கந்தா கடம்பா கார்த்திகேயா
கலியுக வரதா.!
கருணைக்கடலே..!
காலை முதல் மாலை வரை
கந்தாகந்தா என்றால்
கண நேரத்தில் கருணைபுரிவான்
இன்னல் நீக்கி இன்பம் அளிப்பான்.
அன்பர்களுக்கு ஆனந்தமளிப்பான்.
எண்ணங்கள் யாவையும்
ஏற்றமளிக்கும்
உள்ளம் நிறைவடையும்
ஊக்கமும் ஒப்பில்லா உயரவுண்டாகும்
ஓம் முருகா ஓம் முருகா என்றால்
ஓளஷதமாகும்.
கந்தா கந்தா என்றால்
கரையில்லா மகிழ்ச்சி பொங்கும்
No comments:
Post a Comment