ராமசரிதமானஸ் -பாலகாண்டம் --௧௧. துளசிதாஸ்.
இறைவனின் நாமம் பிரசாதமாக ஏற்றதால் சிவபகவன்
அழியாத சக்தி பெற்றவர்.
சுடலை பொடி பூசி அமங்கல வேஷதாரியும்
மங்களத்தின் நிதியானார். சுகமஹா ரிஷி , சனகர் போன்ற சித்தி பெற்ற யோகிகள் முனிவர்கள், யோகிகள் பெயரின் பிரசாதத்தால்
ப்ரஹ்மானந்தத்தை அனுபவிக்கிறார்கள்.
நாரதர் பெயரின் பிரதாபத்தை
அறிந்திருக்கிறார்.
ஹரி வையகத்தில் அனைவராலும்
அன்பு செலுத்தப்படுபவர்,
நாரதருக்கு ஹரியும்
ஹரிநாமமும் பிரியமானவை.
பிரஹலாதனுக்கு எவ்வித ஆதரவும் இல்லை. ஆனால்
இறை நாமத்தை ஜபித்தே
பக்தர்களின் சிரோமணி ஆனார்..
துருவன் சின்னம்மாவின் கொடுமையால்
துன்பப்பட்டு ஸ்ரீ ஹரியின் பெயரை உச்சரித்து
ஜபித்து தருவ நக்ஷத்திரமாகி
திவ்ய இடத்தைப் பெற்றான்.
ஹனுமான் புனிதப் பெயரை
ஜபித்தே ராமரை தன்வயப்படுத்தினார்.
தாழ்ந்த அஜாமில், யானை , வேசி அனைவரும்
ராமநாமம் ஜபித்தே முக்தி பெற்றனர்.
கலியுகத்தில் ராம நாமம் கல்பக விருக்ஷம் போன்றது.
நலமளிக்கக் கூடியது.
அவரை தியானித்த துளசிதாசர்
அபின்போன்ர போதைச்செடியாக இருந்தவர்
புனித துளசிச் செடியானார்.
கலியுகத்தில் மட்டுமல்ல ,
நான்கு யுகங்களிலும் ,
முக்காலங்களிலும் ,
மூன்று லோகங்களிலும்
இறைவனின் பெயரை நாமத்தை ஜபித்தே
துன்பங்களில் இருந்து விடுபட்டனர்.
வேதங்கள் ,புராணங்கள்,
சாதுக்கள் அனைவரும் கூறுவது
அனைத்து புண்ணிய பலன்களும்
ராமநாமம் ஜபித்தால்
கிடைத்துவிடும் என்பதே
சத்ய யுகத்தில் தியானத்தினாலும் ,
திரேதா யுகத்தில் வேள்வியினாலும்
துவாபர யுகத்தில் பூஜை செய்வதாலும்
இறைவனருள் கிட்டியது. ஆனால்
கலியுகத்தில் பாவங்கள் மலிந்துள்ளது.
மனிதமனம் பாவக்கடலில் மீனாகி
நீந்துகிறது. அது பாவத்திலிருந்து
பிரிய விரும்பவில்லை.
ஆகையால் தியானம், யாகம் ,பூஜை செய்ய முடியாது.
இறைவனின் நாமம் பிரசாதமாக ஏற்றதால் சிவபகவன்
அழியாத சக்தி பெற்றவர்.
சுடலை பொடி பூசி அமங்கல வேஷதாரியும்
மங்களத்தின் நிதியானார். சுகமஹா ரிஷி , சனகர் போன்ற சித்தி பெற்ற யோகிகள் முனிவர்கள், யோகிகள் பெயரின் பிரசாதத்தால்
ப்ரஹ்மானந்தத்தை அனுபவிக்கிறார்கள்.
நாரதர் பெயரின் பிரதாபத்தை
அறிந்திருக்கிறார்.
ஹரி வையகத்தில் அனைவராலும்
அன்பு செலுத்தப்படுபவர்,
நாரதருக்கு ஹரியும்
ஹரிநாமமும் பிரியமானவை.
பிரஹலாதனுக்கு எவ்வித ஆதரவும் இல்லை. ஆனால்
இறை நாமத்தை ஜபித்தே
பக்தர்களின் சிரோமணி ஆனார்..
துருவன் சின்னம்மாவின் கொடுமையால்
துன்பப்பட்டு ஸ்ரீ ஹரியின் பெயரை உச்சரித்து
ஜபித்து தருவ நக்ஷத்திரமாகி
திவ்ய இடத்தைப் பெற்றான்.
ஹனுமான் புனிதப் பெயரை
ஜபித்தே ராமரை தன்வயப்படுத்தினார்.
தாழ்ந்த அஜாமில், யானை , வேசி அனைவரும்
ராமநாமம் ஜபித்தே முக்தி பெற்றனர்.
கலியுகத்தில் ராம நாமம் கல்பக விருக்ஷம் போன்றது.
நலமளிக்கக் கூடியது.
அவரை தியானித்த துளசிதாசர்
அபின்போன்ர போதைச்செடியாக இருந்தவர்
புனித துளசிச் செடியானார்.
கலியுகத்தில் மட்டுமல்ல ,
நான்கு யுகங்களிலும் ,
முக்காலங்களிலும் ,
மூன்று லோகங்களிலும்
இறைவனின் பெயரை நாமத்தை ஜபித்தே
துன்பங்களில் இருந்து விடுபட்டனர்.
வேதங்கள் ,புராணங்கள்,
சாதுக்கள் அனைவரும் கூறுவது
அனைத்து புண்ணிய பலன்களும்
ராமநாமம் ஜபித்தால்
கிடைத்துவிடும் என்பதே
சத்ய யுகத்தில் தியானத்தினாலும் ,
திரேதா யுகத்தில் வேள்வியினாலும்
துவாபர யுகத்தில் பூஜை செய்வதாலும்
இறைவனருள் கிட்டியது. ஆனால்
கலியுகத்தில் பாவங்கள் மலிந்துள்ளது.
மனிதமனம் பாவக்கடலில் மீனாகி
நீந்துகிறது. அது பாவத்திலிருந்து
பிரிய விரும்பவில்லை.
ஆகையால் தியானம், யாகம் ,பூஜை செய்ய முடியாது.
No comments:
Post a Comment