ராமசரித மானஸ்-
இந்த நீரில் தன் இதயத்தை
தூய்மைப் படுத்தாதவர்கள் கோழைகள்.
கலிகாலத்தின் மூலம் ஏமாற்றப்பட்டவர்கள்.
வஞ்சிக்கப்பட்டவர்கள்.
தாகமான மான் கானல் நீரை
நீர் என்று நினைத்து
குடிக்க ஓடி தண்ணீர் கிடைக்காமல்
வேதனைப் படுவதுபோல் ,
கலியுகத்தில் ஏமாற்றப் பட்டவர்கள்
வேதனைப் படுவார்கள்.
தன் அறிவுக்கு ஏற்றபடி
இந்த அழகான
மானசின் பண்புகளை எண்ணி ,
அதில் தன் மனதை தூய்மைப் படுத்தி ,
பவானி சங்கரை தியானம் செய்து ,
கவி துளசி தாசர் இந்த
அழகான கதையை சொல்கிறார்.
நான் இப்பொழுது ரகுநாதனின் சரண கமலங்களை வணங்கி இதயத்தில் அமர்த்தி
அவர்களுடைய பிரசாதங்களைப் பெற்று ,
இரண்டு ஸ்ரேஷ்ட முனிவர்களது சம்பாஷணையை வர்ணிக்கிறேன்.
பாரத்வாஜ முனி பிரயாகையில் வசிக்கிறார்,
அவருக்கு ராமரை மிகவும் பிடிக்கும்.
ராமரின் மேல் அதிக அன்பு உண்டு.
அவர் பெரிய தபஸ்வி.
பற்றற்ற மனம் கொண்டவர்.
புலன்களை வென்றவர்.
தயாவான். கடவுளின் வழியில்
செல்லும் சமர்த்தர்.
மாசி மாத சூரியன்
மகர ராசியில் வரும்போது
எல்லோரும் பிரயகைக்கு வருகிறார்கள்.
தேவர்கள், அசுரர்கள், கின் னர்கள் , மனிதர்கள்
அனைவரும் மிக சிரத்தையுடன் திரிவேணி சங்கமத்தில் ஸ்நானம் செய்கின்றனர்.
ஸ்ரீ வேணிமாதவின் சரண
கமலங்களை பூஜிக்கிறார்கள் .
அக்ஷய மரத்தைத் தொட்டு
அவருடைய உடலும் மனதும் ஆனந்தமடைகின்றனர்.
பரத்வாஜரின் ஆஷ்ரமம்
மிகவும் பவித்திரமானது.
மிகவும் அழகானது.
ஸ்ரேஷ்ட முனிகளின் மனதிற்குப் பிடித்தது.
கங்கையில் ஸ்நானம் செய்ய வருபவர்கள்
அனைவரும் முனிவரின் ஆஷ்ரமத்தில்
ஒன்று சேர்கிறார்கள்.
காலையில் ஸ்நானம் செய்து பகவானின்
புகழ் கதையை சொல்கிறார்கள்.
கடவுளை நிரூபித்தல், அறத்தின் இருப்பிடம் ,
தத்துவத் துறை போன்றவற்றை வர்ணித்து
விளக்குகிறார்கள். மாசிமாதம் முழுவதும் இவ்வாறு பகவத் விஷயங்களைப் பேசுகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த சம்பவங்கள் நடக்கின்றன. மகர ராசியில் ஸ்நானம் செய்து
தங்கள் ஆஷ்ரமத்திற்கு செல்கின்றனர்.
ஒருமுறை அனைத்து ரிஷிகளும் சென்றவுடன்
பரத்வாஜர் யாக்ய வல்கிய முனிவரின் சரணங்களைப் பற்றி தன்னுடன் வைத்துக்கொண்டார்.
மரியாதையுடன் அவரின் பாதங்களை கழுவி பூஜித்து உயர்ந்த ஆஷ்ரமத்தில்
உட்கார வைத்தார்.
முனிவரின் புகளை வர்ணித்தார். பின்னர்
மென்மையான குரலில் பேசினார்--
தலைவரே! என் மாநாட்டில் மிகப்பெரிய ஐயம்
எழுந்துள்ளது. வேதங்களின் தத்துவங்கள் எல்லாம் உங்கள் கைப்பிடியில் உள்ளது. அந்த சந்தேகங்களை கேட்கும் போதே ,எனக்கு பயமும் ,
வெட்கமும் வருகிறது. நீங்கள் தான் என் சந்தேகத்தைப் போக்க வேண்டும்.
நீங்கள் நான் உங்களை பரீக்ஷ்ப்பதாக நினைக்கக் கூடாது என்பது பயம் . இத்தனை வயதாகியும்
ஐயத்துடனேயே இருக்கிறேனே என்று வெட்கப்படுகிறேன். தங்களிடம் நிவாரணம் கேட்கவில்லை என்றால்
அக்ஞானியாகவே இருந்து விடுவேன்.
குருவிடம் எதையுமே மறைக்காமல் இருக்கவேண்டும், மறைத்தால் குறையில்லா
ஞானம் கிடைக்காது என்று வேதங்கள், புராணங்கள் , முனிவர்கள் அனைத்தும் சொல்கின்றன.
இதை நினைத்துத் தான் நான் என் அறியாமயை
சொல்கிறேன். தாங்கள் என் மீது கிருபைகாட்டி
என் ஐயத்தைப் போக்குங்கள்.
