Sunday, December 18, 2016

रामाचारिथ्मानस --ராமசரிதமானஸ் -பாலகாண்டம் -௧௨ துளசிதாஸ்

   ராமசரிதமானஸ் -பாலகாண்டம் -௧௨ பன்னிரண்டு

இந்த  கலியுகத்தில்  இறைவனின்  நாம ஜபம் தான்
 கற்பகவிருக்ஷம் .
பெயரைச்  சொன்னதுமே
எல்லா சிக்கலையும் போக்கவல்லது.

கலியுகத்தில் இந்த ராமஜெபம்
மனம்  விரும்பும் அனைத்து
 பலன்களும் தரக்கூடியது.
 பரலோகத்தின் மிக  நன்மை தரக்கூடியது.
இந்த  உலகத்தின் அன்னையும் தந்தையுமாக
வளர்ப்பது  காப்பது
நாம ஜெபமே.

இந்த  ராமநாமம்  கலியுகத்தில்
 தெய்வீக இருப்பிடத்தைத் தருகிறது.
இவ்வுலகத்தில் தாய் தந்தையர்கள் போல்
எல்லாவிதமான பாதுகாப்பைத்தரக்கூடியது.

கலியுகத்தில்  அறம்  இல்லை.
பக்தி  இல்லை..
ஞானமும்  இல்லை
ராமநாமம் தான் ஒரே
ஆதாரமாக விளங்குகிறது.
கபடம் வஞ்சனையின் சுரங்கமான
கலியுகத்தில்  அதை  வெல்வதற்கு
ஒரே  வழி  ராமநாமம்  தான்.
அறிவுதரக்கூடியது.
ராமநாமம் ஸ்ரீ நரசிங்கப்பெருமாள்  போன்றது. 
கலியுகம்  ஹிரன்யகஷ்யபு போன்றது.
ஜபம்  செய்பவர்கள் பக்த  பிரகலாதனைப் போன்றவர்கள்.
இந்த  ராமநாமம் தேவர்களின் விரோதிகளைக்
கொன்று  ஜபம் செய்பவர்களைப்  பாதுகாக்கும்.
 அன்புடன்  நல்லுணர்வோடு ,
விரோத பாவத்தோடு ,
கோபத்தோடு ,
. சோம்பேறித்தனமாக
எந்த வித  மனோ பாவத்தோடும்
ராமநாமத்தை ஜபித்தால்
பத்து திக்குகளிலிருந்தும்
நன்மையே  நடக்கும்.
துளசிதாசராகிய  நான்
 ராமநாமத்தை  ஜபித்து
ரகுநாதரை வணங்கி
ராமனின் குணங்களின்
சிறப்பை வர்ணிக்கிறேன்.
அந்த  ராமர்  என்னை
 எல்லாவிதத்திலும்
  சீர்திருத்துவார்.
ராமர் புருஷோத்தமர்.
துளசியாகிய  நான்  மிகவும் கெட்ட சேவகன்.
இவ்வளவு  இருந்தும் அந்த தயாநிதியான ராமர்
என்மேல் கிருபை காட்டுவதில்
தயங்கமாட்டார்.
வேதங்களிலும்  உலக நடைமுறையிலும்
சிறந்த  கடவுள் இதே முறையால்  புகழ் பெற்றவர்கள் .
அவர்கள்  பிரார்த்தனையைக்  கேட்டதுமே
அறிந்துகொள்கிறார்கள்.
பணக்காரர்கள்  ஏழைகள்,
கிராமவாசி -நகரவாசி, பண்டிதன் -முட்டாள்
கெட்டவன்-புகழ்பெற்றவன்  எல்லோரையும்
அறிந்து  அதற்கேற்ப பலன்  அளிப்பதில் வல்லவர்.

நல்ல கவிஞர்கள், கெட்டகவிஞர்கள், 
எல்லா  ஆண்களும் பெண்களும்
தன் தன் அறிவுக்கு ஏற்றவாறு
அரசனைப்  புகழ்கின்றனர்.
சாதுக்கள், நல்லொழுக்கம் உள்ளவர்கள்,
 கடவுளின் அம்சமான கிருபை  நிறைந்த
அரசனாகிய  ராமச்சந்திரனை
வணங்குகின்றனர்.
எல்லோருடைய குரல், பிரார்த்தனை, பக்தி
 அனைத்தையும்   அறிந்து எல்லோருக்கும்
தகுத்த கௌரவத்தை அளிக்கிறார் ஆண்டவன்.
இந்த  குணம்  வையக அரசருடையது.
கோசலநாதனான  ராமர் மிகவும்  உயர்ந்தவர்.
ராமர்  தூய அன்பை நேசிக்கிறார்.
உலகில் என்னைப்போன்ற
மட்டமான முட்டாள் யாருமே இல்லை.
இருந்தபோதிலும் கிருபையுள்ள  ராமர்
என்னைப்போன்ற துஷ்ட சேவகர்களின்  மீது
அன்பு  செலுத்துகிறார்.
விரும்புகிறார்.
அவர் கல்லை கப்பலாகவும் ,
வானரம் கரடிகளை தன் அறிவுள்ள
மந்திரியாக்கியுள்ளார்.

என்னை எல்லோரும் ராமரின்
 பக்தனாகக் கருதுகிறார்கள்.
நானும் வெட்கம் தயக்கமின்றி என்னை ராம
பக்தன் என்று சொல்கிறேன்.
கிருபையுள்ள  ராமர் ,
 இந்த நிந்தனை செய்கின்ற என்னை
சகித்துக்கொள்கிறார்.
சீதாபதியான ராமர்  என்னைத்
 தன்  தொண்டனாக ஏற்றுள்ளார்.
என்னுடைய  குற்றங்கள்- குறைகளால் நரகத்தில் கூட
எனக்கு இடமளிக்கத் தயங்குவார்கள். என்
தவறுகளை  நினைத்து  பயந்துகொண்டிருக்கிறேன்.
ஆனால் பகவான் ராமர் என் தவறுகளை
கனவிலும்  சிந்திக்கவில்லை.










No comments: