1. மங்களம் .
கரிமுகத்தோனே !
பரிதி இருளைப் போக்குவது போல் -உன்
தாமரைச் சரணங்களை துதிப்போரின்
தடைகளை போக்கும்
தேவ தேவனே! போற்றி ! போற்றி!
ஒவ்வொரு நற்காரியத்துவக்கத்தின்
நாயகனே!
கல்வித்துவக்கம் , திருமணம் ,புதுமனை புகுவிழா ,
போர் ,சங்கட காலங்களில்
உன்னை பல பெயர்களில்
போற்றி வழிபடுகின்றனர் .
ஏகதந்தன் என்றும் கபிலன் என்றும் ,
கஜகர்ணன் என்றும் லம்போதரன் என்றும் ,
விகடன் ,விக்னநாஷன் என்றும்
விநாயகன் ,தூம்ரகேது ,கணநாயகன் என்றும்
பாலச்சந்திரன் கஜானன் என்றும்
பன்னிரண்டு பெயர்களில் துதிப்போருக்கு
எவ்வித தடைகளும் வராமல் காப்பாய்.
வடமொழி
स जयति सिंधुरवदनो देवो यत्पादपंकजस्मरणम्।
वासरमणिरिव तमसां राशीन्नाशयति विघ्नानाम।। .
समुखश्चैकदंतश्च कपिलो गजकर्णकः।
लम्बोदरश्च विकटो विघ्ननाशो विनायकः।
धूम्रकेतुर्गणाध्यक्षो भालचन्द्रो गजाननः।
द्वादशैतानि नामानि यः पठेच्छृणुयादपि।
No comments:
Post a Comment