நன்மையே செய்பவரும் ,குணநிதியுமான ,
நிலையான பகவான் சிவன் இடைவிடாமல் தொடர்ந்து ராம நாமத்தையே
ஜபித்துக்கொண்டே இருக்கிறார்.
உலகில் நான்கு ஜாதி மக்கள் இருக்கின்றனர்.
காசியில் இறந்தால் அனைவருமே பரமபதம்
அடைகின்றனர்.
முனிவர்களின் அரசே! அதுவும் ராமரின் மகிமைதான். சிவபகவானும் ராமநாமத்தைத் தான் உபதேசிக்கிறார். இதனால் தான் பரமபதம் காசியில் மரணித்தால் கிட்டுகிறது.
அந்த ராமர் யார் ?என்று உங்களிடம் கேட்கிறேன்.
எனக்கு விளக்கிக் கூறுங்கள்.
அவதநாட்டு அரசர் தசரதகுமாரரை அனைவருக்கும் தெரியும். அவர் மனைவியின் பிரிவால் அதிக கஷ்டப்பட்டார். கோபப்பட்டு
போரில் ராவணனை வதம் செய்தார்.
ராமர் அவர் தானா ? அல்லது வேறு ஒரு ராமர் இருக்கிறாரா ? சிவபகவான் வழி படும் ராமர் யார் ? நீங்கள் உண்மையின் இருப்பிடம். அனைத்தும் அறிந்தவர். எனக்கு ஞானம் தர கூறுங்கள்.
என்னுடைய மிகப்பெரிய பிரம்மை அகல இந்த இராமகதையை விளக்கமாகக் கூறுங்கள்.
யாக்யவல்கியர் புன்முறுவலுடன் இராமகதையை நீ அறிவாயா எனக் கேட்டார்.
நீ மனம் ,வாக்கு மற்றும் கர்மத்தால் ராம பக்தன். நீ ராமனின் ரஹசியமாயமான குணத்தை அறிய விரும்புகிறாய். ஆகையால் பெரிய மூடன் போன்று இப்படிப்பட்ட வினாவைக்
கேட்டிருக்கிறாய்.
நீ மரியாதையுடன் கவனமாகக் கேள். நான் ராமரின் அழகான கதையைக்கேள்.
மிகப்பெரிய அக்ஞானம் மகிஷாசூரன் போன்றது.
ஸ்ரீ ராமரின் கதை பயங்கரமான காளி போன்றது.
ராமரின் கதை நிலவின் கதிர் போன்றது. இதை சாதுக்களான சகோர பறவைகள் எப்பொழுதும் பெற்றுக்கொண்டிருக்கின்றன.
இப்படிப்பட்ட சந்தேகத்தை பார்வதியும் கேட்டார்.
அப்பொழுது மகாதேவர் விஸ்தாரமான பதில் அளித்தார். இப்பொழுது எனது அறிவின்படி சிவன் மற்றும் பார்வதியின் உரையாடலைச் சொல்கிறேன்.
முனிவரே! கேள். அந்தக்கதை எந்த காலத்தில் எத்தன காரணமாக ஏற்பட்டது . கேட்டால் உன் துன்பங்கள் பறந்தோடும்.
ஒருமுறை திரேதா யுகத்தில் சிவபகவான் அகஸ்த்த்ய முனிவரிடம் சென்றார். அவருடன் ஜகத்ஜனனி பவானியும் இருந்தார். ரிஷி அவர்களை அனைத்து உலகிற்கும் கடவுள் என நினைத்து பூஜை செய்தார்.
அகஸ்த்திய முனிவர் இராமகதையை விஸ்தாரமாக அவர்களுக்குக் கூறினார்.
அவர்களும் அதை மிக சுகமளிக்கும் கதை என
கவனமாகக் கேட்டனர். பிறகு முனிவர் சிவபகவானிடம் அழகான ஹரி பக்தி பற்றி கேட்டார். சிவபகவானும் அவர் கேட்கத் தகுதி உள்ளவர் என அறிந்து பக்தியை நிரூபித்தார்.
ஸ்ரீ ராமரின் குணங்களின் கதையை சொல்லிக்கொண்டும் கேட்டுக்கொண்டும்
சிவபகவான் அங்கிருந்தார், பிறகு முனிவரிடம் விடைபெற்று தேவி தக்ஷ குமாரியுடன் கைலாசம் சென்றார்.
அந்த தினங்களில் தான் ஸ்ரீ ஹரி உலகின் பாரத்தை சுமக்க ரகுவம்சத்தில் அவதரித்தார்.
அந்த அவினாஷி பகவான் அப்பாவின் வாக்கை நிறைவேற்ற தவ வேடத்தில் தண்டகாரண்ய வனத்தில் வாழ்ந்துவந்தார்.
இறைவனின் தரிசனம் எப்படி கிடைக்கும் ?
அவரோ ரஹசியமாக அவதரித்திருக்கிறார்.
நான் சென்றால் மக்கள் அறிந்து கொள்வார்களே என்று சிவபகவான் மனதில் எண்ணிக்கொண்டிருந்தார்.
ஸ்ரீ சங்கரர் இந்த குழப்பத்தில் இருந்தார். பார்வதி தேவிக்கு இந்த ரஹசியம் தெரியாது . சிவபகவானின் மனதில் ஆவல் அதிகரித்துக்கொண்டிருந்தது.
பாலகாண்டம் -இருபத்தொன்று - துளசிதாஸ்

No comments:
Post a Comment