ஸ்ரீ ராமசரித மானஸ்--பாலகாண்டம் --3
கேட்டதுமே ஆனந்தம் தரக்கூடிய
பாவங்கள் அனைத்தையும் போக்கக் கூடிய
சூரியனின் மகள் யமுனை, பகவான் விஷ்ணு ,பகவான் சங்கரரின் கதைகள் திரிவேணி சங்கம வடிவில்
மிக அழகளித்து இருக்கின்றன.
அவைகளில் இவைகளைச்செய் ,
இவைகளைச் செய்யாதே என
வழிகாட்டல்கள் உள்ளன.
சாதுக்கள் பக்தர்கள்
பக்தி வடிவமான பிரயாகையில்
தன் அறச் சிந்தனையில்,
திடமான குறையாத நம்பிக்கை ,
நல்ல கர்மங்களே செய்ய வேண்டும் என்ற
நோக்கத்தில் மனமுவந்து ஈடுபடுகின்றனர்.
அந்த பிரயாகையில் எல்லாநேரங்களிலும்
எல்லோருக்கும் எளிதில் இறைவனருள் கிட்டும்.
அங்குள்ள இறைவன் மரியாதையுடன் வழிபட்டால்
அனைத்து மனக் கிலேஷங்களையும் போக்கக் கூடியவன்.
அந்த தீர்தஸ்தலங்களின் அரசனாக
விளங்கும் பிரயாகை அலௌகீகமானது .
வர்ணிக்க இயலாதது. உடனடி
பலன் தரக்கூடியது.
அதனுடைய சக்தி பிரத்யக்ஷமானது.(வெளிப்படையானது )
இந்த புனித பிரயாகையின் மகிமையை சக்தியை
மகிழ்ச்சியான மனதுடன் கேட்ட புரிந்தஉடனேயே
இதில் அனைவரும் மூழ்கி இந்த மனித உடலிலேயே
அறம் . பொருள் , இன்பம் , மோக்ஷம் என்ற
நான்கையும் பெறுகின்றனர்.
இந்த தீர்த்த ஸ்தல மகிமை
பெரும் வியப்பை அளிக்கக் கூடியது.
இந்த நதியில் குளித்ததுமே காகம் குயிலாகிறது
கொக்கு அன்னமாகிறது.
காரணம் இங்கு சத்சங்கம் கிடைக்கிறது.
அதை மறைக்க முடியாது.
வால்மீகி . நாரதர்,அகஸ்தியர் ஆகிய அனைவரும்
தன் தன் வாழ்க்கைக் கதைகளை சொல்லிஉள்ளனர்.
நீர்வாழ்வன, நிலத்தில் வாழ்வன, பறந்து வாழ்வன
போன்ற இவ்வுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளும்
சத்சங்கத்தால் ஞானம் ,புகழ், நற்கதி ,ஐஸ்வரியங்கள்
நன்மைகள் பெற்றுள்ளனர்.
நல்லவர்களின் சேர்க்கை
ஆனந்தமும் நல்லவையும் அளிப்பவை.
நல்லவர்களின் சேர்க்கைதன வேராக பலன் அளிப்பவை.
எல்லா சாதனைகளும் பூக்களாகும்.
துஷ்டர்களும் நல்லவர்களின் சேர்க்கையால்
மிக நல்லவர்களாகின்றனர் .
பாரச மணியின் சேர்க்கையால் இரும்பு தங்கமாகிறது. அதுபோன்றே
துஷ்டர்களும் நல்லவர்களின் சேர்க்கையால்
மிக நல்லவர்களாகின்றனர் .
சந்தர்ப்ப வசத்தால் நல்லவர்கள்
கெட்டவர்களுடன் சேர்ந்தாலும்
தங்களின் உயர்ந்த நற்குணங்களை
நாகமணிபோல் விடுவதில்லை.
நாகமணி பாம்புடன் இருந்தாலும் விஷத்தை ஏற்காமல்
தன் ஒளியை மாற்றாமல் வீசுகிறது. அதுபோல் தான்
நல்லவர்களும்.
துளசிதாசர் சொல்கிறார் :--
நான் நல்லவர்களை வணங்குகிறேன்.
நல்லவர்களுக்கு நண்பர்களும் இல்லை ,
விரோதிகளும் (பகைவர்களும் ) இல்லை.
பூவைப் பறித்த
கரங்களில் மணம் வீசும். அவ்வாறே சாதுக்கள்
நல்லவையையே செய்வார்கள்.
நல்லவர்கள், தீயவர்கள் இருவரையும் சமமாகக் கருதுவர்.
சாதுக்கள் எளிய இதயம் கொண்டவர்கள்.
உலகத்திற்கு நன்மை விளைவிப்பவர்கள்.
அவர்களின் குணம் அன்பை அறிந்து அவர்களிடம்
பணிவாக வேண்டுகிறேன்.
எனக்கு ராமரின் அன்பு கிட்ட உதவுங்கள்.
.

No comments:
Post a Comment