை வெளியிடும் போதே தான் ஒரு சக்கிலியன் என்றும் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவன் என்றும் கூறினார். உடனே ராமானந்தர் அவரை சீடராக ஏற்று கூறினார் ----"கடவுளுக்கு முன் அனைவரும் சமம்.உயர்ந்தவன் -தாழ்ந்தவன் என்ற வேறுபாடு கிடையாது.
நீ உடனே ஸ்ரீ ராமனிடம் பக்தி செலுத்து.பஜனை செய்.
பக்தி உணர்வைத் தூண்டும் பாடல் எழுது .பக்தர்களுக்கு மத்தியில் பாடு . செருப்பு செய்யும் தொழிலையும் செய்.
ரைதாஸ் அன்றாடம் குரு உபதேசத்தைப் பின்பற்றினார்.
அவர் பாடலின் மையக்கருத்து எல்லோரின் கடவுள் ஒருவரே.பிறப்பால் ஜாதிவேறுபாடு கிடையாது. இது பொய்யானது.
ஜீவனுக்கு எவ்வித ஜாதி கிடையாது. இனம் கிடையாது.குலம் கிடையாது. ஜாதிவேறுபாடு என்பதே முட்டாள்த்தனம்.பைத்தியக்காரத்தனம். உண்மையில் எல்லோரின் ஜாதியும் ஒன்றே.
சாதுக்களின் மனத்தில் எல்லோருக்கும் நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணமும் உண்டு.
ஒவ்வொவொரு இடத்திலும் இறைவனைப்பார்த்தேன் .
அவர் ஜாதிபற்றி கேட்கவில்லை. பிறப்பால் தொழிலால் யாரும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் கிடையாது. இழி செயலால் தான் தாழ்ந்தவன் ஆகிறான்.
பிறப்பால் யாரும் பிராமணன், க்ஷத்திரியன் ,வைஷ்யன் ,சூத்திரன் கிடையாது. கர்ம வினையால் தான் தான் ஒருவன் உயர்ந்தவனாகிறான். ஜாதி எதுவாக இருந்தாலும் இறைவனின் பக்தி எல்லோரையும் முன்னேற்றமடையச் செய்யும்.
ரைதாஸால் சுய கௌரவத்திற்காக போராடவேண்டியிருந்தது.
அவருக்கு ஹிந்து சமுதாயத்தின் ஜாதிக்கொடுமைகளையும்
மனிதத் தன்மையற்ற கொடுமையையும் எதிர்த்து போராடும் புரட்சியைச் செய்யவேண்டியிருந்தது.
சதனா என்ற பக்கிரி இவரை முஸ்லீம் ஆக்க முயற்சி செய்து ரைதாசின் சேர்க்கையால் அவரின் சீடராகி ராமதாஸ் என்று
ஹிந்துவாக மாறினார். சதனா ரைதாஸை முஸ்லீமாக மாற்றினால் அவருடைய லக்ஷக்கணக்கான சீடர்கள் முஸ்லீமாக மாறுவார்கள் என்ற முயற்சி வெற்றிபெறவில்லை. ஹிந்து தர்மத்தை எதிர்த்தாலும்
ரைதாஸ் வேதத்தின் மீது மிகுந்த பக்தி சிரத்தையுடன் வாழ்ந்தார். அவர் வேதத்தைத் தவிர மற்றவை எல்லாம் பிரமை என்று கூறுவார். வேத வாக்கியங்கள் மிகவும் உத்தமமானவை. மற்றவை வீண் என்பார். சிக்கந்தர் லோடி
ரைதாசை முஸ்லீமாக மாற்ற பேராசை காட்டினார். மிரட்டினார்,ஆனால் ரைதாஸ் மதம் மாறவில்லை.
சிக்கந்தர் லோடி கடும் தண்டனை அளிக்க நினைத்தபோது
ரைதாஸ் உயிர்விடுவேன் ஆனால் மதம் மாற மாட்டேன்.
வேதத்தை விடுத்து குரான் படிக்கமாட்டேன் என்கிறார்.
இவர் தன் இறைவனை கோவிந்தா,கேசவா,ராமா,கான்ஹா ,
பன்வாரி,கிருஷ்ணா ,முராரி, தீனதயாளா, நரஹரி ,கோபாலா, மாதோ என்று பலவித பெயரில் பஜனை பாடல்கள் இயற்றி பாடினாலும் அவருடைய ராமர் வையகம் முழுவதும் இருக்கும் இறைவன். அவர் தன ஒவ்வொரு செயலையும் இறைவனுக்கு அர்ப்பணித்தார். ரைதாஸ் காலத்தில் சிவன்-வைஷ்ணவர்கள் வேற்றுமை வெறுப்புணர்வு அதிகமாக இருந்தாலும் ,ரைதாஸ் இந்த வேறுபாடு பொய்யானது என்பார். சிவன்,விஷ்ணு ,ராம் என்ற மூன்று பெயர்களும் அவர் ஒன்று சேர்த்து புகழ்கிறார்.
ரைதாஸர் இறைவனின் பூஜை-அர்ச்சனைகளை எதிர்க்கவில்லை. பூசனை -அர்ச்சனை என்ற பெயரால் நடக்கும் வெளி ஆடம்பரங்களை , போலித்ததானங்களையும்
எதிர்த்தார்.

No comments:
Post a Comment