Monday, December 5, 2016

 பாலகாண்டம் -.4

    துஷ்டர்கள்  மிகவும்  இரக்கமற்றவர்கள்.
   அவர்களுக்கு நன்மை செய்தவர்களுக்கும்
    தயங்காமல்  தீமை  செய்வார்கள்.
    அவர்கள் மற்றவர்களுக்கு   தீங்கு
    விளைவிப்பதையே   லாபமாகக்  கருதுபவர்கள்.
    பகவான்  விஷ்ணு ,  பகவான்  சங்கரர் இருவரின்
     புகழுக்கு    இடையூறு  உண்டுபண்ணுபவர்கள்.

    மற்றவர்களுக்கு  தீங்கு  விளைவிப்பதில்
    சஹாஸ்ரபாஹுவுக்கு  சமமானவர்கள்.
    மற்றவர்களின் தவறுகளை  ஆயிரம் கண்
      கொண்டு பார்ப்பவர்கள்.
      மற்றவர்களுக்கு  தீங்கு விளைவிக்க
     நெய்யில்  விழும்  ஈ  போன்றவர்கள்.
      மற்றவர்களை  எரிக்கின்ற  நெருப்பு போன்றவர்கள்.
     கோபத்தில்  எமனைப் போன்றவர்கள்.
      பாவம் மற்றும் தீய குணங்களின் செல்வந்தர்கள் .
      குபேரர்கள். இவர்களின்  வளர்ச்சி  மற்றவர்களின்
    நன்மையில் தீங்கு விளைவிக்கும்
    வால்   நக்ஷத்திரம்      போன்றவர்கள்.
  இவர்கள்  கும்பகர்ணன்  போன்று
   தூங்குவதில் தான்   நன்மை   இருக்கிறது.

   பனிமழை   வயலையும்  நஷ்டப்படுத்தி
    தானும் உருகிவிடுவதுபோல்
   தீயவர்கள்  மற்றவர்களுக்கு  தீங்கு  விளைவித்துத்
  தன்னையும்   மாய்த்துக் கொள்வார்கள்.
  நான்  துஷ்டர்களை  ஆதிசேஷன்  போன்று  வணங்குகிறேன்.

  இறைவனின் புகழைக்  கேட்க  ஆயிரம்  காதுகள்  கேட்ட

ராஜா ப்ருத்து  போன்று  அவர்களை  நினைத்து வணங்குகிறேன் .

அவர்களை  சுராபானம்  விரும்பும்
இந்திரன் போன்று  நினைத்து    வணங்குகிறேன்.

  துஷ்டர்கள்  தனது  நண்பர்களோ  விரோதியோ  நலமாக  இருந்தால்

பொறாமைப் படுவார்கள்.  இதை அறிந்தும்
 இவர்களை நான்  வணங்குகிறேன்.

இந்த  துஷ்டர்கள் தங்கள் தீய  குணத்தை  விடமாட்டார்கள்.

காகத்தை அன்புடன்  வளர்த்தாலும்  மாமிசம்  சாப்பிடுவதை  விடாது.

       நான்  சாதுக்கள் மற்றும்  சாதுக்கலல்லாத
     துஷ்டர்களையும்  வணங்குகிறேன்.
     இருவருமே  இன்னல்  அளிப்பவர்கள்.
     இந்த  இன்னலில்  வேறுபாடு  உள்ளது.
      சாதுக்களின்  பிரிவு  உயிர்  எடுப்பதுபோல் இருக்கும்.
      பிரிவுத் துன்பம்  உண்டாகும்.
      அசாதுக்கள் துஷ்டர்களின்  சேர்க்கை  சந்திப்பு  இன்னல் அளிக்கும்.

       நல்லவர்கள்  துஷ்டர்கள்  ஒரே  மாதிரிதான்  பிறக்கிறார்கள்.
       ஆனால் அவர்களின்  குணங்களில்   பெருத்த  வேறுபாடு காணப்படும்.

