Wednesday, December 21, 2016

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -பதினேழு -ராமசரிதமானஸ்.

          ராமசரிதமானஸ்  --பாலகாண்டம் -பதினேழு -ராமசரிதமானஸ்.


       சித்திரை மாதம்  நவமி  திதி செவ்வாயன்று
      அயோத்தியாவில் இந்த  ராமர்  தோன்றினார்.
      ராமர்  பிறந்தநாளன்று  அனைத்து  புனித   தீர்த்தங்களும்
      அயோத்தியாவிற்கு  வந்துவிடுகின்றன  என்று வேதங்கள் சொல்கின்றன.

            அசுரர்கள், நாக தேவதைகள், பறவைகள், மனிதர்கள்,
       முனிவர்கள் , ,தேவர்கள், எல்லோரும் அயோத்தியாவிற்கு வந்து
       ராம  ஜன்மதினத்தில் ரகுநாதருக்கு  சேவை  செய்கின்றனர்.
      புத்திசாலிகள்  ராமரின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.
     ஸ்ரீ ராமரின் அழகான  புகழைப் பாடுகின்றனர்.

          நல்லவர்களின் மிகப்பெரிய  சமூகம்
  அயோத்தியாவின் சர்யு   நதிக்கரையில்  ஸ்நானம் செய்கின்றனர்.    இதயத்தில் அழகான ஷ்யாம்  வண்ண  (கருநீலவண்ண)
  ராமரை  ஜபிக்கின்றனர்.
  தியானம் செய்கின்றனர்.
    சரயு  நதியை  தர்ஷித்தல்,
   தீண்டுதல், குளித்தல், நீர் அருந்துதல்,
எல்லா பாவங்களையும் போக்கும்  என்று
  வேதங்கள்-புராணங்கள் சொல்கின்றன.
இந்த  நதி மிகவும் புனிதமானது.
இதன் மகிமை  முடிவற்றது.
களங்கமற்ற   அறிவுள்ள சரஸ்வதியும்
 இதன் மகிமையைக்  கூறமுடியாது.

இந்த  அழகுநிறைந்த அயோத்தியா புரி ,
 ராமச்சந்திரரின் ,
இறைவனின்  இருப்பிடம்.
அனைத்து  உலகங்களிலும் புகழ்  பெற்றது.
மிகவும்  பவித்திரமானது.
 உலகில் உள்ள  அனைத்து  ஜீவராசிகளும்
(முட்டையில் இருந்து தோன்றுபவை,
வியர்வையிலிருந்து  தோன்றுபவை,
பூமியிலிருந்து  தோன்றுபவை,
நீரிலிருந்து  தோன்றுபவை,
வெவ்வேறு யோனிகளிலிருந்து  தோன்றுபவை )
இந்த அயோத்யாநகரில்  வந்து உடலைத் தியாகம் செய்தால்
அவைகளுக்கு  மறுபிறவி  கிடையாது.
அவர்கள் ஸ்வர்கத்திலேயே
இறைவனின் இருப்பிடத்திலேயே வசிப்பார்கள்.

    எல்லாவிதத்திலும்  உயர்ந்த , அழகான ,
  எல்லா சித்திகளும் தருகின்ற ,
 எல்லா   நலன்களும்    தருகின்ற
அயோத்தியாநகரம்  என்றறிந்து
இந்த  புனித  கதையைத் துவங்குகிறேன்.
இந்தக்கதையைக்   கேட்பதால்,
காமம், ஆணவம் , கர்வம் போய்விடும்.
 இந்தக் கதையின்  பெயர் ராமசரிதமானஸ்.
இதைக்கேட்டாலே மன சாந்தி கிடைக்கும்.
மனம் என்ற யானை வையகஆசைகளின்
காட்டுத்தீயில் எரிந்துகொண்டிருக்கிறது.
இந்த  மனம் ராமசரிதமானஸ் என்ற  மானசரோவரில்
வந்துவிட்டால் சுகமடையும்.
இந்த  ராமசரிதமானஸ் முனிகளுக்குப் பிரியமானது.
இந்த அழகான புனிதநூலை சிவபகவான்  இயற்றினார்.
இது மூன்றுவித தோஷங்களைப்  போக்கவல்லது.
துன்பங்கள், தரித்திரங்கள், கலியுகத்தின் தீய நடத்தைகளை,
  கலியுகத்தின்    எல்லா  பாவங்களைப் போக்கிவிடும்.
  சிவபகவான்  இந்த நூலைப் படைத்து , நல்ல சந்தர்பத்தில்
பார்வதிதேவியிடம்  கூறினார்.
சிவபகவான்  மகிழ்ந்து  
 இதன் பெயரை "ராமசரிதமானஸ் "என்று வைத்தார்.

 நான் அந்த ' நலன் அளிக்கக்கூடிய ராமகதையைக் கூறுகிறேன்.
மரியாதையுடம்  மனம் ஈடுபட்டு இதைக்  கேளுங்கள். .




 
 

No comments: