சிவ சிவ என்றால்
சித்தம் தெளியும்
சித்த சஞ்சலம் அழியும்.
வையக மாயை ஒழியும்.
அவனியின் ஆசை அடங்கும்
இச்சாசக்தி ஞானசக்தி க்ரியா சக்தி
முச்சக்தி முன் வந்து ஊக்கம் தரும்.
சிவ சிவ சிவ
சிவாய நமஹ
நமஹ சிவாய
நமச்சிவாய
நமச்சிவாய என்றாலே
நலம் பல கிட்டும்
நாளும் நலம் பெருகும்
நல்லெண்ணம் வரும்
அன்பு கிட்டும்
ஆதரவு பெருகும்.
ஆறுதல் கிடைக்கும்
ஆத்மசுகம் கிட்டும்
ஆத்ம பலம் பெருகும்.
ஆத்மா பரமாத்மா ஒன்றாகும்
பரமானந்தம் கிட்டும்
பரமசிவன் அருள் கிட்டும்
பாரினில் பிறந்த பிறவிப்பயன்
நமச்சிவாய நமச்சிவாய
என்ற நாம ஜபத்தால்
இன்மையில் நன்மை கிட்டும்.
இன்னலில் இன்பம் பெருகும்.
No comments:
Post a Comment