இறைவனை வழிபட மந்திரங்கள் அறியவில்லை?
பக்திப் பாடல்கள் பாட இனிமையான குரல்வளம் இல்லை.
சுலோகங்கள் தெரியாது. யாரும் கற்றுத்தரவில்லை.
கோயிலுக்கு சென்றால் கூட்டம் அதிகம்.தள்ளுமுள்ளு வேறு.
பலவித கட்டண முக்கியஸ்தர்கள் தரிசனத்தால் ,
காலதாமதம் வேறு.
இன்னும் பல காரணங்கள்.
இறைவன் வழிபட
அன்பு,சிரத்தை,பக்தி போதும்.
நமக்கு ஸ்தோத்திரங்கள் தெரியவில்லை.
நியமங்கள் தெரியாது.
நான் வழிபட ஒரு வழிகாட்டி தேவை .
நான் இருக்கும் பகுதியில் ஆலயமும் கிடையாது.
புரோகிதர்களும் கிடையாது.
எல்லாம் விதிப்படி நடக்கும்.
என்று அலுத்துக்கொள்பவர்கள் இருக்கிறார்கள்.
மந்திரங்கள் ,நியமங்கள் தெரிந்து ,வலைத்தளம் மூலம்
வழிபடுவோரும் உண்டு.
இப்பொழுது நாம் பக்தி வரலாற்றில்
நாம ஜபம் மட்டும் ஜபித்து புகழ்பெற்றவர்கள் பற்றி
சிந்தித்தால் நமக்கு இறைவனின் அருள் கிட்டும்.
கலியுகத்தில் அறிவியல் ஆட்சி.
தொழில் என்பது குலத்தொழில் என்று மாறி
அனைவரும் கல்வி என்ற உயர் நிலை.
இது சமுதாயப் புரட்சி.
வரவேற்கும் ஒன்று.
தொலைதூர வேலைவாய்ப்புகள்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்.
என்னதான் பிசி ஆக இருந்தாலும் ,
பொருளாதார தன்னிறைவு பெற்றாலும்
அறிவுத் திறன் அதிகமாக பெற்றாலும்
மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி
மனிதர்களை ஆட்டிப்படைப்பதை உணராதவர்கள்
உலகில் இருக்க முடியாது.
ஆகையால் இன்னல் வரும் போது
இறைவனை வழிபட நாம ஸ்மரணை போதும்.
இதை சித்தர்களும் ,பலவித ஆன்மீகப் பெரியவர்களும்
கூறிஉள்ளனர்.
இன்றும் இந்த நாம ஜபத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரன் ரத்னாகர் ,ஒருமுனிவரின்
ம ரா என்று உபதேசித்த இரண்டு எழுத்து ராமா என்ற
ராம ஜெபமாக மாறி, அவன் வால்மீகி முனிவராக
புகழ் பெற்றது ராமாயணம் எழதியது
அனைவரும் அறிந்த கதை.
இறைவன் அருளும் அதனால் மிகப் பெரிய சாதனைகள் செய்திட
இறை நாம ஜபம் போதும் என்பதே.
நாரத முனிவர் நாம ஸ்மரணை செய்பவர்.
துருவன் ,பிரஹ்லாதன் அனைவரும் நாம ஸ்மரணை செய்த பக்தர்கள்.
ரமண மஹர்ஷி 16 வயதில் மௌனமான சாதனை ஆரம்பித்தவர்.
துளசிதாசர் ராம நாம ஜெபத்தின் மகிமை கூறும்போது
"ரா" என்ற எழுத்து சொல்லும் போது பாபங்கள் வெளி ஏறி விடும்.
"ம் " சொல்லும் போது மீண்டும் பாபங்கள் வராது,
ராம்,ராம் என்றாலே இறைவனருள் கிட்டும் என்கிறார்.
புரந்தரதாசர் நாம மகிமை அறிந்து இறைவனின் கருணை பெற்ற பக்தர்.
இறைவனின் நாம ஜபம் உள்ளும் புறமும் ஒளி தரும்
என்பார் துளசிதாசர்.
கபீர் ராமநாமத்தை உச்சரிப்பதை மேன்மையாக கருதுபவர்.
அவர் ராமர் என்றாலே கடவுள் என்ற பொருள் கொண்டவர்.
அருணகிரிநாதர் இறைவனால் தடுத்தாட் கொண்டு
சும்மா இரு என்ற உபதேசம் பெற்று
ஐம்புலன்கள் அடக்கி தவம் செய்து
திருப்புகழ் அம்ருதம் படைத்தவர்.
நந்தனாரின் பக்தி.
மீரா ,ஆண்டாள் கண்ணப்பர் போன்றோர்
பக்திமட்டும் தெரிந்தவர்கள் . எனவே
நாம ஜபம் கலியுகத்தில் இன்னல்
களைந்து நன்மைதரும்.
அடுத்து அனைவரின் மனதிலும் எந்த இறைவனை வழிபடுவது?
ஓம் கணேசாய நமஹ என்பதா,முருகா என்பதா,சிவா என்பதா ,,ராமா என்பதா,,கிருஷ்ணா என்பதா,
அல்லா என்பதா,ஏசுவே என்பதா என்ற பல கேள்விகள் எழும்.
அதற்கு விடை தேசப்பிதா மகாத்மாவின் சுதந்திரப்போராட்ட பஜனை
இறைவன் ஒருவனே என்பது. ஈஸ்வர் அல்லா தேரே நாம் ,சப்கோ சன்மதி தே பகவான் என்பது.இதை கபீர்தாசர் வலியுறுத்துகிறார்.
ஹரிஜன் என்ற சொல்லை முதலில் பயன் படுத்தியதும் கபீர் தான்.
அனைவரும் ஹரியின் மக்கள் என்றார்.நாடும் சொத்தும் உயிரும் அளிப்பவர் இறைவன் என்றால் ,அந்த இறைவனை அளிப்பவர் ஹரிஜனம் என்பர்.
நீங்கள் எளிய முறையில் இறைவனின் நாமம் பெறலாம்.
முருகதாசன்,கண்ணதாசன், சக்தி தாசன் ,அம்பாள் அடியாள்,தொண்டரடிப்பொடியாழ்வார் ,
கருமாரிதாசன் ,காயத்திரி ஸ்வாமிகள்,எத்தனையோ அடியார்கள். ஹனுமத் தாசர்கள்,சாய் ராம்,அல்லா ,இயேசு.
இது எப்படி சாத்தியம்?
நீங்கள் நாம ஸ்மரணை அல்லது இறைவன் பிராத்தனை என்பதை ஆரம்பியுங்கள்.
ஒரு அதிர்வலை ஒரு குறிப்பிட்ட நாமம் ஜெபிக்கும் போது வரும். அதை உங்கள் ஆழ்மனம் உணரும்.
உருவமற்ற இறை உணர்வும் அதிர்வலையை உண்டாக்கும்.
அந்த நாமத்தை விடாது பற்றுங்கள்.
இது எப்படி சாத்தியம்?
அதுதான் பிரம்ம ரஹசியம்.
நீங்கள் சாய் பஜன் செல்கிறீர்கள்.
மாதா அம்ருதனந்தா கூட்டத்திற்கு செல்கிறீர்கள்.
ரவிசங்கர்,மேலும் பல புகழ் பெற்ற ஆஷ்ரமங்களுக்கு செல்கிறீர்கள்.
ஆனால் செல்பவர்கள் எல்லாம் அந்த அந்த இடத்தில் மனம் ஈடுபடாது.
ஒரு குறிப்பிட்ட வழிபாடு
உங்கள் மனத்தைக் கவரும்.
ஸ்வாமி விவேகானந்தர் நாத்திகத்திலிருந்து விடுபட்டு குருவைத் தேடி அலைந்தார்.குரு நல்ல சிஷ்யனை எதிர்பார்த்து காத்திருந்தார்.
ஸ்ரீ ராம கிருஷ்ணா பரமஹம்சரிடம் அவர் மனம் ஒன்றியது. இதுதான் ஆழ் மன உணர்வு.
அந்த உணர்வு ஏற்பட கலியுகத்தில்
இருக்குமிடம் போதும்.
கபீர் கூறுகிறார்-
ஜபமாலை கையில் ,
வாயின் உச்சரிப்போ இறைநாமம்.
மனமோ உலகியல் எண்ணங்களால் பத்து
திக்கும் அலை பாய்ந்துகொண்டே இருக்கிறது.
பல ஆண்டு,பல யுகம் கழிந்துவிட்டது.
இறைவனருள் கிட்டவில்லை.
உண்மை பக்தி,சிரத்தை,மன ஒருமைப்பாடு சேர்ந்ததே நாம ஜபம்.
நீண்ட பஜனைப்பாடல்
ராகம் ஆரோஹனம்,அவரோஹனம் என்று ஓடும்.
நாம ஜபம் அப்படி அல்ல.
அதை உறுதியாகப் பற்றி
நாம ஜபம் 45 நாட்கள் செய்து பாருங்கள்.
இறைவனை உணரும் பிரம்மானந்த உணர்வு வரும் ..
அதை வெளியில் வர்ணிக்க இயலாது.உணரத்தான் முடியும்.
உங்கள் எண்ணங்களில் ஒரு நிலைத்த தன்மை ஏற்படும்.
மன சஞ்சலம் ஏற்படாது.
இது தான் நாம ஜப மகிமை.
இந்த நாட்கள் வெற்றியாக அமையவும் ஒரு கருணை வேண்டும்.
ஜபித்துப்பாருங்கள். உணர்ந்து மெய்சிலிர்த்து கண்ணீர் மல்கி சாதனை செய்யுங்கள்.
அன்பே ஆண்டவன்.
கலியுகத்தில் ஆண்டவன் மூலம் நமக்கு அளித்த பணியை நேர்மையுடன் செய்தாலே இறைவன் அருள் கிட்டும். நம் பணியையே நேர்மையாக கடமை உணர்வுடன் செய்வதிலேயே சிக்கல்.
மாயை .சஞ்சலம்.
இதிலிருந்து விடுபட நாம ஜெபத்தில் ஈடுபடுங்கள்.
இரு கண்ணுக்குப் புலப்படாத துளிகளால் உருவாகிய சரீரம் இது.
.சிந்தித்துப்பாருங்கள்.
களிமண்ணால் செய்த /கல்லால் செய்த உருவம் அல்ல.
கண்ணுக்குத்தெரியா காதல் அணுக்களால்
ஆனசரீரம்.
அது இறைவனால் படைக்கப்பட்டது.
ஐயமில்லை.

2 comments:
விரிவான விளக்கங்கள்... நன்றி ஐயா...
நல்ல அருமையான கருத்துக்கள்!.. சிந்திக்க வைப்பவை!..
Post a Comment