தீபாவளி தீயவை ஒழித்து
இருளில் ஒலிஔி பெற்று
புத்தாடை உடுத்தி மகிழும் நாள்.
இந் நன்நாளில் டாஸ்மாக்
அதாவது மதியிழக்கும் மதுக்கடை
பக்கம் பார்வை செல்லக்கூடாது.
மது அருந்தக்கூடாது
ஐம்புலன் அடக்கத்துடன்
மதுவிற்பனையை
மந்தமாக்கி நஷ்டமடையச்
செய்ய சபதம் எடுங்கள்
தீய வருமானம் வளர்ச்சியல்ல
நாட்டிற்கும் வீட்டிற்கும் தீமையே.
இந்த தீபாவளி மதுக்கடை முந்நூற்று அறுபது கோடி
இலக்கை டெபாசிட் இழக்கச் செய்ய
சபதம் எடுப்போம்.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
அரசல்ல .மக்கள் நினைத்தால்
மதுக்கடை பக்கம் செல்லாமல்
இருந்தால் போதும்
போராட்ட அரசியல் தேவையில்லை
இறைவன் நல்லறிவை தந்து மாயையை ஒழிக்கட்டும்.
No comments:
Post a Comment