       நல்லவர்களின்  குணம்   தாமரை  மலர்  போன்றது.
       ஆனால்  தீயவர்கள் அட்டை  போன்றவர்கள்.
       உடலின்  ஸ்பர்ஷம்  பட்டதுமே  இரத்தத்தை  உறிஞ்சிவிடுவார்கள்.
      சாதுக்கள்  நல்லவர்கள்  அமிர்தம்  போன்றவர்கள்.
      மோகம் , அறியாமை , கொண்ட  மதுபோன்றவர்கள்.
     
     இருவருமே  உலகில்  பிறந்தாலும் குணத்தால்  வேறுபட்டவர்கள்.

     நல்லவர்கள்   கெட்டவர்கள்  இருவருமே
      தங்கள்  கர்மத்தின்  படி
     புகழையும்  இகழ்ச்சியும்  பெறுகிறார்கள்.
     அமிர்தம் ,நிலவு, கங்கை  போன்றவர்கள்   சாதுக்கள்.

     விஷம் ,நெருப்பு, கலியுகத்தின்  பாப  நதிகள்  போன்றவர்கள்   துஷ்டர்கள்.

   கர்மங்களை  நாசம்  செய்யும் கழுகு  போன்றவர்கள்  கெட்டவர்கள். .
 
   எதை  யார் விரும்புகிறார்களோ
   அது  அவர்களுக்கு மிகவும்  பிடித்தமானது.

  நல்லவன்  நல்லதையே  ஏற்றுக்கொள்கிறான்.

 தாழ்ந்தவன்   தாழ்ந்ததையே    விரும்புகிறான்.

அமிர்தம் புகழ்ந்து  அமரராக்குகிறது.

விஷம்  கொல்கிறது.

துஷ்டர்கள்  பாவச்செயளுக்கும் , தீய  குணங்களுக்கும்

புகழ்பெற்றவர்கள். இவர்களுக்கும்  கதைகள்  உண்டு.

 நல்லவர்கள்  புண்ணியாத்மாக்கள் .
 அவர்களுக்கும்  கதைகள்  உண்டு.

 நல்லவர்கள் ,தீயவர்கள்  இருவரையுமே  ஆண்டவன் படைக்கிறான் .
வேதங்கள், வரலாறுகள், புராணங்கள்  அனைத்துமே
 ஆண்டவன்  படைப்பில்  நற்குணம் -துற்குணம்  இரண்டுமே உள்ளன.

 பிரம்மாவின்  படைப்பில்  அனைத்துமே  இரட்டைப் பிறவிகள்.

 சுகம் -துன்பம், பாவம் -புண்ணியம், இரவு-பகல்,
 தேவர்கள் -அரக்கர்கள் ,
அமிர்த, -விஷம், மாயை-பிரம்மம், ஜீவன் -கடவுள்,
செல்வம் -தரித்திரம் ,
ஏழை -அரசன், காசி -மகதம்,
கங்கா-கர்ம்நாசா,மார்வாட்-மாளவ ,
அந்தணன் -கசாப்புக்கடைக்காரன்,
 சுவர்க்கம் -நரகம் ,இல்லறம் -துறவறம்.

வேத சாஸ்த்திரங்கள் அதன்
 நன்மை -தீமைகளைப் பிரித்துக்காட்டுகின்றன.

  இறவன்  இவ்வுலகத்தில் அசையும் பொருள் -அசையாப்பொருள்

 குணமுள்ளவை-குணமற்றவை  அனைத்தையும் படைத்துள்ளான்.

படைக்கிறான் .படைப்பான்.
 ஆனால்  நல்லவர்கள் -சாதுக்கள் நல்லதை ஏற்று
 அல்லதை  அன்னப்பறவைபோல்  விட்டுவிடுவார்கள்.
அன்னப்பறவை  பாலும் தண்ணீரும் கலந்த  கலவையில்
தண்ணீரைப் பிரித்து விட்டு  பாலை  மட்டும் அருந்தும்.
மகான்களும்  அப்படியே , நல்லதை  ஏற்று ,
தீயதை  விட்டுவிடுவார்கள்.
 கடவுள்  இவ்வாறு  பிரித்து  அறியும்
அறிவைக் கொடுத்துள்ளார்.

இருப்பினும்  காலம் ,சூழல், நட்பின்  வயப்பட்டு

நல்லவர்களும்  மாயையில் சிக்கி கட்டுண்டு
நல்லது செய்வதிலிருந்து  நழுவி  விடுவார்கள்.

இறையன்பர்கள் அந்த தவறுகளை உணர்ந்து அறிந்து  தெளிந்து

தங்களைத்  திருத்திக் கொள்கிறார்கள்.
துன்பம் -தவறுகள் போக்கி களங்கமற்ற
 புகழைத் தருகிறார்கள்.
துஷ்டர்களும் எப்பொழுதாவது
 நல்லவர்களின் சேர்க்கையால்
நல்லது செய்யத் துவங்குகின்றனர்.
ஆனாலும்   மாயையின் வசத்தால்
களங்கப்பட்டு தீயவை செய்வதை விடுவதில்லை.

 வேஷம் போட்டு ஏமாற்றும் மோசக்காரர்களைப் பார்த்து
  அவர்களின் கபடப் பேச்சில்  மயங்கி
  அவர்களை பூஜிக்கின்றனர்.
ஆனால்  ஒருநாள்  அவர்களின்  வேடமும்  கலைகிறது.

எடுத்துக்காட்டனவர்கள் -காலநேமி, ராவணன் , ராஹு போன்றவர்கள்.

 கெட்டவர்கள் வேஷம் போட்ட  ஹனுமான் ,ஜாம்பவானுக்கும்
   மரியாதையும் கவுரவமும்  கொடுக்கிறார்கள்.
 கெட்டவர்கள்  சேர்க்கையால்  தீமையும் ,
 நல்லவர்கள்  சேர்க்கையால்  நன்மையையும் உண்டாகின்றன.

  காற்றின் சேர்க்கையால் தூசியும் விண்ணைத் தொடுகின்றன.
    அதே தூசி தண்ணீருடன் சேர்ந்து சகதியுடன்  கலந்துவிடுகின்றன.

   சாதுக்களின் வீட்டிலுள்ள கிளியும் மைனாவும்
  ராமா , ராம  என்கின்றன.
தீயவர்கள் வீட்டில்  வளரும் கிளியும் மைனாவும்
திட்டும் மோசமான வார்த்தைகள்  பேசுகின்றன.

 கெட்டவற்றின்   சேர்க்கையால்  புகை கருப்பாகின்றது.
அதே புகையின்  கருப்பு புராணங்கள் எழுதப்  பயன்படுகிறது.
 அதே  புகை  தண்ணீர் ,நெருப்பு,காற்றுடன்
சேர்ந்து மேகமாகி உலகத்திற்கு
வாழ்க்கை அளிப்பதாக மாறுகிறது .

 கிரகங்கள், மருந்துகள், தண்ணீர் ,காற்று வஸ்த்திரங்கள் -
 இவை எல்லாமே, நல்லவைகள் -
கெட்டவைகளுடன்
 சேர்ந்து  உலகில்
நன்மை தீமைகளைச்
செய்கின்றன.
சிந்தனையாளர்களும் அறிவாளிகளும் கெட்டிக்காரர்களும் இந்த  விஷயத்தைத் தெரிந்து புரிந்து தெளிந்து
நடந்து கொள்கின்றனர்.

 பாதத்தின் இரண்டு பதினைந்து நாட்களிலும்
 இருட்டும்  வெளிச்சமும் சமமாகவே உண்டாகின்றன.
ஒன்றின் பெயர் சுக்லபக்ஷம். மற்றொன்றின் பெயர் கிருஷ்ண பக்ஷம்.
ஒன்று நிலவை பெரிதாக்குகிறது. மற்றொன்று குறைக்கிறது. ஒன்றிற்கு புகழும் மற்றதற்கு இகழ்வும் ஏற்படுகிறது.

 உலகில் இருக்கும் அனைத்து அசையா அசையும் படைப்புகளை
நல்லவை தீயவைகளை  இறைவனின் படைப்பு எனவே கருதி
வணங்குகிறேன்.









.





   

No comments: