Sunday, December 25, 2016

रामाचार्तितामानस बाल खांड -२०. ராமசரித மானஸ்-பாலகாண்டம் -௨௦ இருபது.

रामाचार्तितामानस बाल खांड  -२०.  ராமசரித  மானஸ்-பாலகாண்டம் -௨௦ இருபது.

  மூன்று  விதமான  கேட்பவர்களின்  சமுதாயம்  தான் ,

இந்த  நதியின்  கரைகளில்  அமைந்துள்ள
 சிற்றூர் , பேரூர் மற்றும் மாநகரங்கள்.

சாதுக்கள் -சந்நியாசிகளின் சபைகள் தான்
   வேர் . உவமைகூரமுடியாத  அயோத்யா நகரம்.

 அழகான  புகழ்  என்ற  சரயு  நதி ,
ராம  பக்தி  என்ற  கங்கையில் சேர்கிறது.
 இலக்குவனுடன்  போரிட்ட  ராமனின்
போரிட்ட புகழ் என்ற மகாநதி
சோன் அதில் வந்து  சந்திக்கிறது.
 இரண்டுக்கும்  இடையில் பக்தி என்ற  கங்கைநதியின்
ஞானம் , வைராக்கியத்துடன் ,அழகாக அலங்கரிக்கிறது.
 இப்படி  மூன்றுவித  தாபங்களையும்   அச்சுறுத்தும்
மூன்று முக நதி  ராமர் என்ற கடலின்  பக்கம் ஓடிக்கொண்டிருக்கின்றன.
 
புகழ் என்ற சர்யு நதி , ராமச்சரித்திரத்தின்  மூலம்.
இது ராமபக்தி  என்ற  கங்கையில்  சேர்கிறது.
இதனால்  இது கேட்கின்ற  நல்ல மனிதர்களின்
மனதை   பரிசுத்தமாக்கிவிடும்.
இதற்கு நடுவில் இருக்கின்ற வெவ்வேறு விதமான
விசித்திரக்  கதைகள் ,தான்  நதிக்கரையில்  உள்ள
வனங்களும் தோட்டங்களும் .

 ஸ்ரீ பார்வதி -சிவனின் திருமண மணமகன்  ஊர்வலத்தின்
இந்த  நதியில் மிகவும் அதிகமான
எண்ணற்ற ஜலராசிகள் ஜீவன்கள்  வாழ்கின்றன.
ஸ்ரீ ராமரின் பிறப்பினால் எழும் ஆனந்த  வாழ்த்து ஒலிகள்
இந்த  நதியின் வண்டுகள் மற்றும் அலைகளின்
அழககாகும்.
 இந்த  நான்கு  சகோதரர்களின்   மழலை  குணங்களின்
சித்திரம் வண்ண வண்ண  தாமரைகள்.
மகாராஜா  தசரதர்  மற்றும் ராணிகள் , குடும்பங்களின்
புண்ணிய காரியங்கள் தான்  வண்டுகளும் நீர்வாழ்  பறவைகளும்.
 சீதையின்  சுயவரத்தின்  அழகான
 கதைகள் தான் இந்த நதியின்
அழகான  காட்சிகள்.

அநேக அழகான எண்ணங்களின் வினாக்கள் தான்
இந்த  நதியின்  படகுகள்.
அதன் விவேகமுள்ள  பதில்கள் தான்
கெட்டிக்கார படகோட்டி குஹன் .
இந்த  கதையைக் கேட்டபின்
தங்களுக்குள் ஏற்படும்  சர்ச்சைகளால்  தான் ,
இந்த நதியின் உதவியால் கரையில்  செல்லும்
பயணிகள் சமுதாயம்  அழகு   பெற்றுத்கி திகழ்கிறது.

பரசுராமரின் கோபம் இந்த  நதியின் பயங்கர  வேகம்.
ஸ்ரீ  ராமரின் மென்மையான பேச்சுக்கள்
அழகாக  கட்டப்பட்ட  படித்துறைகள்.

 ஸ்ரீ ராமர் மற்றும் அவர் சகோதரர்களின்  திருமண வைபவங்கள் தான்

இந்த  நதியின்  மக்கள்  நலம் தரும் வெள்ளமாகும் .

அது  எல்லோருக்கும் சுகமளிக்கக் கூடியது.
இதைக் கேட்பதிலும் சொல்வதிலும்
ஆனந்தமடைபவர்கள்  புண்ணிய  ஆத்மாக்கள்.
அவர்கள் மகிழ்ச்சியாக இந்த  நதியில் ஸ்நானம் செய்கின்றனர்.
 ராமரின்  பட்டாபிஷேகத்தில்
  மங்களமான அலங்கரிக்கப்பட்ட   காட்சி ,
இந்த திருமணவிழாவில்  நதிக்கரையில் ஒன்றுசேர்ந்த
பயணிகளின்  கூட்டம்.
கைகேயியின்  தீய புத்தி  தான்
  இந்த  நதியின்  சேரும் சகதியுமாகும்.

