Sunday, December 25, 2016

ராமசரித மானஸ்-பாலகாண்டம் --௧௯ பத்தொன்பது =துளசிதாசர்.

ராமசரித  மானஸ்-பாலகாண்டம் --௧௯ பத்தொன்பது =துளசிதாசர்.

        புண்ணியாத்மாக்கள் , சாதுக்கள்,
       ஸ்ரீ  ராமனின் குணங்களைப் புகழ்தல்   ஆகியவை
      விசித்திரமான நீர்வாழ் -பறவைகள்
      இந்த ராம சரோவரில்.
     சாதுக்கள் -சந்நியாசிகள்   போன்றோரின் சபையே
     நதியின் நாலபக்கங்களின் மாந்தோப்புகள்.
     சிரத்தையான  பக்தி  வசந்தகாலம்  என்று
      சொல்லப்பட்டிருக்கிறது.

      பலவித   பக்தியின்  நிருபணங்கள் ,
     மன்னிப்பு, தயை , புலனடக்கம்  இந்த  
     சரோவரில் (ஏரியில் )உள்ள   கோடி  
     மண்டபங்கள்.

     அதனுடைய  பூக்கள்  மனக்கட்டுப்பாடு,
      அஹிம்சை, வாய்மை , திருடாமை ,பிரம்மச்சரியம் ,
      சேர்த்துவைக்காமை  முதலியவை.
      காலைக்கடன் , திருப்தி, தவம், சுயபடிப்பு ,கடவுள்  தியானம்
     இவையும்  பூக்களே.
     இதன்  பலனாக  கிடைப்பது   ஞானம்.  

     வேதங்களில் சொல்லப்பட்டது ஹரியின்  சரணங்களில்  அன்பு
    காட்டுவது   ஞானப்பழத்தின்  ரசமாகும்.
     இந்த ராமசரித  மானசின்  சந்தர்பத்தில் கூறப்பட்ட
    துணைக்   கதைகள் கிளி , குயில்  போன்ற   வண்ணப்    பறவைகள்,

  கதையில்  வரும் திகில்   நிகழ்ச்சிகள்  தான்
    நந்தவனம், தோட்டம் மற்றும் வனம் ,

  மன மகிழ்ச்சி  என்பது   அழகான  பறவைகளின்  சஞ்சாரங்கள்.
 பரிசுத்தமான   மனம்  தான்  தோட்டக்காரன்.  மனம்  அன்பு  என்ற
  நீரால் அழகான கண்கள்  மூலமாக பாய்ச்சுகிறது.

   இந்த  ராமச்சரிததிரத்தை    மிகவும்
 
  எச்சரிக்கையுடன் பாடுபவர்கள்
   இந்த  ஏரியினகாவல் காரர்கள்.
  இந்த ராமகாதையை  கேட்கும்
  ஆண்களும்  பெண்களும்
  உத்தமமான   தேவதைகள்.

  இந்த  ராமகாதை  என்ற  ஏரியின்  அருகில் வராதவர்கள்
துஷ்டர்கள், போகிகள்,.துரதிர்ஷ்டசாலியான
கொக்குகள் ,காகங்கள் போன்றவர்கள்.
இங்கு நத்தைகள், தவளைகள் ,கடல்  பறவைகள்.
போன்ற  கதைகள் இல்லை.

ராமரின் அருளின்றி  இராமகதையை படிக்கமுடியாது.
அதனால்  காகம் ,கொக்கு  போன்ற கேளிக்கை விஷயப்பிரியர்கள்
இந்த கதையை ஏற்க மாட்டார்கள்.

பயங்கரமான  தீய சேர்க்கைதான்  , தீய  வழி.
அந்த தீய சேர்க்கைகளின்
 சொற்கள் புலி,சிங்கம்,மற்றும்  பாம்புகள்.

வீட்டு  வேலைகள், குடும்பஸ்தனின்
  வித-விதமான  கஷ்டங்கள்,
மிகவும்  ஏறிக் கடக்கமுடியாத
செல்லமுடியாத  மிகப்  பெரிய  மலைகள்.

ஆசைகள், மோகங்கள், மானம்  போன்றவை பயங்கரக்  காடுகள்.
பலவித  தீய  தர்க்கங்கள்  தான்  பயங்கரமான  நதிகள்.

சிரத்தை, சத்சங்கம் ,இறையன்பு   போன்றவை
இல்லாதவர்கள் இந்த இராமகதையை அறிய முடியாது.

மிகவும்  கஷ்டப்பட்டு அங்கு சென்றாலும் தூக்கம் வந்துவிடும்.
மனதில் முட்டாள் என்ற கடும் குளிர் வரத்துவங்கிவிடும்.
அங்கு சென்றாலும் அந்த அதிர்ஷ்டமில்லாதவன்
ராமர் கதை ஏரியில் குளிக்கமுடியாது.

அவன் அந்த  மானசரோவரில்
குளிக்கவோ குடிக்கவோ முடியாது.
அவன் கர்வத்துடன்  திரும்பிவிடுவான்.
 யாராவது அதைப்பற்றிகேட்டால் ,
அந்த இராமர்கதை என்ற ஏரியைத் திட்ட ஆரம்பித்துவிடுவான்.
   ராமரின் அழகான கிருபை என்றபார்வைக்கு ஆளானவர்கள்,
மிகவும்  மரியாதையுடன் இந்த கதை ஏரியில் குளிக்கிறான்.
பயங்கரமான மூன்று  தாபங்களில் எரியாமல் அருள் பெறுவான்.
    மனதில் ராமர்  மீது மிக அன்பு இருந்தால் ,
அவன்  ராமரை ஒருபொழுதும் விட்டுவிட மாட்டான்.
இந்த  ஏரியில் குளிக்கவிரும்பினால் ,
சத்சங்கத்தில்  ஈடுபடவேண்டும்.

  இப்படிப்பட்ட   ராமகதை என்ற ஏரியை
 இதயம் என்ற  கண்களால்  பார்த்து
அதில் மூழ்கியதால்  துளசிதாசர் என்ற
 கவியின் மனம் களங்கமற்றதாகியது.
இதயத்தில்  ஆனந்தமும் உற்சாகமும் நிரம்பியது.
அன்பு, ஆனந்தம் என்ற பிரவாஹம் பொங்கி  வழிந்தது.

 அதிலிருந்து இந்த அழகான  கவிதை என்ற  நதி புறப்பட்டது.
அதில் ராமரின் களங்கமற்ற  புகழ் என்ற நீர் நிறைத்தது.
இந்த  கவிதை என்ற  நதியின்  பெயர்  சர்யு.
அது  எல்லா மங்களகாரியங்களுக்கும்  வேர்.
மக்கள் கருத்தும் , வேதங்களின்  கருத்தும்
இதன்  இரண்டு  அழகான  கரைகள்.

இந்த அழகான  மானசரோவரின் கன்னி  சர்யு  நதி
மிகவும்   புனிதமானது.
கலியுகத்தின் சிறிய-பெரிய பாபங்களின் புல்-பூண்டு மற்றும்
மரங்களை  வேரோடு  பிடுங்கி எறியக்கூடியது.

No comments: