பாலகாண்டம் -6-ராமசரிதமானஸ்
நதிகள் குளங்கள் போன்று மனிதர்களும்
எண்ணிக்கையில் அதிகம்.
வெள்ளம் பெற்று குளங்கள் மகிழ்கின்றன.
மனிதனும் தன் முன்னேற்றத்தால்
மகிழ்ச்சி அடைகின்றான்.
சமுத்திரமானது முழு நிலவைக்கண்டு
பொங்குகிறது. அப்படி சமுத்திரம் போன்று
மனிதர்கள் எண்ணிக்கையில் குறைவு.
என்னுடைய பாக்கியம் சிறிது, ஆனால் விருப்பம் மிகப் பெரிது,
என் ராமனின் புகழ் கேட்டு நல்லவர்கள் சுகம் பெறுவார்கள்.
துஷ்டர்கள் பரிகசித்து சிரிப்பார்கள்.
துஷ்டர்கள் சிரிப்பதால் எனக்கு நன்மையே உண்டாகும்.
இனிமையான குரல் கொண்ட
குயிலுக்கு காகத்தின் குரல்
கர்ண கொடூரமாகத்தான் இருக்கும்.
கொக்கு அன்னப்பறவையையும்
தவளை வானம் பாடி யையும்
பார்த்து சிரிக்கும்.
அவ்வாறே இழிமனம் படைத்தவர்கள்
நல்லதைக்கேட்டு சிரிக்கிறார்கள்.
கவிதைகளை ரசிக்கத் தெரியாதவர்களுக்கும் ,
ஸ்ரீ ராமச்சந்திரன் மேல் அன்பு இல்லாதவர்களுக்கும்
இந்த ராம கதை பரிகசிக்கத்தக்கதாக இருக்கும்.
இந்த ராமகாதை மக்கள் மொழியில் எழுதப்படுகிறது
என்னுடைய அறிவு ஒன்றும் அறியாதது.
இதனால் இது சிரிக்கத் தகுதியானதுதான்.
சிரிப்பதால் இதில் எதுவும் தவறில்லை.
இவர்களுக்கு இறைவனின் திருவடிகளில் அன்பில்லை.
நல்ல புத்தியும் இல்லை.
சிவனின் -விஷ்ணுவின் மேல் பக்தி உள்ளவர்களுக்கு
இருவரிடத்திலும் வேற்றுமை காணாதவர்களுக்கு
இந்த ரகுநாதரின் கதை இனிமையாக ரசிக்கத்தக்கதாக இருக்கும்.
நல்லவர்கள் ஸ்ரீ ராமச்சந்திரன் மீதுள்ள பக்தியால் ,
அலங்கரிக்கப்பட்டதை அறிந்து அழகான
வார்த்தைகளால் புகழ்வதைக் கேட்பார்கள்.
நான் கவிஞனுமில்லை.
நல்ல இலக்கியப் படைப்பில்
தேர்ந்தவனுமில்லை.
எனக்கு எல்லா கலைகளும் தெரியாது.
கல்வியும் அதிகமாகக் கற்றதில்லை .
பலவித எழுத்துக்கள், சொற்கள், பொருள்கள்,
அணிகள், சந்தங்கள், பாவங்கள், ரசங்கள் , அதன் வேறுபாடுகள்,
கவிதைகளின் வித விதமான குணங்கள் -குற்றங்கள் உள்ளன.
இவைகளில் கவிதை சம்பந்தமான ஒரு விஷயத்திலும் ஞானம் கிடையாது.
நான் சத்தியமாக வெள்ளைக் காகிதத்தில் கைவைத்து சொல்கிறேன்.
என்னுடைய படைப்பு எல்லா குணங்களும் இல்லாமல் இல்லை.
இதில் உலகப் புகழ் பெற்ற ஒரு குணம் இருக்கிறது.
அதை எண்ணி நல்ல அறிவு உள்ளவர்கள்,
தூய ஞானம் உள்ளவர்கள், இந்தக் கதையைக் கேட்பார்கள்.
இதில் ரகுநாதருடைய உயர்ந்த பெயர் உள்ளது.
அது மிகவும் பவித்திரமானது.
அதில் வேதம் வேதங்கள் புராணங்களின் சாரம் உள்ளது.
நல்லது செய்யும் பவனம் உள்ளது,
அமங்கலங்களை போக்கக்கூடியது,
பார்வதியுடன் சேர்ந்து எப்பொழுதும்
சிவனும் ஜபித்துக் கொண்டிருக்கும் ராமநாமம் .
நல்ல கவிஞர்கள் மூலம் எழதப்பட்ட அபூர்வமான
கவிதைகளும் ராமநாமமின்றி சோபிக்காது.
நிலவுபோன்ற முகமுடைய அழகான பெண்ணும் ஆடையின்றி
சோபிக்க மாட்டாள்.
இதற்கு விபரீதமாக தீய கவிஞர்கள்
இயற்றிய கவிதைகளும் ராமநாமமும் ,ராமர்
புகழும் சேர்ந்தால் அறிவுள்ளவர்களும்
மரியாதையுடன் பாடவும் கேட்கவும் செய்கிறார்கள்.
நல்லவர்கள் வண்டுகள் போல் நல்லவற்றை மட்டுமே ஏற்கிறார்கள்.
என்னுடைய இந்த படைப்பில் கவிதைகளின் எந்த ரசமும் இல்லை.
ஆனால் இதில் ஸ்ரீ ராமருடைய பிரதாபம் உள்ளது.
என் மனதில் இந்த நம்பிக்கைத் திடமாக உள்ளது. .
நல்லவர்களுடன் சேர்ந்தால் நல்லதே நடக்கும்.
இதில் சிறப்பு ஏற்படும்.
ஊதுபத்திப் புகை மனம் பரப்பி
புகையின் எரிச்சலான குணத்தை விட்டுவிடுகிறது.
அவ்வாறே என்னுடைய கவிதை நிச்சயமாக அழகற்றது.
ஆனால் இதில் உலகத்திற்கு நல்லது செய்யும் ராமகதை
கருவாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறந்தது.
இந்த ரகுநாதரின் கதை நல்லது செய்து
பாவங்களைப் போக்கக் கூடியது.
என்னுடைய இந்த அழகற்ற கவிதை
கங்கை நதி போன்று வளைந்து செல்கிறது.
ஸ்ரீ ராமச்சந்திரனின் பெயருடன் புகழ் பாடுவதால்
நல்லவர்களால் விரும்பப்படும்.
சுடுகாட்டின் சாம்பல் மகாதேவனின்
உடலில் பூசுவதால் புனிதமாகிறது.
நினைத்தாலே புனிதத்தை உண்டாக்கக் கூடியது.
ராமரின் புகழ் பாடுவதால் எல்லோருக்கும்
மிகப்பிரியமான நூலாகும். மலயபர்வதக் காற்றின் சேர்க்கையால்
சந்தன மரத்தில் நறுமணம் வீசுகிறது.
நறுமணம் இருப்பதால் அதை கட்டை என்று யாரும் நினைப்பதில்லை.
கருப்பான பசு மாடு வெண்மையான
ருசியான பால் தருவதுபோல் நான்
கிராமிய மொழியில் ராம நாமத்தின் புகழையே பாடுவதால் அதுவும் அனைவருக்கும் பிடிக்கும். பால் போல் நலமளிக்கும்.
பாமரர்கள் மொழியில் எழுதிய ராமாயணமும் வித்வான்களாலும்
அறிவாளிகளாலும் விருப்பமாக பாடப்படுகிறது.

No comments:
Post a Comment