Tuesday, December 20, 2016

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -பகுதி -பதினாறு.

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -பகுதி -பதினாறு.

                    இந்த  ராமரின் கதையை  முதன் முதலாக
             கேட்பவர்கள்  ஆச்சரியப்படவேண்டாம்.
             உலகத்தில் ராம கதை முடிவற்றது.

                   ராமரின்  அவதாரம்
             பலவிதமாக  நிகழ்ந்துள்ளது.
              நூறு   கோடிக்குமேல்
             எண்ணிக்கையற்ற
             ராமாயணம்  உள்ளது.  
           உலகில் ராமகதைக்கு என
             ஒரு  வரைமுறை  இல்லை.
            ஹரியும்  ஹரியின் கதையும்
           முடிவற்றது.
            ஹரியின்  சரித்திரத்தை ,
         யுக  வேறுபாடுகளின்   படி ,
         முநீஸ்வரர்கள் அநேக  விதங்களில்
        பாடியுள்ளனர்.
        மனதில்  இந்தமாதிரியான  எண்ணங்களுடன்
         சந்தேகப் படாதீர்கள்.  
       மரியாதையுடனும்,அன்புடனும்
     இக்கதையைக்  கேளுங்கள்.
     ஸ்ரீ  ராமச்சந்திரர்  முடிவற்றவர்.
     அவருடைய  குணங்களும்  முடிவற்றது.
     அவரின் கதையின்  அளவும்
   வரையறைக்குள்  அடங்காதது.
    களங்கமற்ற  எண்ணம்  உள்ளவர்கள்
    இந்த   கதையைக் கேட்டு
     ஆச்சரியப்படமாட்டார்கள்.
   இவ்வாறு  எல்லா  சந்தேகங்களையும்  போக்கி குருவின்
   சரண கமலங்களில்   வணங்கு  கிறேன்.

     மீண்டும்  கை  கூப்பி , எல்லோரையும்  வணங்குகிறேன்.
      நான்  எழுதும் கதையின்  அமைப்பில்
     எந்த  குறையும் வரக்கூடாது.
   
   இப்பொழுது   மரியாதையுடன்
    சிவபகவானை  தலை   வணங்கி
  ஸ்ரீ ராமரின் குணமும்  பண்பும்  நிறைந்த
  பரிசுத்தமான  கதையைச் சொல்கிறேன்.

ஸ்ரீ  ஹரியின் சரணங்களில்   அடிபணிந்து  வணங்கி  வருடம்
௧௬௩௧ இல்  இக்கதையை  ஆரம்பிக்கிறேன். 

No comments: