Monday, December 26, 2016

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -௨௧ இருபத்திரண்டு.

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -௨௧  இருபத்திரண்டு.

  இராவணன்  தன் மரணத்தை
 மனிதனின் கையால் தான் நிகழ வேண்டும்
 என வரம் கேட்டிருந்தான்.
 பிரம்மாவின் வாக்கை கடவுள்
 உண்மையாக்க விரும்பினார்.

சிவன்  நான் அருகில் இல்லை என்றால்
வருந்தவேண்டியிருக்கும் , எந்த
உபாயமும் தோன்றவில்லையே என்று
 எண்ணிக்கொண்டிருந்தார்.

இந்த  நேரத்தில் தான்  தாழ்ந்த எண்ணம் கொண்ட
ராவணன் மாரீசனை உடன் அழைத்துக்கொண்டு
அவனை   பொய் மானாக்கி,
ஏமாற்றி சீதையை கடத்திச் சென்றான்.
அவனுக்கு ராமனின் உண்மையான செல்வாக்கு
தெரியவில்லை.
மானைக்கொன்று விட்டு லக்ஷ்மனனுடன் குடிலுக்குத்
திரும்பினால்,  குடிலில் சீதை இல்லை.
ராமரின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
ராமர்  மனிதனைப்போன்றே மனைவியைப் பிரிந்து
கவலைப்பட்டார்.  இரு சகோதரர்களும்  சீதையைத் தேடி
அலைந்து கொண்டிருந்தனர்.
இவர்கள் இவ்வாறு சேர்த்தல்-பிரிதலை அனுபவித்ததில்லை.
அவர்களுக்கு இந்த  நேரடியான பிரிவித் துன்பத்தை
சஹிக்க முடியவில்லை.
 ஸ்ரீ ரகுநாதரின் பா பாத்திரம் மிகவும் விசித்திரமானது.
அதை சிறந்த உயர்ந்த ஞானிகள் தான் அறிவார்கள்.
மந்த புத்தி உள்ளவர்கள் , மோகத்தின் வசத்தால்
மனதில் வேறுமாதிரியாகத்தான்  புரிந்து கொள்வார்கள்.
  சிவபகவான்  இந்த சந்தர்பத்தில்  ஸ்ரீ ராமரைப் பார்த்தார்.
மனதில் மிகவும் மகிழ்ந்தார்.
இந்த அழகுக் கடலான ராமரை
கண்கள் குளிர பார்த்தார்.
ஆனால் சந்தர்ப்பம் சரியில்லாததால்
 அறிமுகப் படுத்திக் கொள்ளவில்லை.

 காமதேவனையே அழித்த  சிவபகவான்
சச்சிதானந்தம் வாழ்க என்று  கூறிச் சென்றார்.
உடன் வந்த பார்வதி தேவிக்கு எதுவும் புரியவில்லை.
அவரின் ஆனந்தம் கண்டு உமாதேவியாருக்கு ஐயம் ஏற்பட்டது.
அவர் தன்  மனதில் நினைத்துக்கொண்டார் --
வையகம்  முழுவதும் சிவபகவானை வழிபடுகிறது.
அவர் உலகநாதன். தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் ஆகிய
அனைவரும் வணங்குகின்றனர்.
அப்படிப்பட்டவர் ஒரு ராஜகுமாரனை
சச்சிதானந்த பரம தாம் என்று வணங்குகிறார்.
அவனின் அழகில் மயங்கி இதயத்தில்
 அன்பை தடுக்கமுடியமல் ஆனந்தத்தில் மூழ்கி இருக்கிறார்.
  அனைத்து இடங்களிலும் வியாபித்திருக்கின்ற,
மாயை இல்லாத, பிறவியில்லாத, ஆசையில்லாத ,
எந்த வேற்றுமையும் இல்லாத  இந்த பரம்பொருள் ,
வேதங்களாலும் அறியப்படாதவர்,
மனிதனாக அவதரித்துள்ளார்.
தேவர்களின்  நன்மைக்காக மனிதனாக அவதரித்த விஷ்ணு ,
சிவபகவானைப் போலவே , எல்லாமறிந்த ஞானி.
அவர் ஞானக் கிடங்கு, லக்ஷ்மியின் கணவர், அசுரர்களின் சத்துரு
விஷ்ணு அக்ஞானி போன்று மனைவியைத் தேடுவார்.
  சிவனின் வாக்கு ஒருபொழுதும் பொய்யாகாது.
சிவபகவானுக்கும் சகலமும் தெரியும்.
பார்வதியின் மனதில் இந்த பெரும் சந்தேகம் தோன்றியது.
அவருக்கு எந்த விதத்திலும் இதை அறியும் ஞானம் தொன்றவில்லை

 பவானி இந்த ஐயம் பற்றி எதுவும் வெளியடவில்லை.
ஆனால் பகவன் சிவன்  எல்லாம் அறிந்துகொண்டார்.
அவர் சாதியிடம்  சொன்னார்--உனக்கு பெண்ணின் குணம் உள்ளது.
இப்படிப்பட்ட ஐயத்தை  ஒருபொழுதும்
மனதில் வைத்துக்கொள்ளக் கூடாது.
 அகத்திய முனி  புகழ்ந்தவர் இவரே.
நானும் இவரின் பொருட்டு என் பக்தியை வெளிப்படுத்தினேன் .

இவர்தான் என் இஷ்ட தெய்வம்  ஸ்ரீ ரகுவீரர்.
அவருக்கு ஞானி-முனிகள் எப்பொழுதும் தொண்டாற்றுகின்றனர்.
 இவரின் புகழை ஞானிகள், முனிகள்,யோகிகள், சித்தர்கள்
இடைவிடாமல் பவித்திர மனத்தோடு அவர் புகழ் பாடுகின்றனர்.
வேதங்களும், புராணங்களும் , சாஸ்த்திரங்களும் அவர் புகழ்
பாடுகின்றன. அவர்தான் எங்கும் நிறைந்துள்ள ,
அனைத்து அண்டங்களுக்கும் ஸ்வாமியனவர்.
மாயாபதி, தினந்தோறும் மிகவும் சுதந்திரமானவர், பிரம்ம உருவமான பகவான் ஸ்ரீ ராமர்.  தன் பக்தர்களின் நன்மைக்காக , நலனுக்காக ,
ரகுகுல மணியாக அவதரித்துள்ளார்.
 பலமுறை விளக்கியபோதும் ,
உமாவின் மனதில் அவர் உபதேசம்  புரியவில்லை.
சிவனுக்கு பகவானின் மாயையின் வலிமை புரிந்தது.
அவர் புன்சிரிப்புடன் உமாவிடம் சொன்னார்--
உன்மனதில் சந்தேகம் அதிகமாக உள்ளது. நீயே போய் பரீக்ஷித்துப் பார்.
(சோதனை செய்துபார் ) நீ திரும்பும் வரை இந்த ஆல மரநிழலில்
அமர்ந்திருக்கிறேன்.
உன் அறியாமையால் ஏற்பட்ட ஐயம் போகவேண்டும்.
விவேகத்துடன் சிந்தித்து அதைச் செய்.
சிவனின் ஆக்ஞை பெற்று உமா சென்றார்.
எப்படி சோதிப்பது  என்று நினைக்கத் தொடங்கினார். 

No comments: