உலகைக் கண்டேன் ,
உண்மை அறிகிலேன்.காரணம்
உண்மை வெற்றி பெறுவதில் தாமதம் ;
ஊழல்கள் மரியாதையுடன் நடமாட்டம்.
பணமே வாழ்க்கை என்று
நேர்மை நியாயம் ஒழிக்கும் அழிக்கும் அரசு.
நீதி நியாயம் வழங்க இயலா நீதிமன்றம்.
நேர்மை மாவட்ட ஆட்சியாளர் நடவடிக்கை
எடுக்க முடியா நிலை;
கோடிக்கணக்கில் ஊழல் செய்யும் சாமியார்கள் ஆட்சியாளர்கள்
மனிதநேயமில்ல மதவாதிகள்,
இறைவன் எங்கே /?
இங்கேதான் என்ற நிலை
அநீதிக்கு உடன் தண்டனை இல்லையேல்
அறக்கடவுள் கர்ணவதம் போலாகுமே.
No comments:
Post a Comment