Friday, September 7, 2018

கபீர்தாஸ் -2

  கபீர்தாஸ்   கடவுளுக்குமுன்
எல்லோரும் சமம்  என்றும்
பிறப்பால் யாரும் உயர்ந்தவன்
 தாழ்ந்தவன் இல்லை என்றும்
தாங்கள் செய்யும் வினையால் தான்
அனைவரும்  உயர்ந்தவர்கள்  அல்லது தாழ்ந்தவர்கள்  என்று
தன்  கொள்கையை வலியுறுத்தினார்.
 கடவுள் படைத்த சமத்துவத்தை நிலைநாட்ட
போராடிக்கொண்டே இருந்தார்.
அவருடைய சமுதாய போராட்டத்திற்கு
அடிப்படைக் கோட்பாடுகள் உருவமற்ற இறைபக்தி.
 
 அவர் எழுதுகிறார் :--
  நான்கு கரங்கள் கொண்ட  இறைவனை வழிபடுவதில்
  எல்லா சாதுக்களும் தன்னை மறந்து ஈடுபடுகின்றனர்.
   கபீர் வழிபடும்  இறைவனின்  கரங்களை எண்ணமுடியாது.
முடிவற்ற கரங்கள் ".
   உலகையே படைத்து காக்கும் இறைவனுக்கு   பல கோடி கரங்கள் தானே இருக்கும்.  நான்கு கரங்கள் என்பது குறுகிய மதிப்பீடு.
       சமுதாயம் சீர்பட   ஒவ்வொரு தனிமனிதனும் போராடவேண்டும். ஒவ்வொருவனும் நல்லவனாக
 இரு க்கவேண்டும்.  இதற்கு ஆத்மசோதனை அவசியம்.

கபீர் சொல்கிறார் :- நான் கெட்டவனைத்தேடிச் சென்றேன் ,
 கெட்டவன்  யாரும் இல்லை.
என் மனதைத் தேடும்போது
என்னைவிட  கெட்டவன்  யாருமே இல்லை.
இவ்வாறு சுய சோதனைகள் மூலம்  ஒவ்வொரு தனிப்பட்ட
மனிதனும் திருந்தினால்  சமுதாயம் ,நாடு ,உலகம் அனைத்திலும்  சமத்துவம்  ,இறைத்துவம் ,மனிதநேயம்
நிலைப்படும்.
  கபீர் காலத்தில் ஹிந்து மத வர்ணாஸ்ரம தர்மத்தில் உயர்ந்த தாழ்ந்தவர்களின்  உடலுறவால்   பிறந்தவர்களை ஒதுக்கிவைத்தனர். இப்படி ஹிந்து தர்மத்தின் உயர் ஜாதியனரால் ஒடுக்கப்பட்டவர்கள் முஸ்லீமாக மாறினார் கள் . மத மாற்றத்திற்கு காரமாக செயல் பட்டவர்கள் உயர்ஜாதி  ஹிந்து மத வெறியர்களே .
 இவ்வாறு ஒதுக்கப்பட்டவர்கள்  முஸ்லீமாக மாறினாலும் ஹிந்துமத பழக்கவழக்கங்களையும் பின்பற்றிவந்தனர்.

கபீரும் இப்படி ஒதுக்கப்பட்டு மத மாறிய முஸ்லீம் தம்பதிகளால்  வளர்க்கப்பட்டவரே .  இப்படி ஒதுக்கப்பட்ட பிரிவினர் நெசவுத்தொழில் செய்தும் ,பிச்சை எடுத்தும் வாழ்ந்துவந்தனர். இவர்களுக்கு கடவுள்
உருவமற்றவராகவே தோன்றினார். பிராமணனின் மேன்மை
இவர்களுக்கு பெரிதாகத்  தோன்றவில்லை. இறைவனின் அவதாரம் பற்றி இவர்களுக்கு நபிக்கையே இல்லை.
அக்கம் பக்கத்தில் இருந்த ஹிந்து சமுதாயவாதிகள்
இவர்களைத் தாழ்ந்தவர்களாகவும் தீண்டப்படாதவர்களாகவும் கருதினர். இவர்கள் முகலாயர்கள் இந்தியாவில் கால் ஊன்றியபோது முஸ்லிம்களாகவே மாறிவிட்டனர்.  நெசவாளியாக  இருந்தவர்கள்  முஸ்லிமாக மாறினார்கள். இந்துக்களால் ஒதுக்கி வெறுக்கப்பட்டவர்கள் .இப்படி இவர்களால் வளர்க்கப்பட்ட கபீர்  தன்னை ஒருபோதும் முஸ்லீமாக எங்கும்  குறிப்பிடவில்லை. தன்னை நெசவாளி என்றே குறிப்பிட்டார்.


 

No comments: