Saturday, July 27, 2013

எல்லாம் சரிதான் அமைதி எங்கே?

இறைவன் இந்நில  உலகில்  இம்மையில் நன்மை அளிப்பவரே.

இறைவனின் அருள் பெற மந்திரங்கள்  தேவையா?

இன்றியமையா மந்திரங்கள் ,ஸ்தோத்திரங்கள் உண்டு -அவை

மறுப்பதற்கு இல்லை. அது ஏமாற்றத்திற்காகப் பயன்  படுத்தவரை;

அந்த மந்திரங்களே வணிக மூலதனமாகும் போது ,

சோம்பேறிகளும்,ஏமாற்று வாதிகளும் முளைத்து வளர்வது இயல்பே அன்றோ.

கிராமத்து அக்ரகாரங்கள் காணாமல் போகின்றன;
அங்கே சந்தியா வந்தனங்கள்  எங்கே என்றும் தேடும் நிலை.
சந்தியா மகளை அம்மா என்றால் பதவி கிடைக்கும்;
வந்தனங்களால்  வறுமை மிஞ்சும்  என ஏளனம். அதன் பலன்
வேதம் ஓதும் வேதியர்க்கு ஓர் மழை  இன்றி ,
வேதனை மிஞ்சும் வாழ்க்கை. இதை
கலியுக தர்மம் என்றே கூறுவோர். இந்நிலையிலும்
ஹோமத்தை மந்திரத்தை கேலி செய்தோர்  இன்று
ஆலயம் தோறும் அலையும் காட்சி;
யாகங்கள் ரகசியமாய் செய்யும் காட்சி.
சாயி பாதங்களில் விழுந்த காட்சி.
நாத்திகவாதம்  கண்ணதாசனாகி ,
அர்த்தமுள்ள ஹிந்துமதம் எழுதி,
கனகதார ஸ்தோத்திரம் தமிழில் வழங்கிய காட்சி,
கனகக் கலசங்களும் ,கொடிக்கம்பங்களும்
கனக ஆலயங்களும் பெருகும் காட்சி.
பக்தர்கள் கூட்டத்தால் ஆலயங்கள் பெருகி
வேதமந்திரங்கள் ,மந்திரகோஷங்கள் ,கோடி அர்ச்சனைகள்,
லக்ஷார்ச்சனைகள்  என  பெருகும் காட்சி.

எல்லாம் சரிதான்  அமைதி எங்கே?
மன நிறைவுதான் எங்கே? அது அங்கே ,
எங்கே உண்மை அன்பே அங்கே.






No comments: