இறைவா!
இன்னலின்றி இப்புவியில்
வாழ்ந்தோருண்டா ?
இச்சைகள் அதிகமாக
ஈனச்செயல் அதன் காரணமாக
உள்ளத்தில் எண்ணங்களின்
சிற்றலைபேரலை
ஊக்கம் தரும் எண்ணங்கள்
உருப்படும் எண்ணங்கள்
உதவும் எண்ணங்கள்
உதவா எண்ணங்கள்
உதைபடும் எண்ணங்கள்
உயர்த்தும் எண்ணங்கள்
வெளியிடும் எண்ணங்கள்
வெளியிட முடியா எண்ணங்கள்
வறுமை எண்ணங்கள்
வளமை எண்ணங்கள்
வேற்று எண்ணங்கள்
வேறுபடுத்தும் எண்ணங்கள்
திருத்தும் எண்ணங்கள்
திருந்தா எண்ணங்கள்
தெளிவான எண்ணங்கள்
தெளிவற்ற எண்ணங்கள்
தையல் எண்ணங்கள்
தையலால் எண்ணங்கள்
கெஞ்சும் எண்ணங்கள்
கொஞ்சும் எண்ணங்கள் .
கொஞ்ச நகருங்கள்
கொஞ்சம் நகருங்கள்
கோப எண்ணங்கள்
கோபமூட்டும் எண்ணங்கள்
பொருளற்ற எண்ணங்கள்
பொருளுள்ள எண்ணங்கள்
பேரருள் எண்ணங்கள்
பேரிருள் எண்ணங்கள்
பேரிடர் எண்ணங்கள்
பேர் பெற எண்ணங்கள்
பேரழிக்கும் எண்ணங்கள்
பலி யாகும் எண்ணங்கள்
பழி வாங்கும் எண்ணங்கள்
புவி போற்றும் எண்ணங்கள்
புவி இகழும் எண்ணங்கள்
தகிக்கும் எண்ணங்கள்
தவிக்கும் எண்ணங்கள்
திக்கு முக்காடும் எண்ணங்கள்
திசை மாறும் எண்ணங்கள்
மயக்கும் எண்ணங்கள்
உயர்ந்த உவக்கும் பக்குவ எண்ணங்களை
உலகநாதா உவமை ஒப்புமை இல்லா
வல்லமை பெற்ற வாகீசா!
வளம் நலம் புகழ் பெறும் எண்ணங்கள் தா .
வலம் வரும் எண்ணம் வேண்டாம்
வசை தரும் எண்ணம் வேண்டாம் ,
வசை பாடும் எண்ணம் வேண்டாம்.
வையகம் காக்கும் வைத்யநாதா !
வையகம் புகழும் எண்ணங்கள் தா.
வறுமை ஒழியும் எண்ணங்கள் வேண்டும்.
வாழ்வில் ஆனந்தம் பிரம்மானந்தம் தரும்
எண்ணங்கள் வேண்டும்.
உன்னருள் வேண்டும்.
உத்தமர்கள் உறவுவேண்டும்..
உண்மையுடன் வாழ வேண்டும் .
ஊர் உலகம் போற்றவேண்டும்.
உடலும் உள்ளமும் ஆரோக்ய ஆனந்தம் அடைய வேண்டும்.
No comments:
Post a Comment