இறைவனை நம்பினாலே தான் நிம்மதி.
ஆட்சியைக் கண்டால் ,அவர்கள் கொடுக்கும்
ஒப்பந்தகாரர்கள் போடும் சாலைகள்
இன்று வேளச்சேரி பிரதான சாலையில்
பல்லாங்குழி போல்
எத்தனை தடைவை அந்த சாலைகள்
மனசாட்சி இல்லை
இறைவனின் பயம் இல்லை --இருப்பினும்
ஆண்டவன் தண்டிப்பான் என்ற எண்ணம்
அதிலேதான் நிம்மதி.
பயணிகள் நிழற்கொடை அமரும் கற்கள்
காணவில்லை டைடல் பார்க் சாலையில்.
தெருவிளக்கு மாதக்கணக்கில் எரியவில்லை
என்றால் கண் காணித்து மாற்ற மின் ஊழியர்கள் இல்லை.
பொறியாளர் இல்லை.
நெறியாளரும் இல்லை .
நேர்மையாளரும் இல்லை.
நம் மன நிம்மதி ஆண்டவன் அருளுவான்.
கடைகளில் நாம் பொருள் வாங்க சென்றால்
வாகனங்கள் நிறுத்த வசதி செய்யவேண்டும்.
ஆனால் மால் பெரிது மால்வெட்டி கட்டியது
ஒருமணி நேரம் அவ்வளவு பெரியமால் வாகனக்கட்டணம்
முப்பது ரூபாய் .
எப்படியும் நூறுரூபாய் கட்டணம்.
போக்குவரத்துக்கு இடையூறு
நம் நிம்மதிக்கு சொல்ல வேண்டியது
ஆண்டவன் அருளுவான்.
பள்ளியில் அடாவடி ரசீது இல்லா நன்கொடை
நமக்கு நிம்மதி ஆண்டவன் அருளுவான்.
போக்குவரத்துக் காவலர் கைநீட்டி வாகனம் நிறுத்தி
சாவி எடுத்து ஓரங்கட்டி கையூட்டு வாங்கி
போக அனுமதித்தால் ஆண்டவன் அருள்.
இவ்வாறு ஒவ்வொரு அநீதிக்கும் நிம்மதி தர
ஆண்டவன் அருளுவான்.
வாழ்க இறையன்பு. அன்பே ஆண்டவன் .
2ஜி 3 ஜி ஊழலா ,
மாயாவா மமதாவா லாலுவா ஜெயாவா கருணாவா
தப்பிபதவியிலா எல்லாமே இறைவன் அருள்.
மன நிம்மதிக்கு மேலே இருப்பவன் நீதிபதியாக தண்டித்து
அருளுவான்.
இந்த எண்ணமே மனத்திற்கு நிம்மதி.
மருத்துவர் ,நகைக்கடை ,மெக்கானிக்
ஏமாந்தால் பூர்வ்ஜன்மக்கடன் என்பதே
ஆண்டவன் அருள் என்பதே.
மருத்துவர் ,நகைக்கடை ,மெக்கானிக்
ஏமாந்தால் பூர்வ்ஜன்மக்கடன் என்பதே
ஆண்டவன் அருள் என்பதே.
No comments:
Post a Comment