அதனால்  தான் இந்த அழகு
 கதையில் பெரும்  விபத்து
ஏற்பட்டது.

 எல்லா எண்ண முடியா     துன்பங்களை போக்கும்
  சாந்தி தரும்   பரதனுடைய பாத்திரம் நதிக்கரையில்
செய்யப்படும் ஜபங்கள் , யாகங்கள்.
  கலியுகத்தின் பாபங்களையும் துஷ்டர்களின்
தீய குணங்களை வர்ணிப்பது தான் நதியின் சேரும்-சகதியும்
 கொக்குகளும் காகமும் ஆகும்.

 இந்த புகழ்  என்ற  நதி ஆறு  பருவகாலங்களிலும்  அழகானது.
எல்லா காலங்களிலும் மிகவும் சுகமும் மிகவும் புனிதத் தன்மையும்
அளிக்கக் கூடியவை. இதில்  சிவா-பார்வதியின்  திருமணம்
முன்பனிக்காலம் . ராமர் சீதையின் திருமணம் குளிர்காலம் .

 ஸ்ரீ ராமரின் திருமண சமுதாயக்கதைதான்
 ஆனந்தமும் மங்களமும்
 தரக்கூடிய  பருவங்களின்   அரசன் வசந்தகாலம் .
ராமரின் வனவாசம் சஹிக்க முடியாத கோடைகாலம்.
 வன -வழிக்கதைகள் தான் கடுமையான
வெய்யிலும் சூடான காற்றும்  ஆகும்.
  அரக்கர்களுடன் செய்த  அச்சுறுத்தும்
 போர்கள் தான்  மழை காலம்.
அவை தேவகுலம் என்ற  நெல்
 செடிகளுக்கு அழகான   நலன் செய்யக்கூடியவை.
ராமரின் ஆட்சி  காலத்தில் கிடைத்த
  சுகம் ,பணிவு, பெருமைகள்  தான்
களங்கமற்ற  புகழ்  தரும்  குளிர்காலம்.
 பதிவிரதை யில் மிக  மேன்மையான மணி  போன்ற
 சீதையின்  கதை   இந்த  நீரின் களங்கமற்ற
ஒப்பில்லா குணங்கள்.
பரதனின் குணம் நதியின் அழகான குளுமை .
அது  எப்பொழுதும் ஒன்றே போல் இருக்கும்.
 அதை  வர்ணிக்க  இயலாது.

நான்கு சகோதரர்கள் ஒருவருக்கு ஒருவர்  பார்ப்பது ,
பேசுவது , சந்திப்பது,  ஒருவர்  மற்றவரை  நேசிப்பது
சிரிப்பது , அழகான சகோதரத்துவம்
இந்த நீரின்  இனிமையும் மணமும்  ஆகும்.

என் மனக் கருத்து, பணிவு, எளிமை
 இந்த அழகான களங்கமற்ற  நீரின்
மென்மை குணமாகும்.
இந்த  நீர்  மிகவும் விசித்ரமானது.
கேட்டாலே குனமளிக்கக் கூடியது.
நம்பிக்கை என்ற தாகத்தை தணிக்கக் கூடியது.
மனதின்  அழுக்கை நீக்கக் கூடியது.
  இந்த  நீர்  ராமரின் அன்பான அழகின்  அன்பிற்கு
சத்து தரக்கூடியது.
கலியுகத்தின் எல்லா  பாவங்களையும்
அதனால் உண்டாகும் வெறுப்புக்களைப் போக்கவல்லது.
உலகின் பிறப்பு -இறப்பு  என்ற உழைப்பை  போக்கக் கூடியது.
திருப்திக்கே திருப்தி அளிக்கக் கூடியது.
பாவம்,தாபம், தரித்திரம் மற்றும்
குறைகளை போக்கும்
ஆற்றல் கொண்டது.
காமம் ,குரோதம், ஆணவம் ,மோகம் போன்றவற்றை
அழித்து புனித ஞானத்தையும் , வைராக்கியத்தையும்
அதிகரிக்கச் செய்யக் கூடியது.

இதில்  மரியாதையுடன்  குளிப்பதால் ,
இதை  அருந்துவதால் இதயத்தில் இருக்கின்ற
எல்லா பாவ-தாபங்கள் போய்விடுகின்றன.






























No comments: